எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 19 45

“அவளை ஏமாத்திட்டுப்போன அந்தப்பையனை பத்தி நாங்க எவ்ளோ கேட்ருப்போம் தெரியுமா.. எதுவுமே அவ சொன்னது இல்ல..!! ஏமாந்துட்டமேன்றதுக்காக கூட அவ சூசயிட் அட்டம்ப்ட் பண்ணிக்கல அசோக்.. ‘தன்னோட நெலமை தன் மகளுக்கும் வந்திருச்சே’ன்னு அவ அம்மா பட்ட வேதனையை தாங்கிக்க முடியாமத்தான்.. அந்த ஸ்ட்ரெஸ் அதிகமாகித்தான்.. கத்தியால கை நரம்பை கட் பண்ணிக்கிட்டா..!! இதோ.. இந்த எடத்துல.. இப்படி..!!”

பவானி சொல்ல.. அசோக்கின் மனதுக்குள் பளிச்சென்று ஒரு மின்னல்..!! முன்பொருமுறை மீராவுடன் ஃபுட்கோர்ட்டில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது.. தனது கற்பனை அப்பாவின் காதல் வெறுப்பினைப்பற்றி அவள் கதையடித்ததுக்கு இடையில்..

“நான் செகண்ட் இயர் படிக்கிறப்போ.. ஒருதடவை அப்பா என்னை பாக்குறதுக்காக எங்க காலேஜுக்கு வந்திருந்தாரு.. அந்த நேரம் பார்த்து நான் என் க்ளாஸ்மேட் பையன் ஒருத்தன்ட்ட சப்ஜக்ட் பத்தி சந்தேகம் கேட்டுட்டு இருந்தேன்.. நாங்க பேசிட்டு இருக்குறதை அப்பா பாத்துட்டாரு..!! அன்னைக்கு நைட்டு அப்பா என் கைல போட்ட சூடுதான் இது..!!”

இடது கையில் இருந்த தழும்பை காட்டி.. அவள் அப்போது அப்பாவியாக சொன்னது.. இப்போது அசோக்கின் நினைவுக்கு வர.. அவன் தலையை பிடித்துக் கொண்டான்..!! ‘இன்னும் என்னவெல்லாம் புதிர் ஒளித்து வைத்திருக்கிறாயடி பிசாசே..??’ என்பது மாதிரியான சலிப்புடன்.. பிடித்த தலையை பிசைந்து விட்டுக் கொண்டான்..!!

போக்குவரத்து நெரிசல் சற்றே குறைய.. இரண்டு கார்களும் மெல்ல மெல்ல நகர.. அசோக்கும், மீராவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாமலே.. எதிரெதிர்த்திசையில் பயணிக்க ஆரம்பித்தினர்..!!

அசோக்கும் பவானியும் சிந்தாதிரிப்பேட்டை வீட்டை சென்றடைய மேலும் இருபது நிமிடங்கள் ஆயின..!! வீட்டை பார்த்ததுமே அசோக்கால் அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது.. அவனது தேடுதல் வேட்டையின் முதல் வீடே அதுதானே..??

‘அப்படியானால்.. அன்று கண்ணாடியில் நான் கண்ட பிம்பம் என் மீராவுடையதுதானா..?? வீட்டுக்குள் ஒளிந்துகொண்டேதான் இல்லையென்று சொல்ல சொல்லியிருந்தாளா..?? இரக்கமற்ற இராட்சசி..!!!’

ஒருபக்கம் மீராவின்மீது அவனுக்கு எரிச்சல் ஏற்பட்டிருந்தாலும்.. இன்னொரு பக்கம், இப்போது அவளை நேரிலேயே காணப்போகிற சந்தோஷமும் அவனுக்குள் எக்கச்சக்கமாய் ஏறிப்போயிருந்தது..!! அவர்களுக்கு முன்பாக தோன்றி மனோகர் சொன்ன செய்தி.. அத்தனை சந்தோஷத்தையும் மொத்தமாய் வடிந்து போக வைத்தது..!!

