எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 19 45

“ரொம்ப ஏக்கமா இருந்தா.. இங்கயே இருந்திடவேண்டியதுதான..??”

சப்தம் கேட்டு மீரா திரும்பிப் பார்த்தாள். மனோகர் பல்லிளித்தவாறு நின்றிருந்தான். அவனுடைய கண்களில் டன் டன்னாய் காமம். மீரா அவனுடைய முகத்தை ஏறிட்டு முறைத்தாள். அவனது இளிப்பிற்கு பதில் ஏதும் சொல்லாமல், தனது கையில் இருந்த வீட்டுச்சாவியை அவன் கையில் திணித்தாள். தோளில் அணிந்த பேகுடன், விடுவிடுவென வீட்டு வாசலை நோக்கி நடந்தாள்.

“நீ எப்போவேணா திரும்ப வரலாம் நித்தி.. நானும் ரெடியா இருப்பேன்.. இந்த வீடும் ரெடியா இருக்கும்..!!”

மனோகரின் பேச்சை கண்டுகொள்ளாமல், மீரா வீட்டை விட்டு வெளியே வந்தாள். தயாராக இருந்த டாக்ஸியில் ஏறிக்கொண்டாள். கதவை அறைந்து சாத்தினாள்.

“கெளம்பலாமா மேடம்..??” என்று கேட்ட ட்ரைவருக்கு,

“ம்ம்..!!” என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னாள்.

டாக்ஸி சீரான வேகத்துடன் அண்ணாசாலையில் ஊர்ந்து கொண்டிருந்தது.. மீராவின் மனநிலையோ சீரற்றுப்போய் ஒருவித இனம்புரியாத அழுத்தத்தில் சிக்கி தத்தளிக்க ஆரம்பித்திருந்தது.. இறுகிப்போன முகத்துடனே சாலையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்..!!

தேனாம்பேட்டை சிக்னலை அடைந்தபோது பலத்த போக்குவரத்து நெரிசலில் டாக்ஸி சிக்கிக்கொண்டது..!! வாகனங்களுக்கு மத்தியில் அந்த டாக்ஸி அசையாமல் நின்றிருந்த நேரத்தில்.. எதிர்ப்புறம் இருந்து அந்த கார் மெல்ல மெல்ல நகர்ந்து.. மீராவின் டாக்ஸிக்கருகே பக்கவாட்டில் வந்து நின்றது.. அந்தக்காருக்குள் அமர்ந்திருந்தான் அசோக்..!!!!

இருவரில் ஒருவர் தலையை திருப்பி பார்த்தால் கூட.. அடுத்தவர் முகத்தை கண்டுகொள்கிற மாதிரியான நெருக்கமான நிலை..!! ஆனால்.. இருவருக்கும் ஏனோ அச்சமயத்தில் முகம் திருப்ப தோன்றவில்லை..!! மணிக்கட்டை திருப்பி நேரம் பார்த்து டென்ஷனான மீராவின் கவனமோ.. போக்குவரத்து விளக்குகளின் மீதே படிந்திருந்தது..!! அவளுக்கு ஒரு மீட்டர் தொலைவில் அமர்ந்திருந்த அசோக்கோ.. அருகிலிருந்த பவானியிடம் தவிப்பான குரலில் பேசிக்கொண்டிருந்தான்..!!

“சிந்தாதிரிப்பேட்டைல ஒரு வீடு விடாம சலிச்சு எடுத்தாச்சுக்கா.. இவ வீடு மட்டும் எப்படி மிஸ் ஆச்சுன்னு தெரியல..!!”

“ம்ம்..!! போய் பாக்கலாம் அசோக்.. பொறுமையா இரு..!!”

“வேடிக்கையை பாரேன்.. கம்ப்யூட்டர் க்ளாஸ் அட்டண்ட் பண்றதுக்காக, அவ டெயிலி வடபழனி வந்துபோயிட்டு இருக்கான்னு நான் நெனச்சுட்டு இருந்தேன்.. அவ என்னடான்னா.. உங்க சென்டர்ல ஆர்ட் ஆஃப் லிவிங் க்ளாஸ் எடுக்குறதுக்காக வந்துபோயிட்டு இருந்திருக்கா..!!”

“ம்ம்.. எங்ககிட்ட கவுன்சிலிங் வந்தப்புறம், அவளுக்கு யோகால ரொம்ப ஈடுபாடு வந்திருச்சு அசோக்.. எங்க சென்டர்ல அவளுக்கு ஏதோ ஒரு அமைதி கெடைச்சிருக்கனும்..!! அவளே வாலன்டியரா வந்து ட்யூட்டரா இருக்க ஆசைப்படுறேன்னு சொன்னா.. ரொம்ப நாள் ரெகுலராவும் வந்துட்டு இருந்தா..!! இப்போ கொஞ்ச நாளாத்தான் வர்றது இல்ல.. அவ அம்மா இறந்ததுல இருந்து..!!”

“அ..அவங்க எப்போ இறந்தாங்க..??”

அசோக்கின் கேள்விக்கான பதிலை பவானி தோராயமாக சொல்ல.. சிறு யோசனைக்கு பிறகு அவனால் அந்த காலகட்டத்தை கண்டறிந்துகொள்ள முடிந்தது..!! முன்பொருநாள் பாரில்.. மூச்சுமுட்ட குடித்துவிட்டு மீரா உளறியவையெல்லாம் இப்போது அவனுடைய ஞாபகத்துக்கு வந்தன..!!

“ம்ஹூம்.. வீடு வேணாம்.. நோ வீடு.. வீடு எனக்கு புடிக்கல..!!”

“என்ன வெளையாடுறியா.. வீட்டுக்கு போகலனா உன்னை தேட மாட்டாங்க..??”

“தேட மாட்டாங்க.. வீட்ல யாரும் இல்ல.. நான் மட்டுந்தான்..!!”

அன்றே.. தனியறையில் அவள் தவிப்பும் ஏக்கமுமாக சொன்னதும் இப்போது நினைவுக்கு வந்தது..!!

“என்னை பத்தி கவலைப்பட யாரும் இல்ல.. என் மேல அன்பு காட்டுறதுக்கும் யாரும் இல்ல.. எனக்குன்னு யாருமே இல்லடா..!!”

அந்த நினைவு வந்ததுமே அசோக்கின் மனதை ஒரு இனம்புரியாத உணர்வு அழுத்தி பிசைந்தது..!!

‘ஆறுதலுக்கென்று இருந்த அம்மாவையும் தொலைத்துவிட்ட அவள்.. அன்று எவ்வளவு வேதனையான ஒரு மனநிலையில் இருந்திருப்பாள்..?? அத்தனையும் மனதிலேயே போட்டு புதைத்துக்கொள்ள எப்படி முடிந்தது அவளால்..?? சரியான நெஞ்சழுத்தக்காரி..!!’

இவனுடைய மனநிலை அறியாத பவானி தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தாள்..!!

“அம்மான்னா அவளுக்கு அவ்ளோ பிடிக்கும்.. உலகத்துல அவளுக்குன்னு இருந்த ஒரே ஜீவன் அவ அம்மா மட்டுந்தான்.. அவங்களும் இல்லைன்னதும் ரொம்ப உடைஞ்சு போயிட்டா..!!”

“……………….”

2 Comments

  1. A wonderful love story but in wrong website. But it is also amazing.

Comments are closed.