வசம்மான ஜாதிமல்லி – Part 1 89

சாப்பிடும் போது கணவன் மனைவி மற்றும் குழந்தைகள்கூட இருக்கும் வழக்கமான உரையாடலில் ஈடுபட முயற்சித்தாள்.

“மீரா நாம வீட்டுக்கு போகம் முன்பு, போய் பிரபு அப்பாவை பார்த்திட்டு போவோம், அவருக்கு உடல் நிலை சரி இல்லையாம்.”

பிரபு பெயரை கேட்ட போது அவள் சில வினாடிகளுக்கு உறைந்து போனாள். பிறகு சுதாரித்துக்கொண்டு, “சரிங்க,” என்றாள்.

அவர்களது கார் பிரபுவின் வீட்டை நெருங்கும் போது அவளுடைய கண்கள் தானாகவே பயன்படுத்தப்படாத பழைய வீட்டிற்கு திரும்பின. சரவணன் அதை கவனித்தான். அங்கே தானே அவர்கள் இடையே கள்ள உறவு இருப்பது அவனுக்கு உறுதியாக தெரியவந்தது.

“வாங்க தம்பி, ” என்று பிரபுவின் அம்மா சரவணனை அன்போடு அழைத்தாள்.

“வா மா,” அந்த அன்பு மீராவை அலைக்கும் போது அந்த குரலில் இல்லை.

“அப்பா எப்படி இருக்கார்?” என்று சரவணன் விசாரித்தான்.

“இப்போதைக்கு தேவல, ரூமில் தான் இருக்கார், போய் பாருங்க.”

அவர்கள் ரூம் உள்ளே நுழைந்தார்கள் அங்கே மெத்தையில் படுத்திருந்த பிரபுவின் தந்தை அருகில் பிரபுவின் தங்கை அமர்ந்து இருந்தாள்.

“ஏய் பாப்பு, நீ இங்கே தான் இருக்கியா?” என்றான் சரவணன்.

“வாங்க அண்ணா, வாங்க மதனி, ஹேய் குட்டி பசங்கள வாங்க,” என்று எல்லோரையும் வரவழைத்தாள்.

“பாப்பு அவள் அப்பாவை பார்க்க வந்திருக்கு, நாளைக்கு அவள் புருஷன் அவளை அழைத்து செல்ல வருகிறார்,” என்று பிரபுவின் அம்மா கூறினார்.

“எப்படி பா உடல் இப்போ இருக்கு,” என்று பாசத்தோடு சரவணன் விசாரித்தான்.

“இப்போது பரவாயில்லை,” என்று வலுவில்லாத குரலில் அவள் பதில் அளித்தார்.

“எப்படி இருக்கீங்க தாத்தா, ” என்று கோரஸாக சரவணன் குழந்தைகள் கேட்டார்கள். அவர்களை பார்த்து பிரபுவின் தந்தை புன்னகைத்தார்.

அவர் தன் மனைவியை அர்த்தத்தோடு பார்க்க அவள், மீரா, பாப்பு மற்றும் குழந்தைகளை, “வாங்க எல்லோரும், ஹாலுக்கு போவோம், காப்பி போட்டு தரேன்,” என்று அழைத்து சென்றார்.

பிரபுவின் தந்தை, சரவணனை அவர் அருகில் அமர சொன்னார். சரவணன் கைகளை பற்றிக்கொள்ள அவர் கைகள் நீட்ட சரவணன் அவர் கைகளை முதலில் பற்றிக்கொண்டான்.

“ஐயா, உன்னை பார்க்கும் போது எல்லாம் எனக்கு குற்றமாக இருக்கு. என் குடும்பம் உனக்கு எவ்வளவு தீங்கு செய்துவிட்டது,” அவர் மெல்லிய குரலில் சொன்னார்.

“அப்படி சொல்லாதீங்க அப்பா, பிரபு ஒருவன் செய்த தப்புக்கு ஏன் குடும்பத்தையே தப்ப சொல்லுறீங்க. ஏன் இந்த தப்புக்கு மீராவுக்கு பங்கு இல்லையா, அல்லது என் கவனிப்பு இல்லாமையும் எந்த தப்பு உண்டானதுக்கு காரணம் இல்லையா. வேண்டாம் பழைய விஷயங்களை விடுங்க.”

“இல்லை ஐயா உன் மேல் எந்த தப்பும் இல்லை, உன் பெரும் தன்மையில் அப்படி சொல்லுற. உன் மனைவி மேலே கொஞ்சம் தப்பு இருந்தாலும், அவளை கெடுத்த என் மகன் மேலே தான் முழுக்க முழுக்க தப்பு இருக்கு.”

“விடுங்க அப்பா, உங்கள் உடல் இப்படி இருக்க, இப்போவாவது பிரபுவை உங்களை பார்க்க வர சொல்லுங்களேன்.”

“வேண்டாம்,” என்று கத்திய பிரபுவின் அப்பா உடனே பலமாக இரும்ப துவங்கிவிட்டார்.

சரவணன் அவருக்கு தண்ணி குடிக்க கொத்தான். இருப்பாளா கேட்டு பிரபுவின் அம்மா உள்ளே எட்டி பார்த்தார். அவளை தன் காய் அசைவில் பிரபுவின் அப்பா போக சொன்னார்.

“வேண்டாம் தம்பி, நான் அவன் முகத்தில் முழுக்க விரும்புல.”

1 Comment

  1. Nala stroy .writer supera eluthi irukinga next part wait panuran

Comments are closed.