கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 10 8

“செல்வா, ஒரு பயந்தாங்கொள்ளி, எங்கம்மா நம்ம மேரேஜ்க்கு சம்மதம் குடுப்பாங்களான்னு எனக்கு சந்தேகமாயிருக்கு; அவங்க மாட்டேன்னுடா என்னப் பண்றதுன்னு என்னை இன்னைக்கு கலக்கமா கேட்டான்; நான் சொன்னேன் உங்கம்மாவை நீ தான் சரிகட்டணும் … இல்லன்னா நீ என் வீட்டுக்கு வந்திடு, மத்ததை நான் பாத்துக்கறேன்னு ஜம்பமா சொல்லிட்டு வந்துட்டேன். இப்ப பயமா இருக்கும்மா. இப்படியே நாளைத் தள்ளறதுக்கு எனக்கு இஷ்டமில்லேம்மா. நான் அவன் கிட்ட சொன்னதுல ஒண்ணும் தப்பில்லையேம்ம்மா? அவன் நம்ம வீட்டுக்கு வந்துட்டா; மாமவும் நீயும் ஒண்ணும் சொல்ல மாட்டீங்களே? சுகன்யா தயங்கி தயங்கிப் பேசினாள்.
“அந்த சாவித்திரி இன்னைக்கு செல்வாவை பார்க்க வந்தா; அவ போறப்பா சொல்றா –
“செல்வா உன் கிட்ட நான் தனியா பேசணும்ன்னுட்டு” – அவ வேற எதைப் பத்தி பேசுவா? எனக்குத் தெரியாதா? திருப்பி திருப்பி அவ பொண்ணைப் பத்தி அவன் கிட்ட பேசி எங்க நடுவுல குழப்பத்தை உண்டு பண்ணப் பாக்கிறான்னு நினைக்கிறேன்?”
“சுகா நீ கொஞ்சம் பொறுமையா இரு; உன் எதிர்லதானே எங்ககிட்ட உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு அன்னிக்கு ஆஸ்பத்திரியிலே செல்வா சொன்னான் இல்லியா?”
“ஆமாம்”
“நடராஜனும், உன் மாமா கிட்ட ரெண்டு வாரம் கழிச்சு பேசறேன்னு சொன்னாரா இல்லையா? தன் பொண்டாட்டிகிட்டவும் பேசறேன்னு இப்ப சொல்றாரா இல்லையா?
“ம்ம்ம்ம்”
“பின்னே நீ ஏன் இப்ப நடுவுல குழம்பறே … ? நாங்க சீன்ல வந்தாச்சு இல்லயா? பெரியவங்க நாங்க பேசி ஒரு முடிவுக்கு வர வரைக்கும் சும்மாயில்லாம நீ ஏன் நடுவுல எல்லாத்தையும் தூக்கி உன் தலையில போட்டுக்கிட்டு குதிக்கறே?”
“…….”
“நான் சொல்றதை ஒழுங்கா கேளு … உன் மாமாகிட்ட சொன்ன மாதிரி பத்து நாள் நீ லீவு போட்டுட்டு என் கூட ஊருக்கு வா … அங்க வந்து நிம்மதியா இரு; உன் மனசு அலைபாயறதும் குறையும். இப்ப அவனுக்கு சீரியஸா ஒண்ணுமில்லைன்னு டாக்டருங்க சொல்லிட்டாங்க; சும்மா சும்மா தினம் அவனைப் பாக்கறதுக்கு போவாதே. அவன் கிட்ட போன்ல தேவைக்கு மேல தொணதொணன்னு பேசிக்கிட்டு இருக்காதே. பழகப் பழகப் பாலும் புளிக்கும்டி கண்ணு; நான் சொல்றதை புரிஞ்சுக்கோ; அவனை பாத்துக்கறதுக்கு அவனைப் பெத்தவங்க இருக்காங்க.”

“ம்ம்ம் …”
“தினம் தினம் நீ அங்க போய் அவன் எதிர்ல எதுக்கு நிக்கணும்? அந்த சாவித்திரி மாதிரி நாலு பேரு அவன் உறவு காரங்க ஆஸ்பத்திரிக்கு அவனைப் பாக்க வருவாங்க; உன் கூட வேலை செய்யறவங்க வரலாம்; உன்னைப் பத்தி நாலு பேர் நாலு விதமா பேசத்தான் செய்வாங்க. நீ இதையெல்லாம் தடுத்து நிறுத்த முடியாது? அப்புறம் உன் மேல, எங்க மேலே அந்த நடராஜனுக்கு இருக்கிற மரியாதைதான் கெட்டுப்போகும். கல்யாணத்துக்கு முன்னாடி கையளவு தூரத்துல நீ தள்ளி நிக்கணும்.”
“செல்வா கிட்ட சும்மா மூச்சுக்கு முன்னூறு தரம் பேசி பேசி அவனையும் குழப்பாதே, நீயும் குழம்பாதே; அவன் அவ அம்மாளை விட்டுக்கொடுக்கிறானா? உண்மையிலேயே உனக்கு அவன் மேல ஆசை இருக்கற மாதிரி, அவனுக்கு உன் மேல ஆசை இருந்தா, ஆத்தாளை விட்டுட்டு அவன் உன்னைத் தேடிக்கிட்டு நம்ம ஊருக்கு வரட்டும். அப்ப பாத்துக்கலாம் அந்த கதையை.”
“உண்மையா என்னை கட்டிக்கணுங்கற ஆசை இருக்கவே தானே உன் அப்பன் என் பின்னால வந்தான். சொல்லுடி … வந்தானா இல்லையா?”
“ம்ம்ம்”