யே நீ எந்த காலத்துல இருக்க? Part 2 162

அவள் கன்னத்தை செல்லமாக கிள்ளினான். “இந்த அழகிக்காக எவன்தான் உறுக மாட்டான்?”
“ஆமா நான் உலக அழகி பாருங்க”
“உலக அழகி இல்லேன்னாலும் உள்ளூர்ல அழகிதான்”
“நெஜமா நான் என்ன அவ்ளோ அழகா?” என்று கன்னம் சிவந்து மூக்கு விகசிக்கச் சிணுங்கிச் சிரித்தாள்.
“உன் லிப்ஸ் இருக்கே அது ஒண்ணு போதும். இதழழகி” என்று கொஞ்சியபடி அவள் கன்னத்தில் இருந்த விரலை இறக்கி அவள் உதட்டை வருடினான். அந்த வருடலில் அவள் மூச்சின் லயம் மாறி உடல் சிலிர்த்தது. செந்நிறக் கன்னத்து மென் மயிரிழைகளில் மெல்லிய சிலிர்ப்பிருந்தது.
“ஐய போங்க..” மெலிதான வெட்கச் சிணுங்கலுடன் மூக்கு விடைக்க பெருமூச்சு விட்டு முகம் விலக்கித் திரும்பி டிவியைப் பார்த்தாள். இதயத் துடிப்பின் அதிர்வு விரைவாகியிருப்பதை உணர்ந்தாள். அவளின் காதோர உதிரி முடியை ஒற்றை விரலால் ஒதுக்கிவிட்டு சிவந்த காது மடலையும் காதில் தொங்கியாடும் கம்மலையும் வருடினான். ”உனக்கிது ரொம்ப அழகாருக்கு அகல்”
”என்னது ?”
”கம்மல், செயின் எல்லாம்”
“கீர்த்திக்கு செம பொறாமை”
“ஏன்? ”
“நீங்க எனக்கு இதெல்லாம் வாங்கி தரீங்கனுதான்”
“ஏய்.. இதெல்லாம் எதுக்கு நீ அவகிட்ட சொன்ன?”
“கேட்டா.. சொன்னேன். ஏன்?” அவன் கண் பார்த்து “அவளுக்கு காண்டாகட்டும்னுதான் சொன்னேன்” என்று சிரித்தாள்.
“அவள எதுக்கு தேவையில்லாம கடுப்பாக்கற?”
“அவளும்தான் என்னை கடுப்பாக்குவா. அதெல்லாம் எங்களுக்குள்ள அடிக்கடி நடக்கும்”
“சண்டை போட்டுப்பீங்களா?”
“சண்டையெல்லாம் இல்ல.. ஆனா ஜெலஸ் இருக்கும்..”
“பொண்ணுங்க பொண்ணுங்கதான்”
“ஏன், உங்களுக்கு மட்டும் இல்லயா என்ன?”
“எங்களுக்கு என்ன?”
“நீங்க ஹரிமேல ஜெலஸ் ஆகல?”
“ஓஓ..” முகம் தூக்கி வாய் விட்டுச் சிரித்தான்.
“அத்து மாதிரிதான் எங்களுக்கும்”
“ரைட்.. ரைட்..”

நிருதியின் உடல் நெருக்கத்தில் கிளர்ச்சியடைந்த அகல்யா பெண்மைச் சிலிர்ப்புடனிருந்தாள். மெலிதாக அணைத்தபடி தன் கன்னத்தில் உரசும் அவன் விரல்களின் மெல்லிய வருடலில் அவளின் பெண்மை மலர்ந்தது. அதன் நறுமணம் அவளுக்குள் ஒரு இளந் தென்றலின் இசையாய் பரவியது. அதிலிருந்து அவள் மீள விரும்பவில்லை என்பதை அவளின் அணுக்கம் அவனுக்கு உணர்த்தியது.
“உங்களுக்கு ஹரி மேல ஜெலஸ்தான?” எனக் கேட்டாள்.
“ஹா ஹா..” சிரித்தான்.
“சிரிக்காம சொல்லுங்க? ஜெலஸ்தான்”
“சரி. ஜெலஸ்தான்”
“யேன்ன்?”
“ஏன்னா.. உன்ன எனக்கு ரொம்ப புடிக்கும்”
“ம்ம்.. தெரியும். ஆனா அவன் என் லவ்வர் இல்லையா?”
“அதான் ஜெலஸு..”
“ம்ம்.. அவனுக்கும் இப்படித்தான்”
“என்ன?”
“அவன தவிற நான் வேற எந்த பசங்ககூட பேசினாலும் பிடிக்காது. அதுனாலயே சண்டை வரும்”
“ஹா ஹா.. அது இயல்புதான?”
“என்ன இயல்பு? நான் மத்த பசங்ககூட பேசாம பழகாம இருக்க முடியுமா?”
“அது முடியாதுதான்”
“முடியாதில்ல.? அதை அவன் புரிஞ்சிக்க வேண்டாமா?”
“புரிஞ்சுக்கணும்தான். ஆனா அதுக்கு நீ அழகில்லாம, சூப்பர் பிகரா இல்லாம சுமார் மூஞ்சி பிகரா இருந்துருக்கணும்” என்று சிரித்தபடி சொன்னான்.
“ஏன்? அழகாருந்தா என்ன?”
“உன்னை கொத்திட்டு போறதுக்கு எவனெவன் ட்ரை பண்ணுவானோனு பயம்தான்”
“அது.. ஓகே” சிரித்தாள் “ஆமா.. எனக்கு காலேஜ்ல கூட ப்ரபோசல் வரும். தேர்டு இயர் அண்ணா ஒருத்தர் காலேஜ் போன மொத வாரத்துலயே என்னை புடிச்சிருக்குனு சொல்லி என் நெம்பர் கேட்டாங்கனு… நான் கூட உங்களுக்கு சொன்னேன்ல?”
“ஆமா. அதான் ஹரியோட பயம்”