யே நீ எந்த காலத்துல இருக்க? Part 2 162

நிருதி மெலிதான பதட்டத்துடன் கைகளைக் கோர்த்து சோபாவின் விளிம்பில் உட்கார்ந்திருந்தான். அவன் உடல் தளர்ந்திருந்தது. அவள் முகத்தைப் பார்த்து விட்டு
“ஸாரி ” என்று குரல் சிறுக்க மீண்டும் மன்னிப்பு கேட்டான்.
அவன் முகம் வெளிறி சிறுத்திருப்பதாய் தோன்றியது. அவன் முகத்தை உற்றுப் பார்க்க அவள் அகம் துணியவில்லை. ஆனால் அவன் வறுத்தத்திலிருக்கிறான் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.
தளர் நடை வைத்து அவனை அணுகினாள். தனக்குள் இருக்கும் எழுச்சியை பெருமூச்சு விட்டு தளர்த்தியபடி மெல்லச் சிரித்தாள். “நீங்க கிளம்பலையா?” அவள் குரல் மிகவும் கனிந்திருந்தது. அன்பனின் மேல் கொண்ட கருணை.
“கோபமா?” அவள் முகம் பார்த்துக் கேட்டான்.
“ல்ல்ல” நாக்கைச் சுழற்றினாள். வெட்கத்தில் கன்னம் சிவந்து மூக்கு விடைத்தது. நன்றாக இருந்த துப்பட்டாவை இன்னும் கீழே இழுத்து தன் முலை எழுச்சிகளை முழுசாக மூடினாள்.
“நான் கிளம்பட்டுமா?” என்றான்.
“ம்ம்..” தலையாட்டினாள். அவன் கண்களை நேராகச் சந்திக்காமல் பார்வையைத் திருப்பி டிவியைப் பார்த்தாள்.
ஒரு பெருமூச்சு விட்டு எழுந்து ”ஸாரிமா ” சொல்லி எனச் சொல்லி விட்டுப் போய் அவன் உடை மாற்றிக் கிளம்பினான்.. !!
“நான் போறேன்” கண்ணாடி முன் நின்றிருந்தவனின் அருகில் சென்று நின்று சொன்னாள். மார்புகளை முழுவதுமாக மறைத்திருந்த துப்பட்டா இப்போது இன்னும் கீழே சரிந்து கூர்மையான காய்களின் விம்மல்களை இலைமறை காயாகக் காட்டியது. முகம் திருப்பி அவைகளை சற்று ஏக்கமாய் பார்த்தான். அவன் கண்களைப் பார்க்காமல் முகம் திருப்பி கண்ணாடி பக்கம் தன் பார்வையை மாற்றினாள் அகல்யா.. !!
“என்னமாவது வேணுமா?” மெல்லக் கேட்டான்.
“என்ன?”
“ஏதாவது? ”
“ம்கூம்” தலையாட்டினாள்.
அவள் கையைப் பிடித்து தன் பக்கம் திருப்பினான். “வெரி ஸாரி”
“இட்ஸ் ஓகே..” அவளின் குழைவு, வார்த்தையை உள்ளேயே அழுத்தியது.
“ஐ லைக் யூ” என்றான்.
“மீ டூ” முனகுவதைப் போலச் சொன்னாள். முகம் சிவந்து கனிய வெட்கப் புன்னகை காட்டினாள். அவளிடம் உளத் தவிப்பின் படபடப்பு தெரிந்தது. அவள் கைகளில் மெல்லிய சூடு. அவள் கையை தன் கையில் எடுத்து அவளின் இளந்தளிர் விரல்களைக் கோர்த்தான். அவளுக்குள் கிறக்கமான ஒரு சிலிர்ப்பெழுந்தது.
”கோபமா என்மேல?”
”இல்ல்ல்ல்ல” ஒரு மாதிரி காதல் நிறைந்த கிள்ளை மொழியில் சிணுங்கினாள்.
