எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 19 45

“மீ..மீரா.. மீரா எங்க மம்மி.. மீரா.. மீரா..!!”

அவனுடைய பார்வை அங்குமிங்கும் அலைபாய்ந்தது..!! திடீரென எழுந்ததுமே மகன் இவ்வாறு தவிக்கிற தவிப்பை பார்த்ததும்.. பெற்றோர்கள் இருவருக்கும் ஒருவகை திகைப்பு.. அவர்கள் பேச வாயெடுக்கும் முன்பாகவே..

“நா..நான் இங்க இருக்குறேன்..!!”

அசோக்கின் பின்புறமிருந்து மீராவின் குரல் கேட்டது.. எழுந்ததுமே அவளை எதிரே தேடினானே ஒழிய, தனது தலைக்கருகே அவள் அமர்ந்திருக்கிறாள் என்பதை அவன் கவனிக்கவில்லை.. இப்போது அவளது குரல் கேட்டதும், படக்கென திரும்பி பார்த்தான்..!! மீரா தன்னை விட்டுச்செல்லவில்லை, தன்னுடன்தான் இருக்கிறாள் என்ற உண்மை புரிந்ததும்.. அவனுடைய முகத்தில் ஒருவித நிம்மதியும் பரவசமும் ஒரே நேரத்தில் பரவின..!!

மீராவோ காதலும், கருணையும், ஏக்கமுமாய் இவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.. அத்தனை உணர்சிகளும் கலந்துகட்டி அவளுடைய முகத்தில் கொப்பளித்தன..!! இரண்டடி நகர்ந்து முன்னால் வந்தவள்.. அசோக்கின் பெற்றோர்கள் அங்கிருக்கிறார்கள் என்பதைக்கூட மறந்துபோய்.. அவனை அப்படியே இறுக்கி அணைத்துக் கொண்டாள்..!! அசோக்கும் அந்த நொடிக்காகத்தான் காத்திருந்தவன் போல.. தனது கரங்களுக்குள் வைத்து அவளை பூட்டிக் கொண்டான்..!!

இணைந்துவிட்ட இளங்காதலர்கள் இருவரையும்.. முதிர்ந்த காதலர்கள் இருவரும் ஓரிரு வினாடிகள் பெருமிதமாக பார்த்தனர்..!! பிறகு முகத்தை திருப்பி ஒருவரை ஒருவர் பார்த்து மெலிதாக புன்னகைத்துக் கொண்டனர்..!! இருவருக்கும் இப்போது ஒரு முழு நிம்மதி வந்திருக்க.. ‘இடத்தை காலி செய்வது நல்லது’ என்று புரிந்துகொண்டு.. அந்த அறையை விட்டு வெளியேறினர்..!!

அசோக்கும் மீராவும் பேசிக்கொள்ளவே இல்லை.. இறுக்கி அணைத்துக் கொண்டவர்கள், அப்படியே உறைந்து போய் அமர்ந்திருந்தனர்..!! ஒருவருடைய கைவிரல்கள் அடுத்தவரின் முதுகைப் பற்றி பிசைந்தன.. ஒருவருடைய மார்புத்துடிப்பை அடுத்தவரின் மார்புகொண்டு உணர முடிந்தது.. ஒருவருடைய சுவாசத்தில் அடுத்தவருடைய மூச்சுக்காற்று கலந்திருந்தது..!! செயலற்றுப்போய் அவர்கள் அவ்வாறு அமர்ந்திருந்தாலும்.. அவர்களுடைய உதடுகள் மட்டும் ஒரே வாக்கியத்தை திரும்ப திரும்ப உச்சரித்துக் கொண்டிருந்தன..!!

“ஐ லவ் யூடா.. ஐ லவ் யூ..!!”

நீண்ட நேரத்திற்கு பிறகு.. மகனும் மருமகளும் ஓரளவு பேசி ஓய்ந்திருப்பார்கள் என்கிற நம்பிக்கையுடன், பாரதி அந்த அறைக்குள் மீண்டும் நுழைந்தாள்..!! அவர்களோ இன்னும் அதே நிலையில் அமர்ந்திருக்க.. ஒருகணம் திகைத்துப் போனாள்.. பிறகு..

“ம்க்கும்..!!” என்று சப்தமெழுப்பி அவர்களை இந்த உலகுக்கு இழுத்து வந்தாள்..!!

அணைத்திருந்தவர்கள் உடனே விலகிக் கொண்டனர்.. அசோக் அசட்டுத்தனமாய் ஒரு புன்னகையை சிந்தினான்.. மீரா வெட்கப்பட்டு தலையை குனிந்துகொண்டாள்..!!

“அவனுக்கு சாப்பிட குடுக்கலாம்னு சொல்லிட்டாங்கம்மா.. அதான் சாதம் கலந்து எடுத்துட்டு வந்தேன்..!!”

“எங்கிட்ட குடுங்க அத்தை.. நான் பாத்துக்குறேன்..!!”

சொன்ன மீரா.. பாரதியின் கையிலிருந்த பவ்லை வாங்கிக்கொண்டாள்..!! ‘தனக்கப்புறம்.. தன் மகனுக்கு.. தன்னிடத்தில் இன்னொருத்தி..’ என்பது மாதிரியான உணர்வு பாரதிக்கு தோன்ற.. ஸ்னேஹமான ஒரு புன்னகையுடன் மீராவின் கேசத்தை வருடிக் கொடுத்தாள்..!! இருவரையும் மீண்டும் தனிமையில் விட்டு.. அந்த அறையினின்றும் அகன்றாள்..!!

பருப்புடன் சேர்த்து கூழ் மாதிரி கரைக்கப்பட்டிருந்த சாதம்.. அதை ஸ்பூனில் அள்ளி மீரா நீட்ட, அசோக் ஆசையாக வாய் திறந்து வாங்கிக்கொண்டான்.. மீராவின் முகத்தை காதலாக பார்த்துக்கொண்டே வாயை அசைபோட்டான்..!! அவனுடைய தலையில் போடப்பட்டிருந்த கட்டு.. நெற்றி, கன்னம், கை, முழங்கால் என்று ஆங்காங்கே பஞ்சு வைத்து ஒட்டப்பட்டிருந்த ப்ளாஸ்டர்கள்.. எதையும் கவனிக்கிற நிலையில் அவன் இல்லை.. அவனது கவனம் முழுதும் மீராவை ஆசையும், ஏக்கமுமாக பார்ப்பதிலேயே இருந்தது..!!

“ரொம்ப பயந்துட்டேன் மீரா.. எங்க மறுபடியும் உன்னை மிஸ் பண்ணிடுவேனோன்னு..!!”

“ம்ம்.. தெரிஞ்சது..!! ஜீப் வர்றதுகூட கண்ணு தெரியாம அப்படியே தாண்டி குதிச்சு ஓடி வர்றான்.. லூசு..!!”

“ஹ்ஹாஹ்..!!”

2 Comments

  1. A wonderful love story but in wrong website. But it is also amazing.

Comments are closed.