எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 15 53

நிர்மலா ஒருவித வெறுப்புடனே சொல்லிமுடிக்க, ஸ்ரீனிவாச பிரசாத் இப்போது வாசல் பக்கம் திரும்பினார். இதழில் கசிகிற ஒரு புன்னகையுடன் கனகராஜனை கேட்டார்.

“யார்ன்னு தெரியுதா கனகு..??”

“ந..நம்ம.. நெற்குன்றம் காசியா இருக்குமோன்னு தோணுது ஸார்..!!”

“சந்தேகமே வேணாம்.. அவனேதான்..!! அம்பதுக்கும் நூறுக்கும் பொட்டலம் போட்டுட்டு இருந்த நாயி.. ‘Coke peddling’ பண்ற அளவுக்கு பெரிய ஆளாயிட்டான் பாத்தியா..?? த்தா.. கைல மாட்டட்டும்..!!” கருவிய ஸ்ரீனிவாச பிரசாத், மீண்டும் நிர்மலாவின் பக்கம் திரும்பிக் கொண்டார்.

“நீங்க சொல்ற ஆளு பேரு காசி..!! அவன் மேல ஏற்கனவே நாலஞ்சு கேஸ் இருக்குது.. போலீஸ்க்கே டிமிக்கி குடுத்துட்டு திரியிறவன்..!!”

“ம்ம்..!!”

“ஹ்ம்ம்… எதுக்கும்.. அவனோட ஃபோட்டோவை அப்புறம் வந்து காட்ட சொல்றேன்.. நீங்க ஒருதடவை பார்த்து அவன்தானான்னு கன்ஃபார்ம் பண்ணிருங்க.. சரியா..??”

“ஷ்யூர்..!! ம்ம்ம்ம்… அப்படினா.. அ..அந்த போதை மருந்துதான் அவர் உயிர் போனதுக்கு காரணமா..??”

“அது போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தப்புறந்தான் தெரியும்..!!”

“ஓ..!!”

“அதுக்கு முன்னாடி.. எனக்கு இன்னும் சில விஷயங்கள் க்ளியர் பண்ணிக்கணும்..!!”

“கேளுங்க..!!”

“ம்ம்ம்… நேத்து நைட்.. வீட்ல யாரார்லாம் இருந்தீங்க..??”

“நான்.. அவர்.. அப்புறம் சுஜி.. மூணு பேர்தான்..!! அவர் வீட்டுக்கு வந்த கொஞ்ச நேரத்துலயே.. வேலைக்காரியும் ட்ரைவரும் கெளம்பிட்டாங்க..!!”

“அவரை கடைசியா எப்போ உயிரோட பாத்தீங்க..??”

“நேத்து நைட்டு..!!”

“அதான் எப்போ..??”

“அ..அந்த ஆள்ட்ட பேசிட்டு.. அப்புறம் அந்த ரூமுக்குள்ள போனாரு.. அதுதான் கடைசி..!!”

“அப்போ டைம் என்ன இருக்கும்..??”

“எட்டு மணி இருக்கும்..!!”

“ம்ம்.. நைட்டு எட்டு மணிக்கு உள்ள போயிருக்காரு.. மிட்னைட்க்குள்ள அவர் உயிர் போயிருக்கனும்..!! காலைல எட்டு மணிக்கு.. கார் ட்ரைவர் வந்து பாத்துத்தான்.. அவர் இறந்து போன விஷயம் எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கு..!! அப்படித்தான..??” ஸ்ரீனிவாச பிரசாத் கேட்டுக்கொண்டிருக்க.. இடையில் புகுந்த சுஜி..

“யாரு மம்மி எறந்து போயிட்டாங்க..??”

என்று மழலைக்குரலில் அம்மாவிடம் கேட்டாள்..!! உடனே.. அறையில் இருந்த மற்ற நால்வரும்.. முகத்தில் ஒருவித திகைப்புடன் அந்தக் குழந்தையை ஏறிட்டனர்..!! அந்த மாதிரி ஒரு சூழ்நிலையை சந்திப்பது.. அதுவே அவர்களுக்கு முதல்முறை..!! ஒரு சில வினாடிகள் அமைதிக்கு பிறகு.. பதிலேதும் சொல்லாமல்.. பால்சாதத்தாலே மகளின் வாயை அடைத்தாள் நிர்மலா..!! பிறகு.. ஸ்ரீனிவாச பிரசாத்திடம் திரும்பி சொன்னாள்..!!

“ஆ..ஆமாம்..!!”

“ம்ம்.. காலைல வரைக்கும்.. அவரை போய் பாக்கணும்னு உங்களுக்கு தோணலையா..??”

“இல்ல..!!”

“ஏன்..??”