எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 19 45

போர்டிங் ஏரியாவுக்குள்.. இரண்டாவது மாடியில் இருந்த அந்த புக் ஸ்டாலில்.. மீரா நின்றுகொண்டிருந்தாள்..!! ட்ராவல் பேகை அவள் செக்கின் செய்திருக்க.. தோளில் மட்டும் அந்த சிறிய பேக்..!! ஃப்ளைட்டில் அனுமதிக்கப்பட இன்னும் சிறிது நேரமே இருக்கிற நிலைமையில்.. திடீர் யோசனை தோன்றியவளாய் அந்த புக் ஸ்டாலுக்கு வந்திருந்தாள்..!! சவூதி அரேபியா பற்றிய உபயோகமான தகவல்கள் அடங்கிய அந்தப் புத்தகத்தை வாங்கியிருந்தாள்..!! பில்லுக்கு பணம் எடுத்து கொடுத்துவிட்டு.. புத்தகத்தை பேகுக்குள் திணித்தபோதுதான்.. அவளுடைய கவனத்தை அது ஈர்த்தது.. பேகுக்குள் கிடந்த அவளுடைய செல்ஃபோன்..!!

எதேச்சையாக எடுத்துப் பார்த்தவள்.. பவானியின் நம்பரில் இருந்து ஏகப்பட்ட மிஸ்ட் கால்ஸ் வந்திருப்பதை கவனித்தாள்..!! ‘இவர்கள் எதற்கு இந்த நேரத்தில்?’ என ஓரிரு வினாடிகள் குழம்பினாள்.. புக் ஸ்டாலை விட்டு அவசரமாக வெளியே வந்தாள்.. வெளியே வந்ததுமே பவானியின் நம்பருக்கு கால் செய்தாள்..!!

அதே நேரம்.. விசிட்டர் ஏரியாவில்..

ஏக்கமும் தவிப்புமாய் மீராவை தேடிக்கொண்டிருந்த அசோக்கின் கையில் இருந்த செல்ஃபோனுக்கு.. அவளிடமிருந்தே கால் வர.. அந்த நொடியில் அவன் அடைந்த மகிழ்ச்சியை அளவிடவே முடியாது..!! அவனது முகம் பட்டென பரவசத்துக்கு செல்ல.. காலை உடனே பிக்கப் செய்து காதில் வைத்தான்..!!

“ம்ம்.. சொல்லுங்கக்கா.. கால் பண்ணிருந்தீங்களா..??”

எதிர்முனையில் மீராவின் குரல்.. அந்தக்குரலை கேட்டதும் அசோக்கின் உள்ளத்தில் பலவகை உணர்ச்சி அலைகள்..!!

“மீ..மீரா.. மீரா..”

வார்த்தைகள் வெளிவராமல் தவித்தான்.. அவளுடைய உண்மையான பெயர் நித்தி என்று மூளைக்கு தெரிந்திருந்தும்.. அவனுடைய மனம் என்னவோ ‘மீரா மீரா’ என்றே இன்னும் அலறியது..!! அடுத்த முனையில் அவனுடைய குரலை கேட்ட மீராவும்.. பலத்த அதிர்ச்சிக்கும், ஆச்சரியத்துக்கும் உள்ளானாள்.. அவளும் வார்த்தைகள் தொண்டைக்குள் சிக்கியவளாய் தடுமாறினாள்..!!

“அ..அசோக்.. அசோக் நீயா..??”

“நா..நான்.. நான்தான் மீரா..!!”

“அசோக்.. நீ.. நீ எப்படி..??”

“எ..எங்க.. நீ எங்க மீரா இருக்குற..??”

“நா..நான்.. நான் உன்னை விட்டு தூரமா போறேன் அசோக்.. இன்னும் பத்து நிமிஷத்துல.. எனக்கு..”

“தெரியும் மீரா.. நீ ஏர்ப்போர்ட்ல இருக்குறன்னு எனக்கு தெரியும்.. நானும் இப்போ ஏர்ப்போர்ட்லதான் இருக்குறேன்..!! ஏர்ப்போர்ட்குள்ள எங்க இருக்குறன்னு சொல்லு மீரா.. நான் உன்னை பாக்கணும்.. உன்கூட பேசணும்..!! ப்ளீஸ் மீரா.. போயிடாத.. மறுபடியும் என்னை தவிக்கவிட்டுட்டு போயிடாத.. என்கிட்ட வந்துடு.. ப்ளீஸ்..!!”

அசோக்கின் குரல் தழதழத்துப் போய் ஒலிக்க.. அடுத்த முனையில் அதைக்கேட்ட மீரா அப்படியே உருகிப்போனாள்..!! ‘தன்மீது எத்தனை காதல் இருந்தால்.. தன்னை தேடிக்கண்டுபிடிக்க இவன் இத்தனை முயற்சிகள் எடுத்துக் கொண்டிருப்பான்..?’ என்பது மாதிரியான எண்ணம் அவளுக்குள் தோன்ற.. உள்ளத்தில் அசோக்கின்மீது பீறிட்டு கிளம்பிய காதல் ஊற்றினை.. அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை..!! கண்களுக்குள் அழுகை முட்டிக்கொண்டு வந்தது.. உதடுகளை பற்களால் அழுந்த கடிக்கவும்.. இமைகளை பொத்துக்கொண்டு கண்ணீர் வெளிச்சிந்தியது..!!

இந்தப்பக்கம் இவளது உணர்சிகளை, அந்தப்பக்கம் அறியாத அசோக்.. அவளது அமைதியை மட்டும் தவறாக அர்த்தம் எடுத்துக்கொண்டு.. பதற்றம் கொப்பளிக்கிற குரலில் மீராவை கெஞ்சினான்..!!

“ப்ளீஸ் மீரா.. ஏதாவது பேசு.. ஃபோனை மட்டும் கட் பண்ணிடாத.. ப்ளீஸ்..!! எ..என்னை.. என்னை விட்டு போயிடாத மீரா.. என்னால தாங்கிக்கவே முடியாது.. ப்ளீஸ் மீரா.. என்னை விட்டு போயிடாத.. ப்ளீஸ்..!!!”

கரகரத்த குரலில் அசோக் அவ்வாறு கெஞ்ச.. முன்பொருமுறை தனது மடியில் மடியில் சரிந்து மயங்கிப் போவதற்கு முன்பாக.. அவன் கெஞ்சிய வார்த்தைகள் மீராவின் காதுக்குள் இப்போது மீண்டும் ஒலித்தன..!!

“போ..போகாத மீரா..!! எ..எனக்கு நீ வேணும் மீரா..!!”

அவ்வளவுதான்..!! அதற்கு மேலும் உள்ளுக்குள் பொங்கிய உணர்சிகளை மீராவால் அடக்கிக்கொள்ள முடியவில்லை.. இதற்கு மேலும் இவனை தவிக்க விடுவது தவறென்று உணர்ந்துகொண்டாள்..!!

2 Comments

  1. A wonderful love story but in wrong website. But it is also amazing.

Comments are closed.