வசம்மான ஜாதிமல்லி – Part 1 75

பிரபு அவன் மாமா பெண்ணை அவசரமாக கல்யாணம் செய்து கொண்டு போன இரண்டு வருடம் மற்றும் சில மாதங்கள் கழித்து …

“அம்மா பூ வாங்கிக்கிங்கொ மா … குண்டுமல்லி இருக்கு, வசம்மான ஜாதிமல்லி இருக்கு…”

அந்த பூக்காரி கூவுவதை கேட்டு மீரா திரும்பி அந்த பூக்காரியை பார்த்தாள். ‘வாசமான ஜாதிமல்லி’ என்று அவள் சொன்னது தான் அவள் கவனத்தை ஈர்த்தது. சற்று நேரம் அவள் கண்கள் அந்த பூக்காரி கூடையில் இருந்த ஜாதிமல்லியை பார்த்துக்கொண்டு இருந்தது. அது அவள் மனதில் அலைபோல் பழைய நினைவுகளை பாய செய்தது. இவ்வளவு காலம் கடந்தும் அந்த நினைவுகள் மறையவில்லை.

அவள் கணவர் வாகனத்தை பார்க் செய்ய சென்றுஇக்கார். வழக்கம் போல வெள்ளிக்கிழமை அன்று புதிஸ்வரர் கோயிலுக்கு வந்து இறுக்கர்கள். இங்கே தானே முதல் முறையாக பிரபுவை சந்தித்தாள். அப்போது அவள் வாழ்க்கையில் இவ்வளவு பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்திட்டு செல்வான் என்று தெரியாது. அந்த பாதிப்பில் இருந்து அவள் இன்னும் மீளவில்லை.

“என்னமா, அப்படியே பார்த்துக்கொண்டு இருக்கீங்க,” என்று அவள் மகளின் குரலை கேட்டபின்பு தான் சுயநினைவுக்கு வந்தாள்.

வாகனத்தை பார்க் செய்துவிட்டு அவர்களை பார்த்துக்கொண்டே அவள் கணவன் சரவணன் அவர்களை பார்த்துக்கொண்டே வருவதை பார்த்து அவள் அந்த பூக்காரியிடம், “வேணாம் எனக்கு குண்டுமல்லியே கொடு,” என்றாள் அவசரமாக.

அவள் கணவன் வந்து சேர்வதுக்கும், அவள் பூவை அவள் கூந்தலில் சூடுவதுக்கும் சரியாக இருந்தது. சரவணன் அந்த பூக்காரியிடம் பணத்தை நீட்டினான்.

“வாங்க கோயில் உள்ளே போவம், ” என்று அவன் குடும்பத்தை உள்ளே அழைத்து சென்றான்.

‘கடவுளே, என் குடும்பத்துக்கு பழைய முழு சந்தோஷத்தை கொடு, அவளுக்கு மனா நிம்மதியை கொடு’ என்று மனதார வேண்டி நின்றான்.

அந்த கோயில் குருக்கள் வந்து அவர்களுக்கு பிரசாதம் கொடுத்துவிட்டு, “ஐயா நல்ல இருக்கீங்களா,” என்று கேட்டார்.

“இருக்கேன் குறுக்கால, எல்லாம் அவன் புண்ணியத்தில்,” என்றான் சரவணன்.

“நீங்க தாவரம்மா ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கும்பத்தோடு வரீங்க, உங்கள் கடவுள் எந்த குறையும் வைக்க மாட்டான். நீங்கள் நினைத்தது போல எல்லாம் நடக்கும்.”

நான் நினைத்த மாதிரியா எல்லாம் நடந்து இருக்கு என்று சரவணன் மனதில் நினைத்துக் கொண்டான். அவன் வழக்கம்போல் ஒரு தூணில் செய்தபடியே உட்கார்ந்து இருந்தான். இன்று கூட மீரா, பூக்காரியின் குடையில் உள்ள ஜாதிமல்லியை தன்னை மறந்த நிலையில் பார்த்துக்கொண்டு இருந்தாள். அநேகமாக அது அவள் பிரபுவுடன் உல்லாசமாக இருந்த நாட்களை நினைவூட்டிருக்கும் என்று சரவணன் மனதில் நினைத்துக் கொண்டான். அதே காரணத்தால் தான் அவனுக்கு ஜாதிமுல்லை பூக்கள் பார்க்கும் போது மனதில் ஒரு வெறுப்பு உண்டாகும். நான் வருவதை பார்த்து அவள் உடனே குண்டுமல்லி பூ வாங்கி சூடிக்கொண்டாள்.

மீரா அவள் குழந்தைகளை கண்காணித்து இருந்தாள். ஆனாலும் அவள் கவனம் முழுதும் அவர்கள் மேலே இல்லாமல் எதோ யோசனையில் இருப்பது போல இருந்தது. அதை கவனித்த சரவணனுக்கு இது ஒன்றும் புதிதல்ல. அவள் மறைக்க எவ்வளவு முயற்சித்தாலும், அவளுக்கு பழைய நினைவுகள் அவ்வப்போது வந்து வாட்டுவதை அவன் கவனிக்க தவறவில்லை.

“நான் எப்படி பிரபு போன பிறகு எல்லாம் பழைய சந்தோசம்மான நிலைக்கு மாறிவிடும் என்று தப்பு கணக்கு போட்டேன்,” என்று அவனுக்கு எப்போதும் வரும் கேள்வி மீண்டும் வந்தது.

அப்போது நடந்த நிகழ்வுகள், அவர்கள் இருவரையும் பாதித்திருக்கு. அவனுக்கு அவன் இதயத்தில் ஒருவித காயமும், அவளுக்கு வேறுவிதமான காயமும் ஏற்படுத்தி இருக்கு. அதில் இருந்து விடுபட தெரியாமல் அவர்கள் இருவரும் தவித்து இருந்தார்கள். திருக்குறளில் சொல்லி இருக்கு, “தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு.” அனால் சரவணனுக்கு பொறுத்தவரை நாவினால் மட்டும் இல்லை, கண்களால் பார்த்த காட்சிகளும் எப்போது முழுமையாக ஆறது.

1 Comment

  1. Nala stroy .writer supera eluthi irukinga next part wait panuran

Comments are closed.