கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 10 8

“நான் அவனுக்கு எந்த குறையும் வெக்கல. வந்ததுக்கு அப்புறம் அவன் குடிக்க கத்துக்கிட்டு கெட்டு குட்டி சுவரா போனான். அது வேற விஷயம். திருத்தப் பாத்தேன். முடியலை. அடிச்சி வெரட்டினேன். அதுக்கு மேல நான் என்னப் பண்ணமுடியும்? இவன் எங்கப் போயிடப் போறான்? இன்னைக்கு நான் சொல்றேன். இதை நீ எழுதி வெச்சுக்கோ – இவன் உன்னை விட்டுட்டு எங்கேயும் போகமாட்டான்; அவனுக்கு அவன் அப்பா அம்மா இருக்கற மாதிரி, உனக்கு நாங்க இருக்கோம் இல்லையா? எங்கக்கிட்ட நீ சொல்லிட்டேல்ல; இனிமே நாங்க பாத்து எல்லாத்தையும் நல்லபடியா செய்து முடிக்கிறவரைக்கும் பொத்திக்கிட்டு இரு. நீயா உள்ள பூந்து எதாவது குட்டையை குழப்பினே எனக்கு கெட்ட கோவம் வரும் புரியுதா?” குரலில் கோபத்தை காட்டுவது போல பேசினாலும் மனதில் ஒரு தீர்மானத்துடன் பேசினாள்.
“சரிம்மா … என்னை எதுக்கு இப்ப கோச்சிக்கறே … நான் அப்படி என்னா பண்ணிட்டேன்?”அவள் சிணுங்கினாள். அம்மாவை விட்டு தள்ளிப் படுத்துக்கொண்டாள். தன் கையைத் தள்ளிவிட்டு தன்னை விட்டு நகர்ந்து படுத்துக்கொண்ட தன் பெண்ணை நினைத்து மனதுக்குள் சிரித்துக்கொண்டாள் சுந்தரி.
“உன் மேல எனக்கு என்னடா கோபம் … நீ நல்லா இருக்கணும்ன்னு தான் சொல்றேண்டா; பேசாம இப்ப தூங்கு” பக்கத்தில் படுத்திருந்த சுகன்யாவின் முதுகை சுந்தரி ஆதரவாக தடவிக் கொடுத்தாள்.
“மல்லிகா மேடம், சாப்பாடு பிரமாதம். மரியாதை நிமித்தமா நான் சொல்லலை. நிஜமா சொல்றேன், நான் இந்த மாதிரி வாய்க்கு ருசியா நம்ம ஊர் சாப்பாடு சாப்பிட்டு ரொம்ப காலமாச்சு.” மிளகு ரசத்தை மீண்டும் ஒரு முறை கப்பில் வாங்கிக் குடித்தவர்,
“நடராஜன் ரொம்ப ரொம்பத் தேங்க்ஸ்; நான் பொறாமைபடறேன்னு நீங்க நினைக்கக்கூடாது. இப்படி ஒரு அன்பான மனைவி கையால ருசியா தினம் தினம் அருமையான சாப்பாடு சாப்பிடறதுக்கு நீங்க குடுத்து வெச்சிருக்கனும்.” குமாரசுவாமி, மல்லிகா பரிமாறிய இரவு உணவை மிகவும் நிதானமாக ரசித்து, ருசித்து சாப்பிட்டார். சாப்பிட்டவர் முழு மனநிறைவுடன் மீண்டும் மல்லிகாவை பாராட்டினார்.
“என்ன சார் இப்படி சொல்றீங்க, என் மனைவியை பாராட்டனுங்கறதுக்காக உங்க மனைவியை நீங்க சும்மா குறைச்சு சொல்லக்கூடாது. நீங்க நார்த்ல ரொம்ப நாளா இருந்துட்டு வந்திருக்கீங்க; அது உண்மைதான்; ஆனா உங்க மனைவியும் சவுத் இண்டியன்தானே? அவங்களும் நல்லா சமைக்கறவங்களாத்தானே இருப்பாங்க?” நடராஜன் பதிலுக்கு பேசினார்.
“சார், இவர் திடீர்ன்னு போன் பண்ணி நீங்க சாப்பிட வர்றதாச் சொன்னார்; நானும் ஏதோ அவசர அவசரமா அரக்க பரக்க பண்ணியிருக்கேன். என் பொண்ணு இன்னைக்கு மனசு வந்து ஏதோ தன் கையை காலை கொஞ்சம் ஆட்டிட்டா; நானும் அவளை கூட வெச்சிக்கிட்டு ஏதோ கொதிக்க வெச்சு இறக்கிட்டேன் … நீங்க என்னை ரொம்ப புகழறீங்க … உங்க வீட்டுல உங்க மனைவி இத்தனை காலத்துல நார்த் இண்டியன் டிஷஸஸ் நல்லா பண்ணக் கத்துகிட்டு இருப்பாங்களே? இப்ப நீங்க தனியா இங்க வந்திருக்கறாதா இவர் சொன்னார்; அவங்க ஊர்லேருந்து வந்ததும் அவங்களையும் நீங்க நம்ம வீட்டுக்கு அழைச்சிக்கிட்டு வரணும். இன்னொரு நாள் பகல்ல ரெண்டு பேருமா வந்து ஆற அமர உக்கார்ந்து சாப்பிடணும்.” மல்லிகா அவரை உபசாரம் செய்தாள்.
