கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 10 8

“சரி” ன்னு தலையாட்டட்டும்; உன் கல்யாணத்தை நல்ல படியா உன் மனசுக்கு திருப்தியா ஜாம் ஜாம்ன்னு நான் செய்து வெக்கிறேண்டி; எனக்கு உன் மனசு திருப்திதாண்டி முக்கியம். ரெண்டு ஜோடி வளையல் செய்து வெச்சிருக்கேன், ரெண்டு மோதிரம் உனக்குன்னு இருக்கு; ஒரு தாம்பு கயிறு செயின் பண்ணி வெச்சிருக்கேன். என் தம்பியும் கொஞ்சம் காசா உனக்குன்னு வாங்கி வெச்சிருக்கான். உன் மனசுக்கு பிடிச்ச மாதிரி வேற எது வேணுமோ செய்துக்கலாம்.. காதுக்கு உனக்கு புடிச்ச மாடலா நீயா பாத்து எதாவது வாங்கிக்கோ; இதுக்கெல்லாம் நான் பணம் குடுக்கறேன். நான் சொன்ன அயிட்டமெல்லாம் பத்திரமா பேங்க் லாக்கர்ல இருக்கு.”
“என் அப்பன் ஆத்தா போய் சேர்ந்தப்ப, அவங்க விட்டுட்டு போன வீட்டை ரிப்பேர் பண்ணி வாடகைக்கு விட்டு இருக்கு; உன் மாமன் அதுல வர வாடகையையும் உன் பேர்லதான் பேங்க்ல போட்டுக்கிட்டு இருக்கான். உன் பாட்டியோட பழைய நகையை எனக்கு குடுத்தான். உங்கப்பனை காதலிச்சுக் கட்டிக்கிட்டேன்னு என் மேல அவ்வளவு கோவமா இருந்து செத்தா என் ஆத்தாக்காரி. இப்பவாது வந்து என் கூட இருன்னு எங்கப்பனை கூப்பிட்டேன். அவன் என் பொண்டாட்டி இருந்த வீட்டை விட்டுட்டு வரமாட்டேன்னு புடிவாதன் புடிச்சான். அவன் அவளையே நெனைச்சுக்கிட்டு, அவ துக்கத்துலேயே இருந்து ஆறுமாசத்துல அவனும் போய் சேர்ந்தான்.
“நான் உன்னை குழந்தையா வெச்சுக்கிட்டு கஷ்டப்பட்டப்ப என்னை ஒரு தரம் வந்து பாத்தாளா அவ? கல்லு மனசு அவளுக்கு. அவளுக்கு இருந்த ரோஷம் எனக்கில்லையா? அவ பெத்த பொண்ணுதானே நான்? அவ நகையை நான் எதுக்கு போட்டுக்கிட்டு மினுக்கணும்?” சுந்தரியின் குரல் கரகரப்பாக வந்தது.
“யம்மா … ஆயாவை ஏம்மா திட்டறே … அவங்க ரெண்டு பேரும் என் கிட்ட எப்பவும் ஆசையாத்தான் இருந்தாங்க … வீட்டுக்கு வாம்மான்னு ஆசையா கூப்பிடுவாங்க.”
“நீ ஸ்கூலுக்கு போவும் போது ஒளிஞ்சுகிட்டு நின்னு உன்னையே பாத்துகிட்டு நின்ன கதையெல்லாம் எனக்குத் தெரியாதுன்னு நினைச்சுக்கிட்டு இருக்கியா? நீயும் அவங்க வாங்கிக் குடுக்கற சாக்லெட்டை மொத்தமா திண்ணுட்டு வீட்டுக்கு வந்து திருட்டுத்தனம் பண்ணதெல்லாம் எனக்கும் தெரியும்.” சுந்தரி மூக்கை உறிஞ்சினாள்; தன் கண்ணைத் துடைத்துக்கொண்டாள்.
“அம்மா அழுவாதேம்ம்மா … எனக்கும் அவங்களை நினைச்சா அழுகை வருதும்மா” சுகன்யா அவள் தலையைத் தடவினாள்.
