கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 10 8

“மீனா அம்மா ஏன் வீட்டுக்குப் போயிட்டாங்க? நான் இங்க வர்றது அவங்களுக்குப் பிடிக்கலையா?”
“காலையிலேருந்து இங்கேதான் இருந்தாங்க; செல்வாவை ஜெனரல் ரூமுக்கு அனுப்பிச்சதும், நான் அண்ணனை பாத்துக்கிறேன், நீ வீட்டுக்கு போம்மான்னு நான் தான் நாலு மணிக்கு அவங்களை வீட்டுக்கு அனுப்பி வெச்சேன்; ராத்திரிக்கு வீட்டுல எல்லோருக்கும் சமையல் பண்ணனும் இல்லையா?” அப்பா ஆஃபீசுல, குமாரசுவாமின்னு, புதுசா ப்ராஞ்ச் மேனேஜர் ஜாயின் பண்ணியிருக்காராம். அப்பா அவரை இன்னைக்கு நம்ம வீட்டுக்கு டின்னருக்கு கூப்பிட்டு இருக்காராம். அம்மாவுக்கு என்னால முடிஞ்ச ஹெல்ப் பண்ணலாம்ன்னு நானும் கிளம்பறேன்.
“சுகன்யா, நீங்க அம்மாவைப் பத்தி கவலைப்படாம இருங்க; அவங்க உங்களை வெறுக்கலை; இது நிச்சயமா எனக்குத் தெரியும். உங்க மேலே ஏதோ இனம் புரியாத கோபம்; அது என்னன்னு தெளிவா சொல்ல மாட்டேங்கிறாங்க; செல்வா அவங்களுக்கு ரொம்ப ரொம்ப செல்லப்பிள்ளை; சின்னச் சின்ன விஷயங்களைக் கூட எங்கம்மாவை கேட்டு கேட்டு பண்ற என் அண்ணன், தன் கல்யாண விஷயத்தில, அவங்களை கேக்காம, அவனே தன் இஷ்டப்படி ஒரு பொண்ணைத் தேர்ந்தெடுத்து, இவளைத்தான் நான் கல்யாணம் பண்ணிப்பேன்னு தீர்மானமா சொல்றதை, அவங்க கனவுலேயும் நினைச்சு பாத்து இருக்க மாட்டாங்க; அண்ணனோட இந்த முடிவு அவங்களுக்கு ஒரு பெரிய அதிர்ச்சிதான். இந்த பிரச்சனையைத்தான் இப்ப நாங்க எங்க வீட்டுல ஃபேஸ் பண்றோம்.”
“நீங்க செல்வாவை எங்க அம்மா கிட்டேயிருந்து மொத்தமா பிடுங்கிகிட்டு போயிடுவீங்கன்னு பயப்படறாங்க; இது என்னோட அனுமானம்; அவங்க கொஞ்சம் ஆர்த்தோடக்ஸ் டைப்; அவங்களோடது ஸ்லைட்லி ட்ரெடிஷனல் அவுட்லுக்; கல்யாணத்துக்கு முன்னாடி ஃப்ரீயா ஆணும் பெண்ணும் பழகறது; ஓண்ணா சுத்தறது, டேட்டிங் இதெல்லாம் அவங்களால ஒத்துக்க முடியாத விஷயங்களா இருக்கு. இன்னைக்கு சாதாரணமாக சொசைட்டியில நடக்கற இந்த விஷயங்களை எடுத்து சொன்னாலும் புரிஞ்சுக்க மாட்டேங்கிறாங்க. மேரேஜ்க்கு முன்னாடி நீங்க ரெண்டு பேரும் கொஞ்சம் நெருக்கமா இருந்தீங்கன்னு செல்வா சொன்னதை எங்கம்மாவால ஜீரணிக்க முடியலை; அவங்க கோபத்துக்கு இது ஒரு காரணமா இருக்கலாம். இதுவும் என் அனுமானம்தான்.”
“ஆனா ஒண்ணு சொல்றேன் சுகன்யா; எங்கம்மா நல்லவங்க; உங்க கிட்ட பழகிட்டா உங்களுக்காக உயிரையே குடுப்பாங்க; அப்பப்ப கொஞ்சம் யோசிக்காம வெடுக்குன்னு பேசிடுவாங்க; நேத்துத்தான் நீங்களே பாத்தீங்களே; அப்புறம் அதை நினைச்சு நினைச்சு மனசுக்குள்ளேயே வருத்தப்படுவாங்க; தன்னையே திட்டிக்குவாங்க; என்னமோ ஒரு தயக்கம் உங்க கிட்ட; அது என்னன்னு புரியலை.”
“அப்பாவுக்கு உங்களை ரொம்ப பிடிச்சிப் போச்சு … அண்ணன் வீட்டுக்கு வந்ததும் நிதானமா, அம்மா கிட்ட உங்க கல்யாணத்தைப் பத்தி பேசனும்ன்னு காலையில எங்கிட்ட அப்பா சொல்லிக்கிட்டு இருந்தாரு. செல்வாதான் கொஞ்சம் டல்லா இருக்கான். அது இங்க நோயாளிகள் நடுவுல படுத்துக்கிட்டே இருக்கறதால இருக்கலாம். நீங்க அவன் கூட கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருந்தீங்கன்னா அவன் நார்மல் மூடுக்கு வந்துடுவான்னு நெனைக்கிறேன்.
“ தன் குரலைத் தாழ்த்திக் கொண்டு பேசிய மீனா, சுகன்யாவின் கையை மென்மையாக அழுத்தி புன்னகைத்தாள்.
“தேங்க்ஸ் மீனா! உங்கிட்ட பேசினதுல என் மனசுல இருந்து ஒரு பெரிய பாரம் இறங்கின மாதிரி இருக்கு. உன்னை என்னோட ஒரு நல்ல சினேகிதியா, என் மனசுல இருக்கற பிரச்சனைகளை உங்கிட்ட சொல்லாம்ன்னு நினைக்கறேன்.
“ சுகன்யாவின் குரலிலும், மனதிலும் ஒரு நிம்மதி வெளிப்படையாகத் தெரிந்தது. இவ என்னை விட மூணு நாலு வருஷம் வயசுல சின்னவளா இருப்பாளா? செல்வாவுக்கு நேர் மாறா இப்போதைய எங்கப் பிராப்ளத்தை என்னமா ஆராய்ஞ்சு தெளிவா பேசறா? அவள் தன் மனதுக்குள் வியந்தாள்.”
“செல்வா … சீனு சொல்ற மாதிரி நீ ஏன் உம்முன்னு இருக்கே?” செல்வா படுத்துக் கொண்டிருக்க அவனருகில் ஒரு ஸ்டூலில் சுகன்யா அமர்ந்து அவன் வலது கையை தன் கையால் வருடிக் கொண்டிருந்தாள். அறைக்கதவு தாளிடப்படாமல் அழுத்தமாக மூடி வைக்கப்பட்டிருந்தது.
“தெரியலைடி”