“மேடம் முதல்ல நீங்க என்னை மன்னிக்கணும். எனக்கு உங்க பிள்ளை அடிபட்டு ஹாஸ்பெட்டல்ல இருக்கறது தெரியாது. நடராஜன் சார் இதை எங்கிட்ட சொல்லவே இல்லை. இங்க வந்ததுக்கு அப்புறம்தான் எனக்கு இந்த விஷயம் தெரியவந்தது. நான் ரொம்ப கில்ட்டியா ஃபீல் பண்ணிக்கிட்டிருக்கேன். எனக்கு இந்த விஷயம் தெரிஞ்சிருந்தா நான் இங்கே வந்தே இருக்க மாட்டேன். உங்களுக்கு நான் ரொம்ப கஷ்டம் கொடுத்துட்டேன்.” அவர் கெஞ்சலாக பேசிக்கொண்டு, மீனா எடுத்து கொடுத்த டவலால் தன் வாயையும் கையையும் துடைத்துக்கொண்டார்.

“சார் நீங்க அப்படியெல்லாம் சொல்லக்கூடாது. இப்ப என் பிள்ளைக்கு உடம்பு பரவாயில்லை. என் பொண்ணும், வைப்ஃபும் இன்னைக்கு முழு நாள் அங்கதான் இருந்தாங்க. அவன் ஜெனரல் வார்டுல தனி ரூமுக்கு ஷிப்ட் ஆயிட்டான். அவன் தனியா இல்லை. இப்ப என் பையனோட க்ளோஸ் ஃப்ரெண்ட் அவன் கூட இருக்கான். ரெண்டு நாளா ராத்திரி நாங்க வீட்டுலத்தான் சாப்பிடறோம். மூன்று பேருக்கு இவங்க எப்படியிருந்தாலும் சமைக்கத்தான் போறாங்க, அதுல உங்களுக்குன்னு ஸ்பெஷலா ஒண்ணும் பண்ணிடலை.” என்றார் நடராஜன்.
“நான் உண்மையாத்தான் சொல்றேன் மேடம் … இந்த மாதிரி ஒரு ருசியான சாப்பாடு, பாத்து பாத்து கேட்டு கேட்டு எடுத்துப் பரிமாறின உங்க பொண்னோட அன்பான உபசரிப்பு ; இதையெல்லாம் நான் அனுபவிச்சு ரொம்ப நாளாயிடுச்சி; நீங்க சொல்ற மாதிரி என் மனைவியும் மிக மிக அருமையா சமைப்பாங்க; ஆனா அன்பார்ச்சுனேட்லி, அவங்களும் நானும் நீண்ட காலம் ஒண்ணா சேர்ந்து வாழல; அவங்களும் நானும் ஒருத்தரை ஒருத்தர் விட்டு பிரிஞ்சு ரொம்ப நாளாயிடுச்சு.” அவர் சில வினாடிகள் வேகமாக ஓடிக்கொண்டிருந்த சீலிங் பேனை அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தார். பழைய நினைவுகளில் அவர் மனது ஆழ்ந்திருக்கவேண்டாம். எப்போதும் புன்னகையுடன் இருக்கும் அவர் முகத்தில் விரக்தியோடியிருந்தது. திடிரென அங்கு அவர்களுக்கிடையில் ஒரு இறுக்கமான மவுனம் நிலவியது.
“ஐயாம் சாரி சார்” … உங்க மனசை நான் புண்படுத்திட்டேனா எதையாவது சொல்லி … அயாம் வெரி வெரி சாரி, மல்லிகா பதறியவாறு அவரிடம் மன்னிப்பு கோரும் தொனியில் பேசியவள் தன் கைகளை பிசைந்து கொண்டாள்.
“நோ … நோ … மிஸஸ் நடராஜன் … இது ரொம்ப நாளுக்கு முன்னாடி என் வாழ்க்கையில நடந்து முடிஞ்ச விஷயம் … இதுக்காக நீங்க வருத்தப்படவேண்டிய அவசியமேயில்லை.” அவர் தன் தோள்களை குலுக்கிக்கொண்டார்.
“அச்சா, மிஸ்டர் நடராஜன், நாளைக்கு மாலையும் நீங்க உங்க நேரத்தை எனக்காக கொஞ்சம் ஒதுக்கணும்; நான் உங்க பையனை பாக்க விரும்பறேன். உங்களுக்குத் தேவைன்னா நீங்க தாராளாம இந்த வாரம் லீவ் எடுத்துக்கலாம். நீங்க எல்லோரும் உங்க மாலை நேரத்தை எனக்காக ஒதுக்கினதுக்காக ரொம்ப நன்றி … நடராஜன் நான் கிளம்பறேன். ப்ராஞ்ச்லேருந்து கிளம்பறதுக்கு முன்னாடி நாளை நான் உங்களுக்கு போன் பண்றேன்; சென்னை எனக்கு புதிது அல்ல. நம்ம கெஸ்ட் ஹவுஸுக்கு நான் தனியா போயிடுவேன் – நீங்க என்னை டிராப் பண்ண இப்ப என் கூட வரணும்ன்னு அவசியமில்லே; நீங்க ரெஸ்ட் எடுங்க.”