என் தேவதை – Part 2 114

“தமிழ் ”
“ம்ம்?”
“என்னப்பா.. தூங்கறியா?”
“இல்ல..”
“கண்ண மூடி படுத்துருக்க?”
“நல்லாருக்கு..”

கண் திறந்து நிருதியைப் பார்த்துப் புன்னகைத்தாள். அவனும் புன்னகைத்து அவளின் பட்டுக் கன்னத்தை கிள்ளினான். அவன் விரலைப் பிடித்தபடி ரூபாவைப் பார்த்தாள் தமிழ்.
“ஏன்டி?”
“என்ன ஏன்டி?” ரூபா.
“பொறாமையா இருக்கா?”
“ச்சீ.. எனக்கென்ன பொறாமை? ” என்றாள் ரூபா. ஆனால் உள்ளுக்குள் ஒரு எரிமலையே குமுறிக் கொண்டிருந்தது.
“உனக்கு ஒண்ணும் ப்ராப்ளம் இல்லையே?”
“என்ன ப்ராப்ளம்?”
“நாங்க உன் வீட்ல.. இருக்கறதுனால?”
“வேற யாராவது இருந்தாத்தான் ப்ராப்ளம்.. நாம மட்டும்தான இருக்கோம்..? நீ என்னோட க்ளோஸ் பிரெண்டுனு இந்த ஏரியாவுக்கே தெரியும் ”
“ஓகே தேங்க்ஸ்..”
“அத நீயே வெச்சிக்கோ..”
“ஓகே ”
“நீ பாட்டுக்கு இப்படி படுத்துட்டா.. எங்கண்ணா என்ன பண்ணுவாரு?”
“என்ன பண்ணனும்?”
“பேசலாமில்ல..?”
“அதான் நீங்க பேசிட்டிருக்கீங்களே..”
“நாங்க பேசினா..? அந்தண்ணா என்ன என்னைவா லவ் பண்றாரு? உன்கூட பேசத்தான் அவருக்கு ரொம்ப ஆசையா இருக்கும்..”
“அப்படியா..?” நிருதியைப் பார்த்துக் கேட்டாள் தமிழ்.
“எஸ் பேபி .. ரூபா சொல்றதுதான் சரி..”
“ஓகே .. பட் எனக்கு என்னமோ பேசவே தோணல..”
“ஏன்?”
“தெரியல..”