கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 10 8

“உனக்குத்தான் சீரியஸா ஒண்ணுமில்லேன்னு சொல்லிட்டாங்களே; அப்புறம் நீ எதை நினைச்சு பயப்படறே?” அவன் கையை எடுத்து தன் கன்னத்தில் வைத்துக்கொண்டாள்.
“ரொம்ப தேங்ஸ்டி செல்லம்.” அவன் குரல் தழுதழுப்பாக வந்தது.
“எதுக்கு நீ இப்ப எமோஷனல் ஆவறே?”
“சீனு சொன்னதை கேட்டதும் என் மனசு நெறைஞ்சுப் போச்சு. நான் உனக்கு ரொம்ப கடன் பட்டிருக்கேன்டி செல்லம்; அவ்வளவு பணம் நீ கையில வெச்சிக்கிட்டிருந்தியா?” அவன் அவள் கன்னத்தை வருடிக்கொண்டிருந்தான்.
“ஆஃப்டர் ஆல் இந்த பணம் ஒரு பெரிய விஷயமே இல்லை?” யாருக்குத் தெரியும், நான் எப்பவோ உனக்கு பட்ட கடனை இப்ப திருப்பி குடுக்கறேனோ என்னவோ? உங்கம்மா என்னை ஒதுக்கப் பார்த்தாலும் உன்னை விடாம உன் பின்னாடி சுத்தி சுத்தி வரேன். . நான் பணம் கட்டணும் சொன்னதும், என் மாமாதான் அவரோட டெபிட் கார்டு மூலமா உடனடியா பணம் கட்டினார்.

“எனக்கு உன் ரத்தத்தை குடுத்தியாமேடி? நான் வீட்டுக்கு போன உடனே அந்தப் பணத்தை உங்க மாமாவுக்கு திருப்பி குடுத்துடறேன்.”
“சொன்னா கேளு செல்வா. சும்மா பொலம்பாதே. நான் என் உயிரையே உனக்கு குடுக்கத் தயாரா இருக்கேண்டா. இந்த மாதிரி எனக்கு ஆயிருந்தா, நீ இதெல்லாம் எனக்கு பண்ணியிருக்க மாட்டியா? என்னை எதுக்கு நீ பிரிச்சுப் பார்க்கிறே?”
“பண்ணியிருப்பேன் சுகன்யா. ஆனா, நீ சொன்ன மாதிரி நான் வழ வழா கொழ கொழான்னு கொஞ்ச நேரம் திகைச்சு நின்னுட்டு, அப்புறமா பண்ணியிருப்பேன்; உன்னை மாதிரி டக்குன்னு ஒரு முடிவுக்கு வந்து இருக்கமாட்டேன்.” சுகன்யாவின் கன்னத்தில் படிந்திருந்த தன் கை விரலால் அவள் உதட்டை வருடத் தொடங்கினான் அவன்.

“சாரிடா செல்வா; அன்றைக்கு உன்ன நான் இந்த மாதிரி அவசரப்பட்டு பேசியிருக்கக்கூடாது; நான் பேசினதையெல்லாம் உன் மனசுல வெச்சுக்காதப்பா. அவள் தன் கண்களில் கெஞ்சலுடன் பேசியவள் அவன் ஆள் காட்டி விரலை மென்மையாக கடித்தாள்.
“நீ அப்படி பேசினதுக்கு இப்ப பெனல்டி குடுத்துத்தான் ஆகணும்” அவன் புன்னகையுடன் பேசினான்.
“அப்ப்ப்பாடா … கடைசியா சிரிச்சிட்டியா?” இப்படி நீ சிரிச்சுக்கிட்டே இருந்தா, நீ கேக்கற பெனல்டியை நான் குடுக்கத் தயார்” அவள் தன் கண்ணை சிமிட்டினாள்.
“அப்ப சீக்கிரமா குடு.” அவன் கண்களில் விஷமம் தவழ்ந்தது.
“எனக்கென்னத் தெரியும் … பெனல்டி என்னான்னு?”
“நான் என்ன கேப்பேன்னு நிஜம்மா உனக்குத் தெரியாதா?” அவன் கண்கள் அவள் மார்பின் மேல் நிதானமாக சென்று படிந்தது.
“செல்வா, நீ இப்ப எங்கிட்ட ஒதை வாங்கப்போறே? கண்ட எடத்துல, கண்ணா பின்னான்னு உன் கண்ணு மேயுது,” அவள் தன் துப்பட்டாவை சரி செய்து கொண்டாள்.
“சுகு” பெக்கர்ஸ் ஆர் நாட் சூசர்ஸ்” நீ கேள்வி பட்டதில்லையா?”
“ஏய் … என்னப் பேசறப்பா நீ” அவள் தான் உட்க்கார்ந்திருந்த ஸ்டூலை கட்டிலின் புறம் நகர்த்திக்கொண்டாள்.
“அன்னைக்கு கூட உன் ரூமுல நீயாதான் என்னைக் கூப்பிட்டு குடுத்தே. அது மாதிரி இப்ப என்னக் குடுக்கணும்ன்னு தோணுதோ அதை குடு. நான் சந்தோஷமா வாங்கிக்கிறேன்.” செல்வா அவளை ஆசையுடன் தன் கண்களால் விழுங்கிவிடுவது போலப் பார்த்தான்.
“கொஞ்சம் கிட்ட வாயேன்” தன் இடது கையால் அவன் முகத்தை தன் புறம் திருப்பிய சுகன்யா, ரெண்டு நாள் தாடியுடன் இருந்த அவன் கன்னத்தில், தன் கன்னத்தைத் தேய்த்தாள். அவன் இரு கன்னங்களிலும் தன் உதடுகளை அவசர அவசரமாக ஒற்றியெடுத்தாள்.