எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 19 45

அவளும் பதிலுக்கு அந்தப்பக்கம் இருந்து கத்தினாள்..!! குழப்பத்துடன் முண்டியடித்த ஜனங்களை விலக்கிக்கொண்டு.. அசோக்கின் பக்கமாக வரமுனைந்தாள்..!! ஆனால்.. அசோக்கிற்குத்தான் சற்றும் பொறுமை இல்லை.. உடனே அவளிடம் சென்று, அவளை தன்வசப்படுத்திக் கொள்ளவேண்டும் என்பது மாதிரியாக அவனுக்குள் ஒரு உந்துதல்..!!

போக்குவரத்து தடுப்பை தடுப்பை தாண்டி குதித்தான்.. ‘மீரா…!!’ என்று கத்திக்கொண்டே சாலையின் குறுக்காக, மீராவை நோக்கி ஓடினான்.. விர்ரென்று சீறிக்கொண்டு வந்த அந்த கருநீல நிற வாகனத்தை கவனிக்க மறந்தான்..!! படுவேகத்தில் வந்த அந்த ஜீப் அசோக் மீது பலமாக மோதியது.. மோதியவேகத்தில் ‘கிர்ர்ர்ர்ர்ர்ர்’ என்று பிரேக்கடித்து நின்றது..!! ஆகாயத்தில் அசோக் தூக்கி எறியப்பட்டான்.. அவனுடைய தலை தரையில் சென்று நச்சென்று அடித்தது.. முகம் சிமெண்ட் சாலையில் உரசி உராய்ந்தது.. உடல் கடகடவென உருண்டு ஓடியது..!!

“அசோக்..!!!”

பார்த்த காட்சியில் பதறிப்போன மீரா.. அலறிக்கொண்டே அவள்பக்கம் இருந்த போக்குவரத்து தடுப்பில் ஏறி குதிக்கவும்.. அம்பு தைத்த பறவையாய், அவளுடைய காலடியில் சென்று அசோக் சொத்தென்று விழுவதற்கும்.. சரியாக இருந்தது..!!

“அசோக்..!!!”

மீரா அவசரமாய் குனிந்து அசோக்கை கையில் அள்ளிக்கொண்டாள்.. அவனுடைய முகத்தில் சிராய்ப்பு ஏற்பட்டு, ஆங்காங்கே தோல் பெயர்ந்து வெளிறிப் போயிருந்தது.. நெற்றியில் அடிப்பட்ட இடத்திலிருந்து சிவப்பாய் ரத்தம் வழிந்தது.. அவனுடைய கண்கள் பாதி செருகிப் போயிருந்தன.. மார்புகள் படக் படக்கென காற்றுக்காக அடித்துக்கொண்டன..!! அத்தனை வேதனையிலும் அவனுடைய முகத்தில் மட்டும் ஒரு அசாத்திய நிம்மதி.. நினைத்ததை சாதித்துவிட்ட நிம்மதி..!!

“ஐயோ.. ரத்தம்..!!!!” மீரா அழுகுரலில் அலறினாள்.

“எ..என்னடா இது.. ஏன்டா இப்படிலாம் பண்ற..??” புலம்பி அரற்றினாள்.

பாதி செருகிய விழிகளுடனும்.. படபடக்கிற உதடுகளுடனும்.. அசோக் இப்போது திக்கி திணறி பேசினான்..!!

“நா..நான்.. நான்தான் சொன்னேன்ல.. ந..நம்ம காதல் நம்மள சேர்த்து வைக்கும்னு..!! ந..நம்மள.. நேருக்கு நேர்.. மீட் பண்ண வச்சிருச்சு பாத்தியா..??”

“ஐயோ.. அசோக்..!!!!” அலறிய மீரா அசோக்கை தன் மார்போடு இறுக்கி அணைத்துக் கொண்டாள்.

“போ..போயிடாத மீரா.. எ..என்னை விட்டு போயிடாத.. ப்ளீஸ்..!!” கெஞ்சலாக கேட்டுக்கொண்டே.. அசோக் கொஞ்சம் கொஞ்சமாக மயக்கத்துக்கு சென்றான்..!!

“இல்லடா.. போகமாட்டேன்.. உன்னை விட்டு எங்கயும் போகமாட்டேன்..!!”

அவனது தலையை தாங்கிப் பிடித்திருந்த மீராவின் உள்ளங்கையில்.. ஈரமாய் எதுவோ பிசுபிசுக்க.. கையை வெளியே எடுத்து பார்த்தாள்..!! ரத்தம்..!!! அவனுக்கு பின்னந்தலையிலும் அடிபட்டிருக்கிறது என்று மீராவுக்கு புரிய.. நெஞ்சுக்குள் அடைத்த துக்கத்துடன் ‘ஓ’ வென்று கத்தினாள்..!!!

“யாராவது ஹெல்ப் பண்ணுங்களேன்.. ப்ளீஸ்..!!!”

அங்குமிங்கும் அவசரமாக ஓடிக்கொண்டிருந்த மக்களைப் பார்த்து மீரா கெஞ்சலாக அலற.. அவளுடைய குரல்கேட்டு முதல் ஆளாக உதவிக்கு ஓடிவந்தான் அவன்.. அசோக்கையும் மீராவையும் ஆக்சிடன்டலாக இடித்து தள்ளிய அதே குண்டு ஆசாமி..!!

ஆழ்ந்த மயக்கத்தில் அசோக் இருந்திருந்தாலும்.. அந்த மயக்கம் முழுவதையும் மீராவே நிறைத்திருக்க வேண்டும்..!! அவள் தன்னுடன் இருப்பாளா.. இல்லை விட்டுச் சென்றுவிடுவாளா என்கிற ஏக்கம் அந்த மயக்கமும் முழுவதிலும் விரவிக் கிடந்திருக்க வேண்டும்..!! அதனால்த்தான்.. மயக்கத்தில் இருந்து விடுபட்டதுமே..

“மீரா..!!!”

என்று பதறியடித்துக்கொண்டே எழுந்தான்.. எழுந்ததுமே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறோம் என்பதை அவனால் உணர்ந்துகொள்ள முடிந்தது.. எதிரே கவலையாக அமர்ந்திருந்த பாரதியும், மணிபாரதியும் காணக்கிடைத்தார்கள்.. ஆனால் அவனுடைய கண்களோ மீராவையே பரிதவிப்புடன் தேடின..!!

2 Comments

  1. A wonderful love story but in wrong website. But it is also amazing.

Comments are closed.