யே நீ எந்த காலத்துல இருக்க? Part 2 67

“மீ டூ..” என்றான்.
“நைன் ஓ க்ளாக்தான வருவீங்க?”
“ஆமா”
“வாங்கிட்டு ஒரு ரிங் விடுங்க. நான் முன்னால வந்து ரெடியா நின்னுக்கறேன்”
“ஓகே”
“ஓகே பை..” இதழ் சுழித்து கை அசைத்து விடை கொடுத்தாள் அகல்யா.. !!
இரவு, அவளுக்கு விருப்பமான உணவுகளை அவளின் அம்மாவுக்கும் சேர்த்தே வாங்கி வந்து கொடுத்தான் நிருதி.. !!

அடுத்த இரண்டு நாட்கள் இருவரும் சந்தித்துக் கொள்ள முடியவில்லை. நிருதி தன் குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டான். அகல்யாவும் தன் தோழிகளின் வீடுகளுக்குச் சென்று வந்தாள்.. !!
அதன்பிறகு வந்த நாள் மதியம், நிருதி சாப்பிட்டு முடித்த பின் ஆர்வமாக அவனைப் பார்க்க ஓடி வந்தாள் அகல்யா. அவள் இறுக்கமான ஒரு மஞ்சள் டாப்சும் வெள்ளை சாலும் லெக்கின்ஸும் போட்டிருந்தாள். அவளிடம் ஒரு துள்ளல் இருந்தது.
“ஹாய்” என்றாள்.
“ஹாய் ஸ்வீட்டி”
“எப்போ வந்தீங்க?”
“நைட்டே வந்துட்டோம். உன்னைத்தான் பாக்க முடியல”
“டிவி பாத்துட்டு படுத்துட்டேன். மார்னிங் ஒம்பதரை மணிவரை நல்லா தூங்கிட்டேன்”
“சாப்பிட்டியா?”
“ஓஓ. நீங்க?”
“சாப்பிட்டேன். எங்க போன? வீடு பூட்டியிருந்துச்சு?”
“கீர்த்தி வீட்டுக்கு போனேன். இப்பதான் வந்தேன். உங்க வீடு தெறந்திருந்துச்சா நேரா வந்துட்டேன்”
“உக்காரு”
“தம்பிங்கள ஊர்ல விட்டுட்டிங்களா?”
“ஆமா.. ஸ்கூல் எல்லாம் லீவ் விட்டாச்சே?”
“அக்கா அங்க இருக்கலியா?”
“அக்கா வேலைக்கு போகணுமில்ல? அப்பப்போ போய் பாத்துக்கலாம்”
“இருந்துப்பாங்கள்ள?”
“அதெல்லாம்..”
இயல்பாகப் போய் அவன் பக்கத்தில் உட்கார்ந்தாள். அவளின் துப்பட்டா பறந்து அவன் மேல் உரசியது.
“அப்பறம்.. நம்ம ஹரி என்ன பண்றான்?” என்றான்.
“அவன் சென்னை போயிட்டான்?” சிரித்தபடி சொன்னாள்.
“ஏன்?”
“அவன் பிரெண்டு வீட்ல பங்க்சன். அங்க போயிட்டு அப்படியே டூர் போறானாம் பிரெண்ட்ஸோட..”
“ஜாலியா இருப்பான் போல?”
“ஆமா.. செம ஜாலியாதான் இருக்கான். நானா கால் பண்ணி பேசினாத்தான் பேசறான். அவன் எனக்கு கால் பண்றதே இல்ல”
“அடப் பாவமே..”
“நேத்து சரக்கடிச்சிட்டு மப்புல ஒளர்றான். எனக்கு செம காண்டு”
“பசங்க ஜாலியா இருந்துருப்பாங்க.. அப்ப ஏதாவது லைட்டா…”
“அது ஓகே..”
“ம்ம்..”
“பேச்சு சரியில்ல..”
“ஏன்?”
“அவன் குடிச்சது ப்ராப்ளம் இல்ல. ஆனா ஏதேதோ ஒளர்றான். அதான் காண்டாகிருச்சு”
“என்ன சொன்னான்?”
“நெஜமா அவன் அப்படி எல்லாம் பேசுவான்னு நான் நெனச்சே பாக்கல”
“அப்படியா?”
“தப்பா பேசல. ஆனா ஒரு மாதிரி பேசினான். எனக்கு அது புடிக்கல”
“ஹோ…”
“நானே கால கட் பண்ணிட்டேன். அப்றம் இன்னிக்கு பதினோரு மணிக்கு அவனே கால் பண்ணி பேசினான். நேத்து சரக்கடிச்சதை ஒத்துகிட்டான். ஆனா பேசினது சரியா ஞாபகமில்லேன்னான். நானும் அவன் பேசினதை சொல்லல”
“அப்படி என்ன பேசினான்?”
“நீங்க சொன்ன மாதிரிதான்”
“என்ன? ”
“அவனை நான் கழட்டி விட்றுவேனாம். அவன் பிரெண்டோட லவ்வர் ஒருத்தி அப்படித்தான் அவனை கழட்டி விட்டுட்டு இப்ப வேறொருத்தன லவ் பண்றாளாம். அதை சொன்னதுலதான் எனக்கு செம காண்டாகிருச்சு”
“ஹோ..”
“இன்னொரு தடவை அப்படி பேசினான்னா அப்பறம் அவ்வளவுதான்”
“என்ன பண்ணுவ?”
“இந்த அகல்யா யாருனு அவனுக்கு தெரியும்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *