காமத்தால் அவன் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் – End 87

“அக்கா நீங்க ஏன் ஓடல”

“உன்னை கண்டிப்பா சுட்டு இருப்பான் அர்ச்சனா”

“ஐயோ சுட்டு இருந்தா என்ன. ஓடி போய் போலீஸ் கூட்டி வந்து இருந்தா என்னோட டெட் பாடி வச்சி கூட பாலன் மாமாவை காப்பாத்தி இருக்கலாம்.”

“நோ அர்ச்சனா, உன்னை பழி கொடுத்து ஒன்னும் அவரை மீட்க வேண்டாம்”.

“ஏய் சத்தம் போடாம தூங்குகடி” ஷேக் கத்தினான். நான் இருவரும் பேசுவதை நிறுத்த அறையே நிசப்தம் ஆனது.

“டப் டப் டப்”

கதவு தட்டப்பட்ட போது தான் அனைவருமே விழித்தோம். நானும் அர்ச்சனாவும் கூட கண்ணயர்ந்து விட்டோம்.

ஷேக் எழுந்தவுடன் மணியை பார்த்தான். மணி 6 ஆகிடுச்சு ஏர்போர்ட் போக கார் வந்துடுச்சு. கடைசியா ஒரு தடவை ஊரை பாத்துகிட்டு ஊரோட காற்றை சுவாசித்து கொள்ளுங்க. இனிமேல் முழிக்கிறப்போ எங்க ஊருல தான்” என்று ட்ராயரில் எதையோ தேடினான்.

“டப் டப் டப்”
“அட இவன் வேற அவசரத்துக்கு பொறந்தவன். மயக்க மருந்தை எடுக்கறதுக்குள்ளே தட்டிகிட்டி இருக்கான்”

“டப் டப் டப்”

“ஒத்த இன்னைக்கு நீ செத்தடா” ஷேக் கடுப்பாகி மயக்க மருந்து தேடுவதை நிறுத்திவிட்டு வேகமாக போய் கதவை திறக்க “டமால்” என்ற சத்தம் கேட்க நானும் அர்ச்சனாவும் அந்த பக்கம் திரும்பினோம் .

“பொத்” என்று சத்தத்துடன் ஷேக் பறந்து வந்து கீழே விழ அங்கே “ஹாய் லேடிஸ்” என்று வெரோனிகா நின்று கொண்டு இருந்தாள்.

“வெளியே குண்டன் ஒருத்தன் இருந்தானே வெரோனிகா”

“இதோ” அவனையும் இழுத்து வந்து எங்கள் இருவரின் கட்டையும் அவிழ்த்து விட்டாள்.

“நல்ல வேலை ரூம் நம்பர் சொன்னே வித்யா. இல்லைனா இவளோ ஈஸியா இருந்து இருக்காது”