கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 10 8

“அவா டாக்டர்ஸ் சொல்றதை மட்டும் நீ கேளு; அவசரப்பட்டு பாண்டிச்சேரிக்கு நீ ஓட வேண்டாம். புதுசா நேத்து அந்த ஆஃபிசுல உன் கிரேட்ல ரெண்டு பேரு டில்லியிலேருந்து வந்து ஜாய்ன் பண்ணியிருக்காங்க; அதனால உன்னை திரும்பவும் சென்னையிலேயே போஸ்ட் பண்றதுக்கு கோபாலன், சீஃபுக்கு ஃபைல்ல எழுதி அனுப்பியிருக்கார். ஒரு வாரத்துலே உனக்கு திருப்பியும் சென்னையிலேயே போஸ்டிங் வரலாம். நான் இருக்கும் போது நீ லீவைப் பத்தியெல்லாம் கவலைப்படாதே. அந்த விஷயத்தை நான் பாத்துக்கறேன். நீ பொறுமையா ஜாயின் பண்ணிக்கலாம்.” அவள் மூச்சு விடாமல் பேசினாள்.
“ரொம்ப தேங்க்ஸ் … மேடம்”
“ஏன்டியம்மா சுகன்யா, இவன் அடிபட்டு ஆஸ்பத்திரிக்கு வந்து ரெண்டு நாளாச்சு; ம்ம்ம் … நீ ரெண்டு நாளா இங்கேதான் இருக்கறேன்னு மல்லிகா சொல்லிண்டு இருந்தா; நீயாவது எனக்கு ஒரு போன் பண்ணி சொல்லக்கூடாதோ? உன்னை என் பொண்ணு மாதிரி நினைச்சிண்டிருக்கேன் நான். நோக்கு என் மேல அப்படியென்னடியம்மா கோபம்? சேதியை கேட்டதும் என் மனசு பதை பதைச்சு போயி இவனை பாக்கணுமின்னு ஒரே ஓட்டமா ஓடி வந்துட்டேன்.” சாவித்திரி வழக்கம் போல் நீட்டி முழக்கினாள்.
“உங்க மேல எனக்கு ஒரு கோபமுமில்லே. நீங்க உக்காருங்க முதல்ல. உங்களைப் பத்தி எனக்கு தெரியாதா? ஒரு வாய் தண்ணியை குடிங்க; உங்களுக்கு மூச்சு வாங்குது பாருங்க.” வாட்டர் பாட்டிலை எடுத்து அவளிடம் மரியாதை நிமித்தம் நீட்டினாள்.

“தலைக்கு வந்த அம்பு தள்ளிப் போய் விழுந்ததுன்னு நினைச்சுக்கோடாப்பா; உங்கம்மா கிட்ட சாயங்காலம் ஒரு நிமிடம் பேசினேன். அப்பத்தான் எனக்கு நீ ஆஸ்பத்திரியில இருக்கற விஷயம் தெரிய வந்தது. அந்த பொம்மனாட்டி தவிச்சிப் போயிருக்கா. இருக்காதா பின்னே; பெத்து வளத்தவளாச்சே? கருவேப்பிலை கொத்தாட்டாம ஒரு பிள்ளையை பெத்து வெச்சிருக்கா. கெட்ட நேரம் சொல்லிட்டா வருது? நீ என்னடியம்மா ஆபிசுக்கு லீவு போட்டிருக்கியா? நீ டில்லிக்கு போறதா கேள்விப்பட்டேனே? டிக்கெட்டெல்லாம் புக் பண்ணிட்டியா?
“இல்லை மேடம்; இவர் பக்கதுல நான் இருக்கறதுதான் இப்போதைக்கு முக்கியம்ன்னு என் மனசுல பட்டுது; புக் பண்ண டிக்கட்டை கேன்சல் பண்ணிட்டேன்; கோபாலன் சார் கிட்ட அடுத்த பேட்ச்ல டில்லி போறேன்னு ரெக்வெஸ்ட் எழுதி கொடுத்து இருக்கேன். அவரும் சரின்னு சொல்லிட்டார்” இதைப் பத்தி இப்ப இவ பேசலேன்னு யார் அழுதாங்க? அவள் வேண்டா வெறுப்பாக புன்னகைத்தாள்.
“நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதே; இவாத்துல இவனுக்கு நாலு மனுஷா இருக்கா; அவா இவனை கண்ணுல வெச்சு பாத்துக்க மாட்டாளோ? நீ ஏன் இப்படி தனியா கஷ்டப்பட்டுண்டிருக்காய்; இந்த மாதிரி ஆபீஸ்ல நல்ல வாய்ப்பு உனக்கு அடிக்கடி வராது; வந்த சந்தர்ப்பத்தை விட்டுட்டு பின்னாடி வருத்தப் படக்கூடாது. என் மனசுல பட்டதை, அதுவும் உன் நல்லதுக்குத்தான் இதை நான் சொல்றேன்.
“ அவர்கள் எதை பற்றி பேசுகிறார்கள் என்பது செல்வாவுக்கு புரியாததால் தன் கண்களில் கேள்வி குறியுடன் சுகன்யாவை பார்த்தான். சுகன்யா அவன் பார்வையைத் அந்த நேரத்தில் தவிர்த்தாள்.
“சாயந்திரம் கோவிலுக்குப் போயிருந்தேன். நேரா அங்கேருந்துதான் வர்றேன். உனக்காக விபூதி பிரசாதம் கொண்டு வந்திருக்கேன். மேல இருக்கறவனை நெனைச்சு நெத்தியில இட்டுக்கோடாப்பா. எல்லாம் சரியாயிடும். நல்லபடியா இருப்பே நீ.” சாவித்திரி எழுந்து அவனருகில் செல்ல முயற்சித்தாள்.
“எங்கிட்டே கொடுங்க மேடம்; அவருக்கு நான் வெச்சு விடறேன்.” சாவித்திரி தன் பர்ஸிலிருந்து எடுத்த பிரசாத பொட்டலத்தை அவள் கையிலிருந்து பிடுங்காத குறையாக வாங்கிய சுகன்யா, அவள் பார்த்துக்கொண்டிருக்க, தன் கையால் உரிமையுடன் செல்வாவின் நெற்றியில் புருவங்களுக்கிடையில் தீட்டினாள். இவ கண்ணுதான் இங்க வந்து படுத்துக்கிட்டான்; இன்னும் இவ அவனை தொட்டு விபூதி குங்குமம் வேற வெக்கணுமா? சாவித்திரி அவனை தொடுவதை அவள் மனம் விரும்பவில்லை. செல்வாவுக்கு நெற்றியில் விபூதியை இடும் போது, அவன் தலையைத் ஆடியதால் அவன் கண்ணில் சிதறி விழுந்த துகள்களை, வேண்டுமென்றே தன் மார்பை அவன் முகத்தில் உரசியவாறு, அவன் மேல் குனிந்து தன் வாய் எச்சில் அவன் முகத்தில் தெறிக்க சுகன்யா அவன் கண்ணை ஊதினாள். தன் துப்பட்டாவால் அவன் முகத்தை துடைத்து விட்டாள். அவனை விட்டு விலகாமல் அவன் பக்கத்தில் நின்று அவன் தலையையும் நெற்றியையும் வருடிக்கொண்டிருந்தாள். இந்த கல்லு மனசுகாரிக்கு இப்போதாவது புரியட்டும், எங்களுக்கு நடுவுல இருக்கற உறவு என்னான்னு? என் அப்பனை பத்தி சொல்லி இவன் அம்மா மனசை குழப்பி வெச்சிருக்காளே? நேரா போய் இவன் ஆத்தா மல்லிகா கிட்ட இங்க நடக்கறதை சொல்லி பொலம்பி சாவட்டும். என்னை ஒதுக்கணும்ன்னு நினைக்கறவங்களுக்கு, நான் எப்படி அவங்க புள்ளையை என் மனசுக்குள்ள வெச்சிருக்கேன்னு? அப்பத்தான் என் அருமை அவங்களுக்குப் புரியும். ஆண்டவா, இங்க நடக்கறதை பாத்ததுக்கு அப்புறமாவது இந்த சாவித்திரி இனிமேல் எங்க ஆசைக்கு குறுக்க வந்து எந்த சதியும் பண்ணாம இருந்தா சரி? சுகன்யா தன் மனதுக்குள் ஆத்திரத்துடன் பொருமிக்கொண்டாள். சாவித்திரியும் அவள் செய்வதையெல்லாம் பிரமிப்புடன் வைத்த கண் வாங்கமால் பார்த்துக்கொண்டிருந்தாள்.