எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 15 53

“அவருக்கு அந்த மாதிரி டிஸ்டர்ப் பண்றது பிடிக்காது..!! முக்கியமா.. அவர் அந்த ரூமுக்குள்ள போறப்போலாம்..!!”

“ஹ்ம்ம்..!! அந்த ரூம்கதவு வெளிப்பக்கமா லாக் ஆகிருந்ததா ட்ரைவர் சொன்னான்..!! ரூமுக்குள்ள இருந்துக்கிட்டு.. கண்டிப்பா உங்க ஹஸ்பண்டால அதை பண்ணிருக்க முடியாது.. சுஜியும் அந்த அளவுக்கு ஹைட்லாம் கிடையாது..!!” ஸ்ரீனிவாச பிரசாத் சுற்றி வளைக்க,

“நான்தான் லாக் பண்ணினேன்..!! நேத்து நைட்டு அவர் அந்த ரூமுக்குள்ள போன கொஞ்ச நேரத்துல.. நானேதான் கதவை வெளிப்பக்கமா லாக் பண்ணினேன்..!!” நிர்மலா நேரடியாகவே விஷயத்துக்கு வந்தாள்.

“ஏன்..??”

“அ..அது.. ஸம்டைம்ஸ் நான் அந்த மாதிரி பண்ணுவேன்.. இல்லனா அவரை கண்ட்ரோல் பண்றது ரொம்ப கஷ்டமா இருக்கும்..!! அதுவும்.. முக்கியமா.. அவர் அந்த ரூமுக்குள்ள போறப்போலாம்..!!”

“ஓ..!!”

“அதும் இல்லாம.. நேத்து.. என் மேல அவர் ரொம்ப கோவத்துல வேற இருந்தாரு.. அதான்..!!”

எந்த ஒரு படபடப்பும் இல்லாமல்.. நிர்மலா நிதானமாக பதில் சொன்னாள்.. பதில் சொன்னதோடு மட்டுமல்லாது, மகளுக்கு அவ்வப்போது பால்சாதம் ஊட்டுகிற கவனமும் அவளிடம் இருந்து சிதறவில்லை..!! ஸ்ரீனிவாச பிரசாத் சில வினாடிகள் அவளையே கூர்மையாக பார்த்தார்.. அந்த கூர்மையான பார்வையில் ஒருவித குறுகுறுப்பும் கலந்திருந்தது..!!

“உங்ககிட்ட இன்னொன்னு கேக்கணும்..!!”

“என்ன..??”

“அவருக்கு கார்டியாக் அரஸ்ட் மாதிரி இருக்குது..!! கண்டிப்பா.. ரொம்ப வேதனைக்கு அப்புறந்தான் அவரோட உயிர் பிரிஞ்சிருக்கணும்.. வலில துடிச்சிருக்கணும்.. சத்தம் போட்ருக்கணும்.. கத்திருக்கணும்..!!” சொன்ன ஸ்ரீனிவாச பிரசாத் சற்று நிறுத்தி,

“நீங்க போய் அவரை பாக்கலையா..?? ஐ மீன்.. அவர் சத்தம் போட்டது உங்களுக்கு கேக்கலையா..??” என்று குதர்க்கமாக கேட்டார்.

“இல்ல.. நான் போய் பாக்கலை..!! ஐ மீன்..அவர் சத்தம் போட்டது எனக்கு கேக்கலை..!!”

குதர்க்கமான கேள்விக்கு, நிர்மலாவும் குதர்க்கமாகவே பத்தி சொல்ல.. இதழில் அரும்பிய ஒரு மெலிதான புன்னகையை, ஸ்ரீனிவாச பிரசாத்தால் தவிர்க்க முடியவில்லை.. புன்னகைத்தார்..!!

“ஏன் சிரிக்கிறீங்க..??”

“நத்திங்..!!”

“என் மேல சந்தேகப்படுறீங்களா.. அவரோட சாவுக்கு நான் காரணமா இருந்திருப்பேன்னு..??”

“ம்ம்ம்ம்.. அப்படி சொல்லமுடியாது..!!”

“அப்புறம்..??”

“சந்தேகம்னு இல்ல.. பட்.. மனசுல சின்னதா ஒரு உறுத்தல்..!! போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வர்ற வரை அந்த உறுத்தல் இருந்துட்டேதான் இருக்கும்..!!”

“ஓ..!! அது என்ன உறுத்தல்னு நான் தெரிஞ்சுக்கலாமா..??”

“ஹ்ம்ம்.. எப்படி சொல்றது.. சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே..??”

“இல்ல.. சொல்லுங்க..!!”

“நான் இந்தமாதிரி நெறைய சாவு பாத்திருக்கேன் மிசஸ் நிர்மலா.. அதே மாதிரி.. செத்துப்போன ஆளுங்களோட பொண்டாடிங்கள்லாம்.. எந்த மாதிரி ஆர்ப்பாட்டம் பண்ணுவாங்க, அழுது ஒப்பாரி வைப்பாங்கன்னும் பாத்திருக்கேன்..!! ஆனா நீங்க.. You are different..!! புருஷன் போயிட்டாரேன்ற அதிர்ச்சியோ, துக்கமோ, கவலையோ.. துளியூண்டு கூட உங்ககிட்ட இல்ல.. ஏன் அப்படி..?? You are so Cool, Calm And Collected..!!! அதுதான் அந்த உறுத்தல்..!!”

ஸ்ரீனிவாச பிரசாத் கேட்ட அந்த கேள்வி.. அசோக்கிற்கும், கனகராஜனுக்குமே அவரவர் மனதில் இருந்தது..!! இப்போது அவர் அந்த கேள்வியை கேட்டதும்.. அவர்களுமே.. ‘என்ன பதில் சொல்லப் போகிறாள்’ என்பது மாதிரியான ஒரு ஆர்வத்துடன் நிர்மலாவை பார்த்தனர்..!! நிர்மலா சில வினாடிகள் எதுவும் பேசவில்லை.. கேள்வி கேட்ட ஸ்ரீனிவாச பிரசாத்தின் முகத்தையே அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தாள்..!!

பிறகு என்ன நினைத்தாளோ.. மடியில் அமர்ந்திருந்த தனது மகளிடம் திரும்பினாள்.. அவளது வாயைச்சுற்றி அப்பியிருந்த சாதத்துணுக்குகளை, புடவைத்தலைப்பால் சுத்தம் செய்தாள்..!! அவர்கள் பேசிக்கொண்ட விஷயத்தை அரைகுறையாக புரிந்துகொண்டு.. குழப்பம் அப்பிய கண்களுடன் மருட்சியாக பார்த்துக்கொண்டிருந்த மகளிடம்.. மெல்லிய குரலில் சொன்னாள்..!!

“சுஜிக்குட்டிக்கு ஒரு விஷயம் தெரியுமா..??”

“தெரியாதே..!!”

“டாடி.. செத்துப் போயிட்டாரு..!!”

“நம்ம டாடியா..??”

“ம்ம்..!!”