யே நீ எந்த காலத்துல இருக்க? Part 2 67

“அவ கோள் மூட்டி. சண்டை வந்தா எங்கம்மாகிட்ட போட்டு குடுத்துருவா”
“ஓஓ” சிரித்தான் “அவ லவ் பண்றதில்லையா?”
“அவளுக்கு இப்ப மூணாவது லவ்வு போயிட்டிருக்கு”
“மூணா..?”
“பின்ன என்ன நெனைச்சிங்க அவளை? அவள்ளாம் வேற லெவல். என்கிட்ட அதிகமா சொல்ல மாட்டா. ஆனா எனக்கு எப்படியாவது தெரிய வந்துரும்”
“ப்பா பெரிய ஆளுகதான்” என்று சாக்லேட் சுவைத்தபடி மீண்டும் அவள் கன்னத்தை கிள்ளினான். அவள் ஒன்றும் சொல்லவில்லை. அவன் கண்ணாடி முன்போய் நின்று தலைவாரினான்.
“அவகிட்ட சொல்றது எனக்கு ப்ராப்ளம் அதான் நான் சொல்லல” என்றபடி அவன் பக்கத்தில் நெருக்கமாகப் போய் நின்றாள். அவளின் மென்மணம் அவன் நாசியைத் தொட்டது. கண்ணாடியில் இருவரின் முகமும் நெருக்கமாகத் தெரிந்தது. “ஆனா உங்ககிட்ட சொல்றதுல எனக்கு ஒரு ப்ராப்ளமும் இல்ல” கண்ணாடியில் அவன் கண் பார்த்துச் சொன்னாள்.
அவன் சிரித்தபடி திரும்பி, “உன் நம்பிக்கையை காப்பாத்துவேன்” என்றான்.
அவன் கண்களை நேராகப் பார்த்துச் சிரித்து உதடுகளை நுனி நாவால் தடவி ஈரம் செய்தாள். “யூ ஆர் மை பெஸ்ட்டி. ஐ லைக் யூ ஸோ மச்”
“நானும் ஐ லைக் யூ” என்றபடி அவளின் காதோரம் காற்றிலாடிக் கொண்டிருந்த சுருள் முடியை ஒதுக்கினான். அவள் கன்னம் தடவி உதட்டைக் கிள்ளி எடுத்து வாயில் வைத்து முத்தமிட்டான்.
“அழகி.. அழகி.. க்யூட் பேபி”
அவள் ஒரு நொடி திகைத்து அசைந்து பின் இயல்பானாள். ஆனாலும் மனசு படபத்தது. அதைக் காட்டிக் கொள்ளாமல் அவனை உரசியபடி நின்று அவனைப் போலவே அவன் கன்னத்தைக் கிள்ளி எடுத்து தன் உதட்டில் வைத்து முத்தமிட்டாள். “நீங்களும் அழகுதான்”
“அட..” வியந்தான் “நெஜமாவா?”
“ஆமா..”
“பொய் சொல்லாத அகல்.. நான்லாம் அழகே இல்ல”
“பொய்யா..? போங்க.. உங்களுக்கென்ன? நீங்களும் ஃபிகராதான் இருக்கீங்க”
“அட..” அவன் கிளர்ந்து சிரித்து அவள் தோளை வளைத்தான். அவன் கொஞ்சமும் எதிர் பார்க்காத விதமாக, வெட்கத்துடன் சிரித்தவள் சட்டென அவனைக் கட்டிப்பிடித்து உடனே விலகினாள். “ஓகே நான் போறேன்” என்றாள்.
“ஏய்.. இரு”
“என்ன? ”
“நானும் உன்ன ஒரு ஹக் பண்ணிக்கறேன்”
“ம்கூம்” சிரித்தபடி தள்ளிப் போனாள்.
“என்ன அகல். நீ மட்டும் என்னை ஹக் பண்ண?”
“போதும். போங்க.. பை”
“அகல்..”
“லைக் யூ, லைக் யூ.. பை பை” எனச் சிரித்தபடி கையசைத்து விட்டு அங்கிருந்து துள்ளி ஓடினாள் அகல்யா.. !!

மறுநாள் மதியம். நன்றாக வெயில் இருந்தது. நிருதி வீட்டுக்கு வந்து உணவைப் போட்டு சாப்பிட உட்காரும்போது தலையில் துப்பட்டாவை முக்காடாகப் போட்டுக்கொண்டு அவன் வீட்டுக்குள் நுழைந்தாள் அகல்யா. இன்று அவள் மேக்கப் எதுவும் இல்லாமல் கொஞ்சம் சோர்வாக இருந்தாள். அவள் தலைமுடி கலைந்து கண்கள் சுருங்கியிருந்தன. கையில் மொபைலை வைத்திருந்தாள்.
“ஹாய் வா. என்னாச்சு?” என்றான்.
“ஒண்ணும் ஆகல”
“டல்லாருக்க மாதிரி இருக்கு?”
“ஆமா.. படுத்துட்டிருந்தேன்” என்று மெல்லிய புன்னகையுடன் சொன்னாள்.
“ஏன்?”
“சும்மாதான். டிவி பாத்துட்டு படுத்துட்டேன்”
“எங்கயும் போகலயா?”
“எங்க போறது?”
“அவுட்டிங்”
சிரித்தாள். “சும்மாருங்க..”
“அப்ப கீர்த்தி வீட்டுக்கு போலமில்ல?”
“போலாம். ஆனா போகல”
“உக்காரு. சாப்பிடறியா?”
“இல்ல. நீங்க சாப்பிடுங்க” டிவியைப் பார்த்தபடி துப்பட்டாவை எடுத்து மார்பில் போட்டுக் கொண்டாள். மெல்ல நடந்து போய் இயல்பாக நிருதியின் பக்கத்தில் உட்கார்ந்தாள். எதிர் சோபாவில் உட்காருவாள் என்று நினைத்திருந்தவன் தன் பக்கத்தில் உட்கார்ந்தவளைப் பார்த்து உள்ளே வியந்தான். நேற்று அவளே அணைத்து விலகினாள். இன்று நெருங்கி அமர்கிறாள்.
“மச போரா இருக்கு” கால்களை மெதுவாக முன்னால் நீட்டியடடி சொன்னாள்.
“என்னது?”
“வீட்லயே இருக்குறது?”
“அவுட்டிங் போனா நல்லாருக்கும்” என்று கிண்டலாய் சிரித்தான்.
“போங்க ” அவளும் சிரித்தாள் “அவுட்டிங்லாம் அடிக்கடி போகக் கூடாது” சிவந்த உதட்டைச் சுழித்து சிணுங்கலாகச் சொன்னாள். அந்தச் சிணுங்கலுக்குப் பின் அவள் உடம்பில் ஒரு குழைவு உண்டானது
“ஆமா..” என்று நகைத்தான்.
“என்ன ஆமா?” அவனைப் பார்த்தாள்.
“அவுட்டிங்லாம் அடிக்கடி போகக் கூடாது”
“ஐய..”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *