என்னால் அன்று இரவு தூங்கவே முடியவில்லை நான் மலையாக நம்பி இருந்த காமெராவும் எனக்கு கைகொடுக்கவில்லை. கடைசியாக நான் அந்த ஷேக்கின் செட்டப் ஆக சென்று அவன் தருவதாக சொன்ன எண்ணெய் கிணறுகள் கூட சங்கர் வேண்டாம் என்று சொன்னது தான் ஆச்சர்யம். ஏனெனில் முதல் தடவை அந்த ஷேக் சொன்னதை கேட்ட சங்கர் என்னை ஒரு எண்ணெய் கிணரே இந்த கார்மெண்ட் கம்பெனியை விட பல மடங்கு லாபத்தை கொடுக்கும் அதனால் அதை எடுத்து கொள்ளசொல்லி வற்புறுத்தினான். இப்போது நானே அதற்கு ஒப்புக்கொண்டு எல்லா எண்ணெய் கிணறையும் அவனுக்கு தருவதாக சொன்னதை அவனை மாதிரி பணத்தாசை கொண்ட பேய் நிராகரித்தது ஆச்சர்யம் மட்டும் இல்லாமல் எனக்கு சந்தேகத்தையும் வர வைத்தது.
உடனே வெரோனிகார்விற்கு கால் செய்தேன்.
“ஹலோ வெரோனிகா”
“சொல்லு வித்யா, இன்னும் தூங்கலையா”
“எனக்கு ஒரு ஹெல்ப் வேணும்”
“என்ன”
“எனக்கு ஒரு சின்ன சந்தேகம் இருக்கு. அது உண்மையா பொய்யான்னு தெரியணும். எனக்கு சங்கர் நம்பர்கூட சேர்ந்து சில நம்பர் ட்ரெஸ் பண்ணி தரணும்”
“ஸ்யூர் வித்யா. நம்பர் சொல்லுங்க”
“துபாய் ஷேக் நம்பர், அர்ச்சனாவின் அம்மா நம்பர் கொடுத்தேன்”
“துபாய் நம்பர் எல்லாம் இங்கே இருந்து என்னாலே ட்ரெஸ் பண்ண முடியாது வித்யா”
“சரி எனக்கு எவளோ சீக்கிரம் முடியுமோ அவளோ சீக்கிரம் இன்பர்மேஷன் கொடுங்க”
பாலன்
மதியம் என்னை சிறையில் பார்க்க வந்த என்னுடைய லாயர் இந்த கேசில் வாதாடினால் தனக்கு கண்டிப்பாக தோல்வி என்பதால் வழக்கில் இருந்து விலகி கொள்ள போவதாக சொன்னார்.
“என்ன சொல்லுறீங்க” எதிரே உட்கார்ந்திருந்த எனது லாயரை ஆச்சரியத்துடன் பார்த்தேன்.
“என்னால வேற ஒன்னும் செய்ய முடியல” இருக்க சாட்சி எல்லாமே உங்களுக்கு எதிராக தான் இருக்கு.
“சரி வேற என்ன தான் வழி இருக்கு சொல்லுங்க”
“இந்தக் கொலையை நீங்கதான் பண்ணிங்க அப்படிங்கறதுக்கு உங்களுக்கு எதிரா நிறைய சாட்சி இருக்கு. நீங்க இதுல இருந்து தப்பிக்க வேறு வழியே இல்லை. நாளைக்கு வரப்போற தீர்ப்பு கூட கண்டிப்பா உங்களுக்கு எதிராகத் தான் வரும். கொஞ்ச நாள் போகட்டும் நான் உங்களுக்கு உடம்பு சரி இல்லை அப்படின்னு ஏதாச்சும் பண்ணி பெயிலில் எடுக்க பார்க்கிறேன்”