“ஹேய்.. நீ.. அந்த நித்தி வளைச்சுப்போட்ட பையன்ல..?? என்ன இந்தப்பக்கம்..??”

மனோகரின் ஆரம்பமே அசோக்கின் கோபத்தை கிளறிவிடுவதாய் இருந்தது.. அதை கட்டுப்படுத்திக்கொண்டுதான் அவன் மீரா பற்றி விசாரித்தான்..!! மனோகரோ அலட்சியமாகவே அவனுக்கு பதில் சொன்னான்..!!

“எந்த நாட்டுக்கு போறா.. எத்தனை மணிக்கு ஃப்ளைட்.. எத்தனை வருஷம் இருக்கப் போறா.. எப்போ திரும்பி வருவா.. எதுவும் எனக்கு தெரியாது..!!”

அவனுடைய பதிலில் அசோக் நொந்துபோனான்.. அவனுடைய மனதில் மெலிதாக ஒரு பதற்றம் பரவ ஆரம்பித்தது..!!

“அ..அக்கா.. அவ நம்பருக்கு கால் பண்ணிப் பாருக்கா..!!”

பதற்றத்துடனே அசோக் சொன்னதும்.. பவானி தனது எண்ணிலிருந்து மீராவின் மொபைல் நம்பருக்கு கால் செய்தாள்..!! இரண்டு மூன்று முறை முயற்சி செய்து பார்த்தவள்.. பிறகு அசோக்கிடம் திரும்பி சலிப்பாக சொன்னாள்..!!

“ரிங் போகுது அசோக்.. எடுக்க மாட்டேன்றா..!! ட்ராவல்ல இருக்குறா.. கவனிக்கல போல..!!”

“ப்ச்..!!”

அசோக்கின் பதற்றம் இப்போது இன்னும் அதிகமாயிருந்தது..!! ‘மீண்டும் அவளை மிஸ் செய்துவிடுவோமோ..?’ என்பது மாதிரி அவனுக்குள் ஒரு கிலி கிளம்ப ஆரம்பித்தது..!! மனோகரிடம் திரும்பி கெஞ்சலாக கேட்டான்..!!

“ஸார்.. ப்ளீஸ் ஸார்..!! நான் எப்படியாவது அவளை மீட் பண்ணியாகணும்.. ஃப்ளைட் ஏர்றதுக்குள்ள அவளை புடிச்சாகனும்..!! உங்களுக்கு ஏதாவது யூஸ்ஃபுல் இன்ஃபர்மேஷன் தெரிஞ்சா சொல்லுங்க.. ப்ளீஸ்..!!”

“ப்ச்.. நான்தான் எனக்கு எதுவும் தெரியாதுன்னு சொல்றேன்ல..?? வேலை விஷயமா வெளிநாட்டுக்கு போறாளா.. இல்ல.. வேற ஏதும் தொழில் பண்ணப் போறாளான்னு கூட எனக்கு தெரியாது..!!”

மனோகரின் வக்கிரமான வார்த்தைகள் அசோக்கை உக்கிரமாக்கின.. சட்டென அவனுக்குள் ஆத்திரம் பீறிட்டு கிளம்ப, ‘ஏய்ய்..!!’ என்று கத்தியவாறு மனோகருடைய சட்டையை கொத்தாகப் பிடித்தான்..!! பதிலுக்கு மனோகரும் ‘ஹேய்.. என்ன..?’ என்று சூடாக.. பவானிதான் இடையில் புகுந்து அசோக்கை தடுத்தாள்..!!

“விடு அசோக்.. விடுன்றேன்ல..!! சொன்னா கேளு.. இப்போ இதுக்குலாம் நேரம் இல்ல..!! இந்தா.. நீ உடனே கெளம்பு.. ஏர்ப்போர்ட் போய் அவளை ஸ்டாப் பண்ணு.. போ..!!”

2 Comments

  1. A wonderful love story but in wrong website. But it is also amazing.

Comments are closed.