எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 19 45

“ஏதோ பிரச்சினைன்னு நேனைக்கிறேன்மா.. வா வெளில போயிடலாம்..!!” மீராவுக்கு உதவிய அந்த செக்யூரிட்டி பதற்றமாக சொன்ன அதே நேரத்தில்..

“ஏர்ப்போர்ட்ல பாம் வச்சிருக்காங்களாம்.. இன்னும் அஞ்சு நிமிஷத்துல வெடிக்கப் போகுதாம்.. எல்லாரும் ஓடுங்க.. ஓடுங்க..!!”

வெளியில் கசிந்த விஷயத்தை அறிந்துகொண்ட யாரோ.. டப்பிங் பட டயலாக் எஃபக்டில் கத்தினார்கள்..!!

அவ்வளவுதான்..!! அத்தனை நேரம் தேகத்தில் மழை பெய்த எருமை மாடுகளாய், அங்குமிங்கும் ஊர்ந்துகொண்டிருந்த மனிதர்கள்.. பட்டென வாலில் தீப்பிடித்துக்கொண்ட குரங்குகளாக மாறிப்போயினர்.. ஏர்ப்போர்ட் என்ட்ரன்ஸ் நோக்கி திமுதிமுவென ஓடினர்..!! அத்தனை பேரின் மனதிலும் ஒரு உயிர்ப்பயம்.. அனைவரது முகத்திலும் ஒரு மரணபீதி..!! பயம்.. குழப்பம்.. அவசரம்.. இடைஞ்சல்.. நெரிசல்.. தள்ளுமுள்ளு..!!

எதுவும் புரியாமல் திகைத்தவாறு நின்றிருந்த மீராவை, அந்த செக்யூரிட்டியே..

“வாம்மா..!!” என்றவாறு கைபிடித்து இழுத்து சென்றார்.

ஏர்ப்போர்ட் என்ட்ரன்ஸ்க்கு வெளியே.. அசோக் டெலிஃபோன் பூத்துக்கு அருகாகவே நின்று காத்திருந்தான்..!! எந்த நேரமும் வாசலை கிழித்துக்கொண்டு மனிதக்கும்பல் வெளிப்படும் என்று எதிர்பார்த்திருந்தான்..!!

“அஞ்சு நிமிஷத்துல பாம் வெடிக்கப் போகுது.. ஏர்ப்போர்ட் மொத்தமும் இடிஞ்சு தரைமட்டம் ஆகப்போகுது.. எத்தனை பேரை காப்பாத்த முடியுமோ அத்தனை பேரை காப்பாத்திக்கோங்க..!! எங்களை பகைச்சுக்குற வரைக்கும் இந்தியாவுக்கு இதே நெலமைதான்..!!”

பப்ளிக் டெலிஃபோன் பூத்தில் இருந்து.. ஏர்ப்போர்ட் அத்தாரிட்டிக்கு வடஇந்தியரின் ஸ்லாங்கில் அவன் விடுத்த எச்சரிக்கை.. நிச்சயம் பலனளிக்கும் என்றே அவன் எதிர்பாத்திருந்தான்..!! அவனுடைய எதிர்பார்ப்பு சற்றும் வீணாகவில்லை.. புற்றில் இருந்து புறப்பட்ட ஈசல்களாய்.. அந்த சிறிய நுழைவாயிலில் இருந்து புசுபுசுவென மனிதர்கள் வெளிப்பட்டு.. இவனை நோக்கி ஓடிவந்தனர்..!!

ஆனால்.. ஒருவகையில் அசோக்கிற்கு ஏமாற்றம்தான்..!! அமைதியாய் இயங்கிக்கொண்டிருந்த அந்த ஏர்ப்போர்ட்டுக்குள்.. அத்தனை மனிதர்கள் அடங்கியிருப்பார்கள் என்று அவன் கொஞ்சமும் நினைத்திரவில்லை..!! ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும்.. அடுத்தடுத்து.. வரிசையாகவும் வேகமாகவும் வெளிப்பட.. அவர்களுக்குள் மீராவின் முகத்தை தேடிக்கண்டுபிடிப்பது அவனுக்கு சிரமமாக இருந்தது..!! கருவிழிகளை அப்படியும் இப்படியுமாய் அசைத்து.. காதலியின் அழகுமுகத்தை அந்த மனிதத் தலைகளுக்குள் காணத்துடித்தான்..!!

ஒருவரை ஒருவர் இடித்து தள்ளிக்கொண்டு பயணிகள் அங்குமிங்கும் ஓடினர்.. அவர்களை கட்டுப்படுத்த வேண்டிய செக்யூரிட்டி கார்ட்களும் அவர்களுடன் சேர்ந்து ஓடினர்..!! இடையில் இருந்த சாலையில்.. பாம்ஸ்குவாட் வாகனங்கள்.. தலையில் ஒளிர்ந்த சிவப்பு விளக்குகளுடன்.. ‘வீல்.. வீல்..’ என்று அலறிக்கொண்டு.. எதிர்ப்புறம் சர்ர் சர்ர்ரென விரைந்தன..!!

அப்போதுதான்.. இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி, கொஞ்சம் கொஞ்சமாய் நகர்ந்து வெளியே வந்த மீராவின் முகம்.. அசோக்கின் பார்வையில் விழுந்தது..!! அவளை கண்டுகொண்டதுமே அசோக்கிற்கு அப்படியொரு சந்தோஷம்..!!

“மீரா…!!!!!”

என்று கத்தியே விட்டான். அவன் கத்தியதை மீரா கவனிக்கவில்லை.

“மீரா…!!!!!”

மீண்டும் பெருங்குரலில் கத்தினான்.. இப்போது மீராவின் காதுகளில் இவனது சப்தம் கேட்டுவிட்டது.. உடனே திரும்பி பார்த்தாள்.. அசோக்கின் முகத்தை கண்டதும் அவளுக்குள் ஒரு திகைப்பு கலந்த பூரிப்பு..!!

“அசோக்…!!!!!”

2 Comments

  1. A wonderful love story but in wrong website. But it is also amazing.

Comments are closed.