எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 15 53

“எ..என்னடா இவன்..??” கிஷோர் நொந்துபோனவனாய் சொன்னான். இப்போது வேணு கிஷோரின் புஜத்தை பற்றி,

“அவனை விடு மச்சி..!! நீ வா.. உன்கிட்ட கொஞ்சம் பேசணும்..!!”

என்று அவனை இழுத்து சென்றான். இருவரும் அலுவலகத்தை ஒட்டியிருந்த அந்த பால்கனியை நோக்கி நகர்ந்தார்கள். அசோக்கையே மேலும் ஒருசில வினாடிகள் பரிதாபமாய் பார்த்த சாலமன், பிறகு அவர்களை பின்தொடர்ந்து ஓடினான்.

பால்கனியை அடைந்தவர்கள், நிலைமையின் டென்ஷன் குறைக்க சிகரெட் புகைத்தனர். வேணுவே ஆளுக்கொரு சிகரெட் எடுத்துக்கொடுத்து, அவனும் ஒன்று பற்ற வைத்துக்கொண்டான். புகையை ஊதிக்கொண்டே கிஷோரிடம் சொன்னான்.

“என்ன மச்சி நீ.. அவன்தான் அப்படி இருக்கான்னா.. நீயும்..!!”

“ப்ச்.. வேற என்னடா பண்ண சொல்ற..?? அவ போய் ரெண்டு வாரம் ஆச்சு.. இவன் கொஞ்சம் கூட மாறுற மாதிரி தெரியல..!! இப்படியே விட்டா ஆளே ஒன்னும் இல்லாம போயிடுவாண்டா..!!”

“புரியுது மச்சி..!! ஆனா அவன் கூட இப்படி மல்லுக்கட்டுறதுல எந்த பிரயோஜனமும் இல்லடா.. அதை நீ மொதல்ல புரிஞ்சுக்கோ..!! அவன் எந்தமாதிரி ஸ்டேட்ல இருக்கான்னு தெரிஞ்சா.. இப்படிலாம் அவன்கூட சண்டை போடமாட்ட..!!” வேணு சொல்ல, கிஷோர் இப்போது குழப்பமாய் நெற்றி சுருக்கினான்.