யே நீ எந்த காலத்துல இருக்க? Part 2 164

“சின்ன பொண்ணுதான் ஆனா நீங்க சொல்ற மாதிரி அவ்ளோ குட்டி பொண்ணில்ல. எல்லாம் தெரியும்”
“எல்லாம் தெரியும்? ”
“தெரியும் தெரியும்”
“தேறிட்ட?”
“ஆமா..”
“அப்ப நான் உன்னை சின்ன பொண்ணுனு நினைக்க வேண்டாம்?”
“நினைங்க. ஆனா எல்லாம் பேசலாம்”
“எல்லாம்னா?”
“எல்லாம்தான்”
“அந்த மாதிரி அந்த மாதிரி.. இந்த மாதிரி இந்த மாதிரி எல்லாமே?”
வாய் பொத்திச் சிரித்தாள். “ஆமா. அந்த மாதிரி… அந்த மாதிரி.. எல்லாமே..”
“குட். ஐ லைக் யூ”
“பட் ஐ… இல்ல ஆமா.. ஐ லைக் யூ..” நா சுழற்றினாள்.
“பட் ஐ ஹேட் யூ சொல்ல வந்தியா?”
“இல்ல” வெட்கி “ஐ லைக் யூ தான். அதுக்குள்ள டங்க் ஸ்லிப்பாகிருச்சு”
“ம்ம்.. நல்லா சமாளிக்கற. சரி மேரேஜ் பத்தி ஏதாவது பேசியிருக்கீங்களா?”
“ம்கூம்.. அதுக்கு இன்னும் டைமிருக்கே?”
“அது ஓகேதான்..”
“ப்யூச்சர்ல பேசிக்கலாம்னு சொல்லுவான். நான் நல்லா படிக்கணும். அவனும் காலேஜ் முடிச்சு ஏதாவது ஜாப்புக்கு போகணும். அவனுக்கு ஃபாரின் போற ஐடியால்லாம் இருக்கு”
“ஹோ..”
“ஸோ.. அதான்.. அது பத்தி இப்பவே எதுக்குனு பேசிக்கறதில்ல”
“இப்போதைக்கு லவ் மட்டும்?”
“ம்ம்.. ஆமா.. ஒன்லி லவ்..”
“என்ன சொல்ல..”
“சொல்லுங்க?”
“உங்க பிளான்படி நடந்தா சந்தோசம்தான்”
“ம்ம்” மெல்ல “இதெல்லாம் யாருகிட்டயும் சொல்லிடதிங்க ப்ளீஸ்”
“ஓகே ஓகே.. தைரியமா இரு”
“மீதிய நாளைக்கு சொல்றேன்”
“என்ன மீதி?”
“நேத்து என்னென்ன நடந்துச்சினு”
“நீ விருப்பப்பட்டா சொல்லலாம்”
அவன் கிளம்பத் தயாரானான். அகல்யா சோபாவிலேயே உட்கார்ந்திருந்தாள்.
“சரி அகல் நான் கிளம்பறேன்”
“ம்ம்” தலையசைத்துச் சிரித்தாள்.
அவன் எழுந்து உள்ளே போய் உடை மாற்றி வந்தான். அகல்யாவும் எழுந்து துப்பட்டாவை சரி செய்தாள். அவள் கையில் சாக்லெட் இருந்தது. அவள் வாய் அதில் ஒரு சிறு பாகத்தை சுவைத்துக் கொண்டிருந்தது. அவன் பக்கத்தில் வந்ததும் அதை அவன் முன் நீட்டினாள். “கடிச்சிக்கோங்க”
“நீ சாப்பிடு”
“கொஞ்சம் கடிச்சிக்கோங்க”
“கடிச்சிக்கவா?”
“ஏன்?”
“என் எச்சி படும்”
“அது… பரவால” என்றவள் சிறு புன்னகையுடன் ஒரு வில்லையை பிய்த்து அவன் வாயில் போட்டு விட்டாள்.
“அழகு பொண்ணு” என்று கொஞ்சி அவள் கன்னத்தை கிள்ளினான். அவள் கன்னம் சூடேறி கிண்ணென்றிருந்தது. தொடுகையில் படு கிக்.
“இதெல்லாம் நான் கீர்த்திகிட்ட கூட சொல்லல” என்றாள்.
“ஏன்?”