எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 19 45

அசோக் அந்த புகைப்படத்தை கையில் எடுத்து பார்த்தான்..!! பார்த்ததுமே அவனது விழிகள் படக்கென விரிந்து கொண்டன.. இருதயம் வெடுக்கென சுண்டி விடப்பட்டு துடித்தது.. நாடிநரம்பெல்லாம் ஜிவ்வென்று ஒரு அதிர்வலை.. நாளங்களிலெல்லாம் ரத்தம் புது வேகத்துடன் பீய்ச்சியடித்தது..!!

எத்தனை நாட்கள் அந்த கண்களை மணிக்கணக்கில் பார்த்தவாறு அமர்ந்திருப்பான்..?? எத்தனை காதலுடன் அந்த விழிகளின் ஒவ்வொரு மில்லி மீட்டரையும் பார்த்து ரசித்திருப்பான்..?? அந்த கண்கள்தானே அவனுடைய படுக்கையறை சுவற்றை முழுதாக ஆக்கிரமித்திருக்கின்றன.. அந்த பார்வைதானே அவனது விழிவழி பாய்ந்து, இதயத்தை சூழ்ந்து பிசைந்தது..!! புகைப்படத்தை பார்த்த அந்த நொடியே அவனால் கண்டுகொள்ள முடிந்தது..அவனையும் அறியாமல் அவனது உதடுகள் முணுமுணுத்தன..!!

“மீரா..!!!!!”

அசோக் சோபாவில் இருந்து எழுந்து, அந்த புகைப்படத்தையே திகைப்பாக பார்த்துக் கொண்டிருக்க.. சங்கீதா கீழே விழுந்த புத்தகத்தை, கையால் அள்ளி வாரி எடுக்க.. டிவியில் அந்த வாசகத்துடன் பாண்ட்ஸ் விளம்பரம் நிறைவு பெற்றது..!!

“இப்போ வந்ததுல லவ் ஸ்டோரில ட்விஸ்ட்..??”

காதலியின் புகைப்படத்தை கையில் ஏந்தியிருந்த அசோக்.. இதயத்தை ஆட்கொண்ட அந்த இன்ப அதிர்ச்சியில்.. சில வினாடிகள் சிலை போலவே உறைந்திருந்தான்..!! வெகுதூரம் ஓடிக்களைத்தவன் போல அவனுக்கு மூச்சிரைப்பு ஏற்பட்டது.. வெடவெடத்த விரல்களால் புகைப்படத்தை பற்ற கடினமாயிருந்தது..!! உடலெல்லாம் ஜிலீரென்று ஒரு சிலிர்ப்பு.. உள்ளமெல்லாம் ஜிவ்வென்று ஒரு பூரிப்பு..!! சில வினாடிகள்தான்.. உடனடியாய் அவனை ஒரு பரபரப்பு தொற்றிக்கொண்டது..!!

“மம்மிஈஈஈஈ..!!” என்று கத்திக்கொண்டே உள்ளறைக்கு ஓடினான்.

“என்னடா..??” பாரதி கிச்சனில் இருந்து எட்டிப் பார்த்தாள்.

“மீ..மீரா.. மீரா மம்மி..!!” நடுநடுங்கிய கையிலிருந்த புகைப்படத்தை அவளிடம் நீட்டினான்.

“மீ..மீராவா..??” புகைப்படத்தை கையில் வாங்கிப் பார்த்த பாரதிக்கு எதுவும் புரியவில்லை.

“இ..இந்த ஃபோட்டோ.. இ..இது.. இது மீரா மம்மி.. இ..இது.. எ..என் மீராதான்.. ச..சந்தேகமே இல்ல..!!” உள்ளத்தில் இருந்த தவிப்பில் உதடுகள் படபடக்க, வார்த்தைகள் தெளிவாக வெளிவர மறுத்தன.

“ஓ..!! இ..இது.. இது எப்படி..??” பாரதி சந்தோஷமும், குழப்பமுமாய் மகனை ஏறிட்டாள்.

“நா..நான்.. நான் உன்கிட்ட சொல்லிருக்கேன்ல.. அ..அந்தப்பொண்ணு..”

“எந்தப்பொண்ணு..??”

“அ..அதான் மம்மி.. அந்த மும்தாஜ்.. எ..எனக்கு யோகா சொல்லி தந்த பொண்ணு..!!”

“ஆமாம்..!!”

“அ..அந்தப்பொண்ணுதான்.. அ..அவ… அவங்க.. படிக்கிறதுக்கு எனக்கு ஒரு புக் தந்தாங்க மம்மி.. அ..அந்த புக்குக்குள்ளதான் இந்த ஃபோட்டோ இருந்தது..!!”

“அ..அப்படினா..??”

“ஆமாம் மம்மி..!!! அ..அந்த மும்தாஜ்க்கு மீரா பத்தி தெரிஞ்சிருக்கணும்.. அவங்கட்ட விசாரிச்சா மீராவை எப்டியாவது கண்டுபுடிச்சுடலாம்..!! யெஸ்.. யெஸ்.. யெஸ்..!!!!”

இப்போது பதற்றம் சற்றே குறைந்து நம்பிக்கை தெறிக்கிற குரலில் அசோக் உற்சாகமாக சொன்னான். அவனது உற்சாகம் அவனுடைய அம்மாவிற்கும் தொற்றிக்கொண்டது.

“நெ..நெஜமாத்தான் சொல்றியாடா.. எ..என்னால நம்பவே..”

ஆச்சரியத்தில் பேச்சு வராமல் பாரதியும் தடுமாறினாள்..!! அசோக்கும் அவளுடைய பேச்சுக்கு காது கொடுக்கிற நிலையில் இல்லை.. அவசரமாக அடுத்த அறைக்கு ஓடினான்.. சார்ஜரை பிடுங்கி எறிந்து தனது செல்ஃபோனை தனியே பிரித்தெடுத்தான்.. பதற்றத்தில் நடுங்கிய விரல்களுடன் மும்தாஜின் தொடர்பு எண்ணை தேடினான்..!!

2 Comments

  1. A wonderful love story but in wrong website. But it is also amazing.

Comments are closed.