எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 15 51

“……………..”

“கேக்குறேன்ல..?? பதில் சொல்லுடா..!! இப்படி இருக்குறது உனக்கே வெறுப்பா இல்ல.. மாறணும்னு தோணல..??”

“இல்ல.. தோணல..!! எனக்கு இப்படி இருக்குறதுதான் புடிச்சிருக்கு..!!”

“அப்படியே அறைஞ்சுடுவேன்..!! ஏன்டா இப்படி என்ன சொன்னாலும் புரிஞ்சுக்க மாட்டேன்ற..??”

“உங்களுக்குத்தாண்டா புரியல.. என் மனசைப் பத்தி யாருக்கும் புரியல.. எதுவும் புரியல..!!”

“ப்ச்.. உன் வேதனையை எங்களால புரிஞ்சுக்க முடியுதுடா..!! கஷ்டந்தான்.. அதுக்காக நீ இப்படியேதான் இருப்பேன்னா என்ன அர்த்தம்..?? உன்னை பார்த்தா எங்களுக்கு ரொம்ப கவலையா இருக்குடா..!!” கிஷோர் ஆதங்கத்துடன் கத்தினான்.

“……………..”

அசோக் அமைதியாய் இருக்க, கிஷோர் இப்போது சற்றே சாந்தமானான். குரலை இதமாக மாற்றிக்கொண்டு சொன்னான்.

“இங்க பாரு.. நாங்கதான் உன்னை ஏத்திவிட்டோம்.. லவ் பண்ணி காட்டுன்னு சவால்லாம் விட்டோம்..!! இப்போ நாங்களேதான் சொல்றோம்.. போதுண்டா மச்சி.. இதை முடிச்சுக்கலாம்.. It’s over now.. try to understand the fact..!!”

“fact-ஆ.. என்ன fact..??”

“அவ இனிமே திரும்ப வரப்போறது இல்லடா.. அவ்ளோதான்.. she’s gone..!! அவளை கண்டுபிடிக்கிறதுக்கும் எந்த வழியும் இல்ல..!! அவ இனிமே உன் லைஃப்ல இல்ல.. That’s the fact..!!”

“So..??”

“Accept the fact ashok..!! அவ உனக்கு வேணாம்.. அவளை மறந்து தலைமுழுகு..!!”

அசோக் மீதிருந்த அன்பில், ஸ்ரீனிவாச பிரசாத் செய்த அதே தவறையே கிஷோரும் செய்தான்.. ஸ்ரீனிவாச பிரசாத்தின் மீது வந்த அதே அர்த்தமற்ற கோபமே, கிஷோர் மீதும் அசோக்கிற்கு வந்தது..!! அவனுடைய உடம்பில் உடனடியாய் ஒரு நடுக்கம் ஏறியிருக்க.. நண்பனின் முகத்தை ஏறிட்டு வெறுப்பாக முறைத்தான்..!!

“லைஃப்ல இன்னும் எவ்ளோவோ இருக்கு மச்சி.. Life is larger than love..!!”

சொல்லிக்கொண்டே ஆறுதலாக பற்றிய கிஷோரின் கையை, அசோக் வெடுக்கென உதறினான். அவனுடைய செய்கை கிஷோருக்கு மீண்டும் கோவத்தை கிளறிவிட்டது.

“ஏய்..!!” என்றான் எரிச்சலாக.

“போடா..!! புத்தி சொல்ல வந்துட்டான்.. பெரிய புடுங்கி மாதிரி..!! மறக்கனுமாம்..!!! ம..மறக்கலாம் முடியாது.. என்னை மாத்திக்கவும் முடியாது.. நான் இப்படியேதான் இருப்பேன்.. போதுமா..??” அசோக் உறுதியான குரலில் சொல்ல, கிஷோரின் ஆத்திரம் இப்போது உச்சபட்சத்தை எட்டியது.

“ஓஹோ.. இப்படியேதான் இருப்பியோ..?? உன்னை இருக்க விட்டாத்தான..??”

சூடாக சொன்ன கிஷோரின் பார்வையில்.. சுவற்றில் ஒட்டப்பட்டிருந்த மீராவின் கவிதைக்காகிதம் கண்ணில் பட்டது.. உடனே..

“மொதல்ல இதெல்லாம் ஒழிச்சு கட்டனும்..!!”

என்று கருவியவாறு அந்த காகிதத்தை நோக்கி சென்றான்..!! அவனுடைய எண்ணம் அசோக்கிற்கு உடனே புரிந்து போனது.. கிஷோரை தடுப்பதற்காக அவனும் அவசரமாக அவனை நோக்கி ஓடினான்..!! அதற்குள்ளாகவே கிஷோர் அந்த காகிதத்தை சரக்கென கிழித்து எடுக்க.. அசோக் பாய்ந்து சென்று அதை அவனிடமிருந்து பறித்தான்.. பறித்த வேகத்தில் புறங்கையை வீசி, கிஷோரின் கன்னத்தில் ‘ரப்’பென ஒரு அறை விட்டான்..!! கிஷோருக்கு சுள்ளென்று கோவம் கிளம்பியது.. நிலமையைப்பார்த்து கலவரமாகி வேணுவும் சாலமனும் ஓடிவந்து அவனை தடுப்பதற்குள்ளாகவே.. அவனும் அசோக்கின் கன்னத்தில் பதிலுக்கு அறைந்து விட்டான்..!!

அடிபட்ட வேகமும், ஆல்கஹாலின் போதையும் சேர்ந்து அசோக்கை தடுமாறச்செய்ய.. அவன் அப்படியே சுவற்றில் மோதி.. தள்ளாடிச்சென்று மேஜையில் விழுந்து.. அதிலிருந்த பொருட்களை எல்லாம் கீழே சிதற செய்து.. அவனும் தரையில் போய் பொத்தென்று விழுந்தான்..!! விழுந்த வேகத்தில் எழுந்து வந்து திரும்ப கிஷோரை தாக்கப் போகிறான் என்று எல்லோரும் எதிர்பார்த்திருக்க.. அவனோ தரையில் கிடந்தவாறே கையிலிருந்த காகிதத்தை பார்த்தான்.. ‘சேதம் அதிகமில்லை’ என்று சந்தோஷப்பட்டான்..!! கசங்கிப் போயிருந்தது அந்த காகிதம்.. அதை தரையில் விரித்து வைத்து.. கைகளால் தடவி அந்த கசங்கலை நீக்க முயன்றான்..!!

“ஒன்னுல்ல.. ஒன்னுல்ல..!!”

என்று பித்துப் பிடித்தவன் மாதிரி முனுமுனுத்தவாறே அந்த காகிதத்தின் கசங்கலை நீக்கினான். நண்பர்கள் மூவருமே அவனுடைய செய்கையை மிரட்சியாக பார்த்தனர்.