என்ன பண்றது என் காதலனச்சே!! 4 230

சௌமியா: ஆமா உங்கண்ணன் மட்டும் பெரிய ஒழுங்கு, நம்மள இப்படி பண்ண வச்சதே அந்தாளு தான்.. நமக்குள்ள நடந்துருச்சு ன்னு அவருக்கு இன்னும் தெரியல ன்னு நினைக்குறேன்.. எதோ அரசல் புரசல் ஆ இருந்துட்டு விலகிட்டோம் ன்னு நினைச்சிட்டு இருக்காரு.. இப்போதைக்கு அப்படியே இருக்கட்டும். ஒரேடியா ஷாக் கொடுக்க வேண்டாம்.. ஆனா அந்தாளு முன்னாடியே ஒரு நாள் செய்ய வேண்டி இருக்கும், நீ ரெடியா இரு சரியா?

கிஷோர்: ம்ம்ம்.. சரி அண்ணி..

மூர்த்தி வெளியே நண்பரை பார்க்க சென்றிருக்க, கதிர் அவன் அறையில் குழந்தையுடனும், வள்ளி அடுப்பறையில் பாத்திரங்களுடனும் கொஞ்சிக் கொண்டிருக்க, வீட்டின் கூடத்தில் மலர் மட்டும் தனியாக உட்கார்ந்து இருந்தாள்.. தொலைக்காட்சியில் பாடல்கள் ஓடிக்கொண்டிருக்க அவள் மனம் அதில் லயிக்காமல் எங்கோ அலை பாய்ந்து கொண்டிருந்தது.. கண்கள் தொலைகாட்சி பெட்டியை பார்த்தாலும், அவள் மனம் அவளுக்கு கிடைக்காத ஒன்றை நாடி ஏங்கியது..

வீட்டில் இருந்த அனைவரின் பாசமும் தாராளமாக கிடைத்த பின்பும் மலருக்கு ஏதோ ஒன்று குறைவது போல் அவள் மனதை நெருடிக் கொண்டே இருந்தது.. அது சௌமியா தான்.. மலரை ஒரு புழுவை போல பார்ப்பதும், அவள் அருகில் வந்தாலே விலகி ஓடுவதுமாக, சௌமியாவின் தீண்டாமை மலரை மெதுவாக வதைத்து கொண்டிருந்தது.. சௌமியா விடம் நட்பு பாராட்ட விரும்பி அவளை தேடி கண்கள் வீட்டை அலச, சௌமியா கிஷோரின் பேச்சு சத்தம் மெல்லியதாக கொல்லைப்புறத்திலிருந்து அவள் காதை வந்தடைய முகத்தில் சிரிப்புடன் எழுந்தாள்..

“என்னது கொழுந்தனும் அண்ணியும் கொல்லைப்புறத்துக்கு வந்து குசுகுசு ன்னு பேசிட்டு இருக்கீங்க” என்று அங்கு வந்த மலர் சிரித்து நக்கலாக சொன்னாள்..

சௌமியா: (சிறிது சிறிதாக மலரின் மேல் தேங்கி இருந்த கோவம் கொஞ்சமாக வெடித்தது போல்) என் கொழுந்தன் கூட நான் என்ன வேணா பேசுவேன் உனக்கென்னடி? நான் என்ன உன்னை மாதிரி அடுத்தவ புருஷனை திருடுறவ ன்னு நினைச்சியா??

கலையான வட்ட முகத்தில் விரிந்த கண்களுடன் புன்னகை பொங்க மகிழ்ச்சியுடன் அங்கு வந்தவளுக்கு சௌமியா கடுஞ்சொற்களை வீச, மலருக்கு உடல் முழுவதும் கூசிப்போனது.. வாழ்க்கை முழுவதும் செல்லத்தை மட்டுமே பிரதானமாக கொண்டு வளர்ந்து வந்த மலரை சௌமியா வின் சொற்கள் கடுமையாக தாக்கியது. அவள் விரல்கள் மெல்லியதாக நடுங்க, இரு கைகளையும் பின்னால் வைத்து மறைத்து கொண்டாள்.. இருந்தாலும் பொங்கி வந்த அழுகையை அடக்க அவள் முகம் மிகவும் போராடியது.. அதில் அவள் உதடுகளும் கொஞ்சம் நடுங்க கண்களில் நீர்த்துளி தேங்கி இருந்த கோலத்தை காண முடியாமல் சௌமியா தன் முகத்தை திருப்பிக் கொண்டாள்..

மலரின் கோலம் கிஷோரின் மனதை பிசைய, “என்ன அண்ணி??” என்று மெல்லியதாக வருத்தத்துடன் சௌமியாவிடம் சொன்னான்.. சௌமியா பதில் எதுவும் எதுவும் சொல்லாமல் வேறு பக்கம் பார்த்தபடி அப்படியே நின்றாள்.. மலரை திட்டுவதற்கு அவளிடம் வார்த்தைகளும் காரணங்களும் எக்கச்சக்கமாக இருந்தாலும் அதற்கு மேல் மலரை காய படுத்த விரும்பாமல் அமைதியாக இருந்தாள்.. இதற்கு மேலும் தான் திட்டுவதற்குள் மலர் இங்கிருந்து சென்றுவிட வேண்டும் என்று விரும்பினாள்..

2 Comments

  1. Punda mathire iruku story

  2. Pls continue this story. Egarly waiting for next part

Comments are closed.