“நான் சம்பாதிக்கிறேன். வேலையை விட்டாலும் எனக்கு பென்ஷன் வரும். அவங்க சொத்தே எனக்கு எதுவும் வேணாம்ன்னு உன் மாமன் கிட்ட தீத்து சொல்லிட்டேன். அந்த வீட்டை என் தம்பி உனக்குதான்னு இப்பவே எழுதி வெச்சிட்டான். நீ எப்ப வேணா பத்து நாள் லீவு எடுத்துக்கிட்டு வா; உன் பேர்ல அந்த வீட்டை மாத்திக்கோ; அவனுக்கும் உன்னை விட்டா வேற யாரு இருக்காங்க? புத்தி கெட்டவன் எனக்காக வாழறானாம்; இப்படி வாழ்க்கையில ஒத்தையாவே இருந்துட்டான்.”
“இத்தனை நாளா இல்லாம இப்ப எதுக்கு நீ எங்கிட்ட என் குடும்ப கணக்கை கேக்கிற?”
“அம்மா … ஏம்மா நீ என்னை தப்பா நினைக்கிறே? நான் கண்க்கு கேக்கலைம்ம்மா … மாமா என்னை கேட்டார் … உனக்கு என்ன மாதிரி நகை வேணும்ன்னு நான் போன தரம் ஊருக்கு வந்தப்ப கேட்டாரு … நான் உன்னை கேளுன்னு சொல்லிட்டு வந்தேன்?
“சரிடி … உண்மையைச் சொல்லு; அந்த பையன் செல்வா உன்னை எதாவது கேட்டானா? இல்லை அவன் தங்கச்சி மீனா கேட்டாளா? என் புருஷன் என் கூட இல்லேன்னு தெரிஞ்சதும், அந்த மல்லிகா உன்னை ஒண்ணுமில்லாத ஓட்டாண்டின்னு நெனைச்சுக்கிட்டு இருக்கா போல இருக்கு; நீ சொல்ற அந்த சாவித்திரி பேச்சைக் கேட்டுக்கிட்டு குதிக்கிறான்னு நினைக்கிறேன். அந்த மல்லிகா கிட்ட ஜாடை மாடையா சொல்லி வை; நான் ஒண்ணும் பஞ்சையோ பராரியோ இல்லை. எங்க குடும்பமும் மரியாதையுள்ள குடும்பம்தான். என் கிட்டயும் சொத்து சுகம் எல்லாம் இருக்குன்னு தலையை நிமிர்த்தி சொல்லு! நீ யாருக்கும் குறைஞ்சு போயிடலடி இங்க.”
“சுகா, உன் அப்பன் உன் கூட இல்லாத குறையைத் தவிர வேற எந்த குறையும் உனக்கு இல்லடி … என் கூட வேலை செய்யற ரெண்டு பேரு எப்ப எப்பன்னு காத்துகிட்டு இருக்காளுங்க; என்னை தினமும் நச்சரிக்கறாளுங்க; உன்னை அவங்க புள்ளைக்கு கட்டிக்கறோம்ன்னு. உன் பொண்ணுகிட்ட பேசிட்டியா; பேசிட்டியான்னு? நீ இவனை ஆசை பட்டுட்டியே … சரி அவ மனசுக்கு புடிச்சவனையே கட்டிக்கட்டுமேன்னு உன் மாமன் உன் பக்கம் சேந்துகிட்டு குதிக்கறான். அதனால ஆசை பட்டவனையே நீ கட்டிக்கோன்னு நான் சும்மா இருக்கேன். இல்லேன்னா உனக்கு பசங்களை லைன்ல கொண்டாந்து நிறுத்துவேன்.”

“எம்மா … எனக்கு இவன் ஒருத்தனே போதும் … நீ புதுசா எவனையும் கூப்பிட்டுக்கிட்டு வரவேணாம்; மீனா சொல்லிக்கிட்டிருந்தா; செல்வா, குணமாகி வீட்டுக்குப் போனதும் எங்க கல்யாணத்தைப் பத்தி அவங்க அம்மா கிட்ட பேசி முடிவு எடுக்கறேன்னு நடராஜன் சொன்னாராம்.”