யே நீ எந்த காலத்துல இருக்க? Part 2 67

“சரி சொல்லு?”
“என்ன சொல்றது?”
“நேத்து விட்டதை. அவுட்டிங் போன எடத்துல..”
லேசாக வெட்கி முகம் தூக்கிச் சிரித்தாள். “அது வேண்டாம்ப்பா”
“ஏன்?”
“போங்க. அது நேத்தோட போச்சு”
அவளுக்கு நேற்றிருந்த எழுச்சி மனநிலை இன்றில்லை. அது இயல்பாக மாறிவிட்டது என்பது புரிந்தது.
“இன்னிக்கு சொல்றேன்ன?”
“மூடு இல்ல..”
“ஏன்? ”
“தெரியல”
“ஏதாவது ஃபீலிங்கா?”
“சே சே.. எனக்கென்ன பீலிங்கு? அதெல்லாம் ஒண்ணும் இல்ல” டிவி ரிமோட்டை எடுத்து சேனல்களை மாற்றினாள்.
அவன் கொஞ்சம் சாப்பிட்ட பின் உணவை கொஞ்சமாக எடுத்து அவள் உதட்டருகில் கொண்டு சென்றான். அவள் திடுக்கிட்டு மூக்கைச் சுழித்து சட்டென்று முகத்தை பின்னால் இழுத்தாள். “ம்ம்.” திகைத்து அவனைப் பார்த்தாள். ”என்னது ?” விழிகள் விரிந்தன.
”ஒரு வாய் சாப்பிடு”
“வேண்டாம். நீங்க சாப்பிடுங்க..”
“ஏன் நான் குடுத்தா சாப்பிட மாட்டியா?” என்று அவளைப் போலவே கேட்டான்.
“எனக்கேவா?” என்று சிரித்தாள்.
“ஒரு வாய்”
அவனின் கனிவான முகத்தையும் காதலுடன் இரைஞ்சும் கண்களையும் பார்த்து மறுக்க முடியாமல் தன் சிவந்த மாந்தளிர் இதழ்களைப் பிரித்து வாயைத் திறந்து ‘ஆ’ காட்டினாள். சிறு வெண்பற்கள் மின்ன செந்நிற நாக்கை அசைத்து உணவை வாங்கினாள். அவள் உதடுகளை விரலால் உரசியபடி அவளுக்கு ஊட்டினான். கூச்சத்துடன் வாயை மூடி உதடுகள் அசைத்து மெதுவாக மென்று விழுங்கினாள். அதன்பின் அவன் ஊட்டியதை மறுக்காமல் செல்லச் சிணுங்கலுடன் வாங்கிச் சாப்பிட்டாள். சில கவளம் ஊட்டியபின் அவளின் உதட்டில் ஒட்டிய உணவுத் துணுக்குகளில் இரண்டை அவன் விரலால் எடுத்து தன் வாயில் வைத்து சாப்பிட்டான். அவளுக்கு அது படு கிக்காக இருந்தது. ஆனாலும்..
“ச்சீ.. அது என் எச்சி” என்று கன்னம் குழையச் சிரித்து சிணுங்கினாள்.
“எச்சி இல்ல அகல், அமுது” என்று கண்ணடித்து விரலைச் சூப்பினான்.
“வ்வேக்க்” வெட்கத்துடன் போலியாய் குமட்டினாள்.
அவள் உதட்டை கிள்ளினான். “லவ்லி லிப்ஸ்”
“போதும்” எனச் சொல்லி எழுந்து கிச்சன் போய் தண்ணீர் குடித்து வந்து உட்கார்ந்தாள். பின்னால் சாய்ந்து கால்களை முன்னால் நீட்டி ஒன்றன் மேல் ஒன்றைப் போட்டு மெல்ல ஆட்டியபடி போனை எடுத்து தன் காதலனுடன் பேசத் தொடங்கினாள்.. !!
நிருதி சாப்பிட்ட பின் ஏப்பம் விட்டபடி இயல்பாக வந்து சோபாவில் அவள் பக்கத்தில் நெருக்கமாக உட்கார்ந்தான். இருவரின் உடல்களும் லேசாக தொட்டுக் கொண்டன. அகல்யா போனில் கொஞ்சலுடன் சிரித்து பேசியபடியே அவன் பக்கம் சாய்ந்தாள். அவன் தோளில் தன் தோளிணைத்தாள். உண்மையில் அவனுக்குள் ஒரு வியப்பெழுந்ததை அவன் முகம் காட்டியது. சிறிது நேரத்தில் அவனும் அவள் பக்கம் சாய்ந்தான். தோளை தோளால் அழுத்தினான். அவள் இயல்பாக போனில் பேசிக் கொண்டிருந்தாள். அவன் டிவியைப் பார்த்தபடி கை எடுத்து மெதுவாக அவள் முதுகுப் பக்கம் கொடுத்து அவளின் மறுபக்க தோளில் வைத்தான்.
அவனது அச்சிறு அணைப்புக்கு அவள் உடல் எதிர் வினையாற்றி மெல்ல சிலிர்த்தது. மெல்லிய கூச்சமும் தயக்கமும் உடலில் படர்ந்தாலும் அதை புறம் தள்ளி அவளும் அதை இயல்பாகவே ஏற்றாள். காதலில் கரையும் மூச்சொலி கலந்த மெல்லிய சிணுங்கல் குரலுடன் அவளின் போன் பேச்சு தொடர்ந்தது. சிணுங்கி முனகிப் பேசும் பெண்ணின் கனிந்த காதல் குரலுக்கு எந்த ஆணின் செவியும் மயங்கும். அவனத செவியும் அந்நிலையையே அடைந்தது.
ஒரு நிமிடம் இயல்பாக கடந்தபின் தன் தலையை அகல்யாவின் பக்கம் சாய்த்து அவளின் தலையில் லேசாக முட்டினான் நிருதி. அவள் கண்டுகொள்ளாமல் பேசிக் கொண்டிருந்தாள். பின் டிவியைப் பார்த்தபடி அவளின் கன்னத்தைத் விரலால் தொட்டு மெதுவாக வருடினான். அவர்கள் போனில் பேசிக்கொள்வது அவனுக்கும் கேட்டது. காதல் மொழிகளில் கொஞ்சிக் குலாவினர். அவள் மெல்லிய சிணுங்கலுடன் தணிந்த குரலில் பேசிக்கொண்டே நிருதியின் தோளில் நன்றாக தலையை சாய்த்துக் கொண்டது அவனுக்கு மேலும் வியப்பாயிருந்தது.. !!
சில நிமிடங்கள் பேசியபின் வழக்கம் போல பை சொல்லி காலை கட் பண்ணினாள் அகல்யா.
“என்ன சொல்றான்?” மெல்லக் கேட்டான் நிருதி.
“பேசுனது கேட்டிங்கள்ள?” அவள் குரல் இன்னும் சிணுங்கியது.
“கொஞ்சம்தான் கேட்டேன்”
“………” இதழ் சுழித்து புன்னகைத்தபடி வாட்ஸப் ஸ்டேட்டஸ் பார்த்தாள். அவள் கன்னம் வருடியபடி அவனும் பார்த்தான்.
“உருகறான்” என்றாள்.
“உனக்காகத்தான்”
“ம்ம்..”
“அவ்ளோ லவ்”
சிரித்தாள் “ஆமா”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *