“மேல் கோர்ட்டிலே ஏதும் அப்பீல் பண்ண முடியாதா” எனக்கு உடம்பு முழுக்க வியர்க்க தொடங்கியது.
“அங்கேயும் உங்களுக்கு எதிராக தான் பாலன் சார் தீர்ப்பு வரும். நீங்களே பாத்தீங்க இல்ல உங்களுக்கு எதிரா எத்தனை பேர் வந்து சாட்சி சொன்னாங்கனு. இனி ஏதாவது அதிசயம் நடந்தா தான் உண்டு”.
என்னால் அதற்கு மேல் ஒன்றும் பேசவே முடியவில்லை. நான் எழ என்னை மீண்டும் கொண்டு போய் என்னுடைய செல்லில் அடைத்தனர். ஜெயிலில் இருந்த விளக்குகள் யாவும் அணைக்கப்பட்டு கும்மிருட்டாக இருந்தது.
அப்போது மீண்டும் என்னை அழைத்தனர். லாயர் என்னிடம் அவருடைய போனை நீட்டி “வித்யா” என்றார்.
“ஹலோ பாலன்”
“ஹலோ வித்யா, நீயும் லாயர் கூட வருவேன்னு நினைச்சேன்”
“நான் கண்டுபிடிச்சிட்டேன் பாலன், நான் கண்டுபிடிச்சிட்டேன்”
“என்ன வித்யா கண்டுபிடிச்ச”
“உங்களை எப்படி சங்கர் மாட்டிவிட்டான்னு“
“என்ன வித்யா சொல்லுற”
“அர்ச்சனா போன்ல ஸ்பைவேர் ஆப் இன்ஸ்டால் பண்ணி நீங்க ரெண்டு பேரும் பேசினது எல்லாம் ஒட்டு கேட்டு, அன்னைக்கு ராத்திரி அவன் திருட்டு தனமா வீட்டுக்குள்ள வந்து உங்க ரெண்டு பேரையும் மயக்கம் ஆகிட்டு நீங்க அவனை ஸ்பெர்ம் பேங்க்ல டெபாசிட் பண்ண ஸ்பெர்ம் ரூம்ல போட்டு உங்களை மாட்டி விட்டுட்டான்”