என் தேவதை – Part 2 115

“என்ன சொன்னா?”
“நாம கிஸ்ஸடிச்சு… அதை அவ பாக்கணுமாம்”
“ச்சீ… என்ன அல்ப புத்தி”
“ஏய்.. இது ஒரு ஜாலிப்பா.. பண்ணித்தான் பாக்கலாமே..” என்று நிருதி சொல்லிக் கொண்டிருக்கும்போதே கூல்ட்ரிங்க்ஸ் பாட்டிலுடன் வந்தாள் ரூபா.

நிருதியின் மடியில் நெருக்கமாக உட்கார்ந்து கொண்டிருந்த தமிழைப் பார்த்ததும் ஆச்சரியத்தில் கண்கள் விரிய வாயைப் பிளந்தாள் ரூபா.. !!

ரூபா வாயைப் பிளந்தாள்.
“ஏய்.. என்னப்பா இது?”
“எது?” தலையை சொடுக்கி கூந்தலை முன்னால் எடுத்து போட்டாள் தமிழ்.
“ரெண்டு பேரும் இப்படி…”

தமிழின் இடுப்பை வளைத்து அணைத்திருந்தான் நிருதி. அவன் முகம் அவளின் தோளில் அழுந்தியிருந்தது. தமிழ் ரூபாவை பார்த்துக் கொண்டிருக்க ரூபா இவனைப் பார்த்தபோது தமிழுக்கு தெரியாமல் ரூபாவைப் பார்த்து கண்ணடித்தான்.

“நீதான் சொன்னியாமே?” என்றாள் தமிழ்.
“என்ன சொன்னேன்?”
“நாங்க ரெண்டு பேரும் லவ்வர்ஸ் மாதிரியே நடந்துக்கலேனு?”
“அதுக்கு?”
“அதான். லவ்வர்ஸா நடந்துகிட்டிருக்கோம்”

ரூபா நிருதியைப் பார்த்து சிரித்தாள். பின் தமிழிடம் சொன்னாள்.
“இப்படி மடில உக்கார்றதுதான் லவ்வர்ஸ் மாதிரி நடந்துக்குறதா?”
“உக்காந்துருக்கறதுதானே உனக்கு தெரியும்? ”
“ம்ம்?”
“இவ்ளோ நேரம் என்ன பண்ணோம்னு தெரியாதுல்ல?”
“என்ன பண்ணீங்க?”
“கிஸ்ஸடிச்சோம்”
“ஐய்யே….”
“ஏய் நெஜமாடி”
“என்ன கொழந்தைக முத்தம் குடுத்துக்கற மாதிரி கன்னத்துல குடுத்துருப்பே.. அதுக்கு பேரு கிஸ் கெடையாது”

உடனே உதட்டை பிதுக்கி காட்டினாள் தமிழ்.
“இங்க பாருடி லூஸு. என் ஒதடே புண்ணாகிப் போச்சு”
“ஏன்?”
“இது புடிச்சு கடிச்சு வெச்சிருச்சு” என்று விட்டு சட்டென திரும்பி நிருதியின் உதட்டில் முத்தமிட்டாள் தமிழ்.