”கோபம்னா திட்டிரு”
”போங்க. கோபமேல்ல”
”நெஜமா நீ ரொம்ப அழகு. எனக்கு உன்னை நொம்ப புடிக்கும். எப்ப பாத்தாலும் உன்னை கொஞ்சணும்னு ரொம்ப ஆசையாருக்கும். அதனாலதான் நான் இப்படி.. ஸாரி..”
“பரவால.. இதுலென்ன இருக்கு?”
“ஒண்ணுல்லதான?”
“இல்ல்ல..”
“தேங்க் யூ”
“ம்ம்..”
மெல்ல “கன்னத்துல மட்டும் ஒரே ஒரு முத்தம் குடுத்துக்கட்டுமா ப்ளீஸ்” என கொஞ்சும் குரலில் கெஞ்சினான்.
அவன் முகம் பார்த்து வெட்கி யோசித்து பின் தலை தாழ்த்தி மெதுவாக தலையாட்டி சம்மதித்தாள்.
“ம்ம்.”
உவகையில் விம்மிய உள்ளத்துடன் அவளை மெதுவாக அணைத்தான். அவள் முகத்தை நெருங்கி அவளின் மிருதுவான கன்னத்தில் எச்சில் பதிய அழுத்தி முத்தமிட்டான்.
“ஸ்வீட் கேர்ள்..”
அவன் அணைப்பில் இருந்து மீள நினைத்து மெல்ல நெளிந்தாள். ஒரு முத்தத்துடன் அவன் நிறைவு பெறவில்லை. மீண்டும் அவள் கன்னச் சிவப்பில் முத்தம் கொடுத்தான். கன்னத்து முத்தம் என்றாலும் லேசான திமிறலுடன் அதை அனுமதித்தாள். இரண்டு முத்தங்கள் பெற்றுத் திமிறி அவனின் அணைப்பைத் தவிர்த்து விலகினாள்.. !!
“தேங்க்யூ ஸ்வீட்டி” என்றான்.
ஒன்றும் சொல்லாமல் அவனைப் பார்த்து புன்னகைத்தாள்.
அவள் கண்களில் குடிகொண்டிருந்த உள்ளக் கிளர்ச்சியின் துடிப்பான உணர்ச்சியை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.
“ஓகே பை.. நான் போறேன்” எனச் சொல்லி விட்டு சட்டென வெட்டிக் கொண்டவள்போல திரும்பிச் சென்று விட்டாள் அகல்யா.. !!
நிருதி வீட்டைப் பூட்டி பைக்கை ஸ்டார்ட் செய்தான். சத்தம் கேட்டு அகல்யா தன் வீட்டில் இருந்து வெளியே வந்தாள். கதவரோம் நின்று அவனைப் பார்த்துச் சிரித்தாள்.
“ஸாரிமா” என்றான்.
“இட்ஸ் ஓகே..”
“கோபமில்லல்ல?”
எதுவும் சொல்லாமல் கதவைத் தாண்டி வந்து வெளியே நின்றாள். “நைட் என்ன வாங்கிட்டு வரீங்க எனக்கு?”
“என்ன வேணும்? ”
“சாப்பிட…”
“சொல்லு?”
மெல்ல நடந்து அருகில் வந்தாள். அவள் மார்பில் துப்பட்டா இருக்கவில்லை. நடையதிர்வில் மார்பகம் மெல்லத் திமிறியது. அவன் விழி தொடும் அந்த முலை முனைப் பகுதிகளிலேயே அவளின் கவனம் குவிந்தது. அந்த எண்ணக் குவிதலின் உணர்வில் அவளின் நெஞ்சகம் இனிமை கொண்டது. அவனை நெருங்கி இயல்பாக விழி கோர்த்துச் சொன்னாள். “சிக்கன் ரைஸ்.. சாப்பிடணும் போலருக்கு”
“வாங்கிட்டு வரேன். உங்கம்மா ஏதாவது சொல்லப் போறாங்க?”
“ந்நோ ப்ராப்ளம். நான் சொல்லிக்கறேன்”
“வேறென்ன வேணும்?”
“எனக்கு என்னென்ன வேணும்னு உங்களுக்கு தெரியாதா?”
“தெரியும்”
“ஐ லைக் யூ” என்று கனிந்து சிரித்தாள்.