என் தேவதை – Part 2 115

தமிழும் எழுந்தாள். நிருதி முன்னால் நகர்ந்தான். தமிழின் கையை பிடித்து அவளது காதைக் கடித்தாள் ரூபா.
“செம ரொமான்ஸ்.. ”
“என்ன.. படமா?”
“ஏன் தெரியாதா?”
“ஆமா..”
“எப்படி தெரியும்? ”
“என்ன?”
“அண்ணா.. அண்ணானு சொல்லிட்டு.. செம ரொமான்ஸ் பண்ணிட்டிருக்க”
“ஏய்.. யாரு?”
“நீதான்டி.. கவனிச்சிட்டுதான் இருந்தேன். நீங்க பண்ண எல்லா சேட்டைகளையும்”
“ச்சீ.. சும்மாரு. நாங்க ஒண்ணுமே பண்ணல.. படம் மட்டும் தான் பாத்தோம்..”
“ஆஹா..”
“மூடிட்டு வா” என்று விட்டு நிருதியிடம் நகர்ந்தாள் தமிழ்.

ரூபாவும் தன் துப்பட்டாவை சரி செய்து கொண்டு தமிழைப் பின் தொடர்ந்தாள்.. !!

தியேட்டரை விட்டு வெளியேறினர். பார்க்கிங்கில் இருக்கும் பைக்கை எடுக்கப் போனான் நிருதி. வெளியேறும் கூட்டத்துக்கு வழி விட்டு ஒரு ஓரமாக போய் நின்றனர் தமிழும் ரூபாவும்.

தமிழின் உடம்பும் மனசும் மிக மோசமாக கெட்டுப் போயிருந்தது. நிருதி மீது அவளுக்கு காதல் உண்டு. ஆனால் காமம் பெரியதாக இருந்ததில்லை. இப்போது அவன் தியேட்டர் இருட்டில் அவளின் உணர்ச்சிகளை தூண்டி அவளை மோக வயப் பட வைத்திருந்தான். அவன் விரல்கள் இன்னும் அவளின் உடை மூடிய உடலை தீண்டிக் கொண்டிருப்பதைப் போன்ற பிரம்மையில் அவள் உடம்பு சூடாகி கொதித்துக் கொண்டிருந்தது.

நெருக்கமாக நின்று தமிழின் கையைத் தொட்ட ரூபா வியப்புடன் கேட்டாள்.
“ஏய்.. என்னடி இது உன் கை இப்படி சுடுது”
“சுடுதா.. இல்லையே”
“ஏ லூஸு.. பின்ன என்ன இது?” ரூபா தமிழ் உடம்பின் மற்ற இடங்களிலும் தொட்டுப் பார்த்து உறுதி செய்தாள்.

தமிழும் தொட்டு பார்த்துக் கொண்டாள். அவள் உடல் சூட்டுக்கான காரணம் அவளுக்கு தெரிந்தே இருந்தது . எல்லாம் நிருதியின் விரல்கள் இருட்டில் ரகசியமாக செய்த வேலை.. !!