எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 19 45

என்றவாறு கையில் இருந்த கார்ச்சாவியை அசோக்கிடம் நீட்டினாள்..!! அசோக் இன்னும் ஆத்திரம் தணியாதவனாய், மனோகரை முறைத்தவாறே ஒரு சில வினாடிகள் யோசித்தான்.. பிறகு ஒரு முடிவுக்கு வந்தவன், கார்ச்சாவியை கையில் வாங்கிக்கொண்டான்.. பவானியுடைய செல்போனையும் அவளிடமிருந்து பிடுங்கிக்கொண்டான்.. பதற்றத்தில் துடிக்கிற மனதுடன், கேட் திறந்து வெளியேறினான்..!!

அசோக்கின் அவசரத்துக்கு, தான் இடையூறாக இருப்போம் என்று கருதியே.. பவானி அவனை தனியாக கிளம்ப சொன்னாள்..!! காரில் ஏறி அமர்ந்த அவனும்.. வண்டியை கிளப்பியதுமே சர்ரென்று புயல் வேகத்தில் பறந்தான்..!!

கார் காற்றைக் கிழித்துக்கொண்டு அண்ணாசாலையில் சீறியது..!! பயமும் தவிப்புமாய்.. ‘படக் படக்’ என அடித்துக்கொள்கிற இருதயமுமாய்.. உச்சபட்ச வேகத்தில் காரை செலுத்திக் கொண்டிருந்தான் அசோக்..!! ‘கீய்ங்.. கீய்ங்..’ என்று ஹார்ன் ஒலியெழுப்பி முன்னால் சென்ற வாகனங்களை முந்திச்சென்றான்.. பவானியின் செல்ஃபோனில் இருந்து மீராவின் எண்ணுக்கு அவ்வப்போது கால் செய்து பார்த்து, ‘ப்ச்’ என்று சலிப்பை உதிர்த்தான்.. சிக்னலிலோ, ட்ராஃபிக்கிலோ மாட்டிக்கொள்ள நேர்ந்தபோது, ‘ஷிட்’ என்று ஸ்டியரிங்கை குத்தினான்..!!

கத்திப்பாரா ஜங்க்ஷனை கடந்து இடது புறம் திரும்பியதுமே.. தூரத்தில் அந்த ஆள் தெரிந்தான்..!! கொள்ளைகொள்ளையாய் தாடிமயிர்களும்.. கொழுகொழுவென்ற சதைப்பிதுக்கங்களும்.. கோணிப்பை மாதிரியான கால்ச்சட்டையும்.. கோழிமுட்டை கண்ணுக்கு கண்ணாடியுமாக..!! ப்ரேக்டவுன் ஆகிப்போன ஆல்ட்டோவுக்கு அருகே.. முதுகில் பெரிய மூட்டையுடன் நின்றிருந்தான்..!! கையை இவனது காருக்கு குறுக்கே காட்டி..

“லிஃப்ட்.. லிஃப்ட்.. ப்ளீஸ்..!!”

என அந்த ஆள் பரிதாபமாக கத்தியது அசோக்கின் காதில் விழவே செய்தது.. அவனுக்கு உதவவேண்டும் என்கிற எண்ணம் கூட அசோக்கிற்கு தோன்றியது..!! இருந்தாலும் இது சமயமில்லை என்ற எண்ணத்துடன்.. அந்த ஆளின் கதறலை அசோக் அலட்சியம் செய்தான்.. காரின் வேகத்தை சற்றும் குறைக்காமல் ‘விஷ்க்க்’ என கடந்து சென்றான்..!!

அடுத்த பத்தாவது நிமிடம்.. மீனம்பாக்கம் இன்டர்நேஷனல் ஏர்ப்போர்ட்டில் இருந்தான் அசோக்..!! பார்க்கிங் ஏரியாவில் காரை விட்டவன்.. பரபரப்பாக ஏர்ப்போர்ட் என்ட்ரன்ஸுக்குள் நுழைந்தான்..!! மீரா எங்காவது தென்படுகிறாளா என்று.. தவிப்புடன் தலையை திருப்பி திருப்பி பார்த்தான்..!! விமான பயணச்சீட்டு இல்லாமல்.. பயணிகள் அமர்ந்திருக்கிற பகுதிக்கு அனுமதிக்க முடியாது என்று.. அசோக்கை தடுத்தார் ஏர்போர்ட் செக்யூரிட்டி ஒருவர்..!! அசோக் அவரிடம் கெஞ்சினான்..!!

“ப்ளீஸ் ஸார்.. என்னை உள்ள அலவ் பண்ணுங்க.. அவளை நான் பார்த்தே ஆகணும்.. இது என் லைஃப் பிரச்சினை ஸார்.. கொஞ்சம் புரிஞ்சுக்கங்க.. ப்ளீஸ்..!!”

“உன்னை உள்ளவிட்டா என் வேலை போய்டும்பா.. எனக்கும் இது லைஃப் பிரச்சினைதான்.. நீ கொஞ்சம் புரிஞ்சுக்கோ.. ப்ளீஸ்..!!”

அசோக்கின் நிலையை ஓரளவு புரிந்துகொண்ட அந்த செக்யூரிட்டி.. மிஞ்சுவதற்கு பதிலாக கெஞ்சலாய் சொல்ல.. அதற்கு மேலும் என்ன செய்வது என்று புரியாமல், அசோக் நெற்றியைப் பற்றி பிசைந்தான்..!! மீரா தென்படுகிறாளா என்று மீண்டும் ஒருமுறை அவன் தலையை திருப்பி பார்க்க.. அவனுக்கு பின்பக்கமாக அந்த ஆள் வந்து ‘பொத்’தென்று மோதினான்..!! சற்றுமுன் சாலையில் லிஃப்ட் கேட்ட அந்த கொழுகொழு ஆசாமி..!!

“ஹலோ கண்ணு தெரியாதா உங்களுக்கு..??” ஆளை அடையாளம் கண்டுகொண்டும், அசோக் எரிச்சலாகவே எகிறினான்.

“ஸாரி ஸார்.. ஸாரி..!! ஃப்ளைட்க்கு லேட் ஆய்டுச்சு.. அதான்..!! ஸாரி ஸாரி ஸாரி..!!”

ஸாரிக்களை மானாவாரியாக இறைத்தவாறு.. அந்த ஆள் நிற்கக்கூட நேரமின்றி அவசரமாக உள்ளே ஓடினான்..!! ஒருசில வினாடிகள் செயலற்றுப் போய் நின்றிருந்த அசோக்.. பிறகு, ‘போர்டிங் ஏரியா தவிர வேறு எங்காவது மீரா இருந்தால், அவளை பிடிக்கலாமே..’ என்பது மாதிரியான எண்ணத்துடன்.. விசிட்டர்கள் ஏரியா பக்கமாக ஓடினான்..!!

அதே நேரம்..

2 Comments

  1. A wonderful love story but in wrong website. But it is also amazing.

Comments are closed.