எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 19 45

இப்போது அந்த புகைப்படத்தின் மீது பார்வையை வீசிய மும்தாஜ், உடனே நெற்றியை சுருக்கினாள்.

“இ..இது.. இ..இந்த ஃபோட்டோ எப்படி உங்கட்ட..??”

“நீங்க எனக்கு ஒரு புக் தந்திங்கல்ல.. அதுக்குள்ள இருந்தது..!!”

“ஓ..!! இ..இது.. ஆனந்த விகடன் ஃபோட்டோக்ராஃபி கான்டஸ்ட்க்காக நான் எடுத்த ஃபோட்டோ..!! ஆல்பத்துல வச்சிருந்தேன்.. இ..இது எப்படி அந்த புக்குக்குள்ள..”

“ஹையோ.. அதை விடுங்க மும்தாஜ்..!! இ..இந்த பொண்ணு யாருன்னு சொல்லுங்க..!!”

“எ..எனக்கு தெரிஞ்ச பொண்ணுதான்.. எதுக்கு கேக்குறீங்க..??”

“தெ..தெரிஞ்ச பொண்ணுனா..??”

“இ..இங்க கவுன்சிலிங் வந்த பொண்ணு..!! என்னை மாதிரிதான் இவளும்.. சூஸயிட் அட்டம்ப்ட் பண்ணி.. இங்க கவுன்சிலிங் வந்து.. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா மனசு மாறி..!! நான்தான் இவளுக்கு யோகாலாம் சொல்லி தந்தேன்.. கொஞ்சநாள் இங்க ஆர்ட் ஆஃப் லிவிங் ட்யூட்டரா கூட வொர்க் பண்ணினா.. அப்டித்தான் எங்களுக்குள்ள பழக்கம்..!!”

மும்தாஜ் சொன்ன விஷயங்கள்.. அசோக்கிற்கு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஒருசேர அளித்தன..!! அவனுடைய முகம் ஒருவித திகைப்பு சாயம் பூசிக்கொண்டது..!!

“இ..இப்போவும் இங்க வொர்க் பண்றாளா..??”

“இல்ல.. இப்போ கொஞ்ச நாளா வர்றது இல்ல..!!”

“ஓ..!!”

“எ..எனக்கு எதுவும் புரியல அசோக்.. எதுக்கு இதெல்லாம் கேக்குறீங்க..??”

மும்தாஜ் இப்போது பொறுமையில்லாமல் கேட்டுவிட்டாள். அவளுடைய கேள்விக்கு அசோக் ஒரு பெருமூச்சை வெளிப்படுத்திவிட்டு பதில் சொன்னான்.

“நான் மீரா மீரான்னு சொல்வேனே.. அது இவதான் மும்தாஜ்..!! நான் லவ் பண்றவ.. என் மனசு பூரா நெறைஞ்சிருக்குறவ.. என்ன ஏதுன்னு எதுவுமே சொல்லாம என்னைவிட்டு பிரிஞ்சு போனவ..!! இத்தனை நாளா இவளை தேடிக்கண்டுபிடிக்கத்தான் பைத்தியம் மாதிரி அலைஞ்சிட்டு இருக்குறேன் மும்தாஜ்.. நான் இங்க கவுன்சிலிங் வர்ற மாதிரியான நெலமைக்கு காரணமே இவதான்..!!” ஆதங்கத்துடன் அசோக் சொல்ல, மும்தாஜ் அப்படியே ஆச்சரியப்பட்டு போனாள்.

“இ..இவளா.. இவளா உங்க மீரா..?? எ..என்னால நம்பவே முடியல அசோக்..!!”

“சொல்லுங்க மும்தாஜ்.. இ..இவளை எப்டி பாக்கலாம்.. எப்டி கான்டாக்ட் பண்றது..?? இ..இவ அட்ரஸ்.. ஃபோன் நம்பர் ஏதாவது..??” அசோக்கின் குரலில் அடக்கமுடியாத ஒரு தவிப்பு.

“டோன்ட் வொர்ரி அசோக்.. இவ ரெகார்ட்ஸ் கண்டிப்பா இங்க இருக்கும்..!! நாம பவானி அக்காவை போய் பாக்கலாம்.. வாங்க..!!”

2 Comments

  1. A wonderful love story but in wrong website. But it is also amazing.

Comments are closed.