என் தேவதை – Part 2 115

திருப்தியாக சாப்பிட்டு ரெஸ்டாரண்டை விட்டு கிளம்பினார்கள். வேறு எங்கும் போகும் எண்ணம் இல்லை. ரூபா தன்னை தன் வீட்டில் கொண்டு போய் விடச் சொன்னதால் ரூபாவின் வீட்டுக்கே சென்றார்கள் மூவரும்.. !!

ரூபாவின் வீடு சாதாரணமான ஏழை மக்கள் வாழக் கூடிய பகுதியில் இருந்தது. இரண்டு அறைககளை மட்டுமே கொண்ட ஒரு சாதாரண ஓட்டு வீடுதான். பூட்டியிருந்த வீட்டைத் திறந்து உள்ளே அழைத்து உட்கார வைத்து தண்ணீர் கொடுத்தாள்.

“வீட்ல யாரும் இல்லையா ரூபா?” நிருதி கேட்டான்.
“இல்லண்ணா.. அம்மா அப்பா ரெண்டு பேரும் வேலைக்கு போயிட்டாங்க”
“நீ ஒரே பொண்ணா?”
“ஒரு அக்கா இருக்கா”
“ஓஓ.. அக்கா என்ன பண்றாங்க?”
“ஒர்க்” என்றாள்.

டிவியையும் பேனையும் போட்டு விட்டாள். சேரில் நிருதியை ஒட்டி உட்கார்ந்த தமிழ் தாளாரமாக அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.

“ம்ம்.. ரொம்பத்தான் லவ்வு போல?” தமிழைப் பார்த்து கிண்டல் செய்தாள் ரூபா.
“ஆமா போ..”
“ம்ம்.. என்னமோ அப்படி சீன் போட்ட?”
“என் ஆளு.. நான் எப்படி வேணா சீன் போடுவேன். உனக்கென்ன?”
“உன் ஆளா..?”
“ஆமா.. என் ஆளுதான்..” என்று நிருதியின் கை விரல்களைக் கோர்த்து பிண்ணிக் கொண்டாள் தமிழ்.

தமிழ் இவ்வளவு தூரம் மாறியிருப்பது நிருதிக்கே வியப்பாகத்தான் இருந்தது. ஆனாலும் அவளின் நெருக்கத்தை இது போன்ற தருணங்களில்தான் உணர முடியும் என்பதால் அவளின் செய்கைகளை ரசித்து அனுபவித்தான்.

தன் வீடு என்பதால் ரூபா இயல்பாக இருந்தாள். நிறைய பேசினாள். தன் வீட்டுக் கதைகள் எல்லாம் சொன்னாள். தமிழும் அவன் மடியில் சாய்ந்து கொண்டு இடையிடையே பேசினாள்.

ரூபாவின் வீட்டிலேயே ஒரு மணி நேரம் சென்றது.
“போலாமா?” என்று விருப்பமற்றவளைப் போலக் கேட்டாள் தமிழ்.
“சரி..” என்றான் நிருதி.
“அடுத்தது எங்க போறீங்க?” ரூபா கேட்டாள்.
“வீட்டுக்குத்தான்”
“வேற எங்கயும் போகலியா?”
“வேற எங்க போறது?”
“அவ்ட்டிங்…?”
“இதுக்கு மேல எங்க போறது..?”
“என்னை விட்டுட்டு போறேன்னிங்க?”
“அது சும்மா.. நீ இல்லாம தமிழும் எங்கயும் வர மாட்டா..”
“அப்ப இருங்களேன் இன்னும் ஒரு மணி நேரம் ”

தமிழ் “இங்கயா?”
“ம்ம்” ரூபா.
“இங்க இருந்து என்ன பண்றது?”
“உன் வீட்டுக்கு போய் மட்டும் என்ன பண்ணுவே?”
“தூங்குவேன்”
“அட ச்சீ.. தூங்கு மூஞ்சி.. பர்த்டேவும் அதுவுமா லவ்வரோட ஜாலியா என்ஜாய் பண்ணுவியா.. அதை விட்டுட்டு.. தூங்கப் போறேனு சொல்றியே.. உன்னல்லாம்…”
“ஏய்.. எனக்கு என்னமோ இன்னிக்கு இப்பவே ரொம்ப டயர்டா இருக்குடி”
“போடி.. இவளே….”