விக்கி காரில் போகும் போது வள்ளி சொன்னதை நினைத்து பார்த்தான் .பின் காரை ஒரு இடத்தில நிறுத்தி விட்டு சிகரட் பிடித்து கொண்டே பழைய நினைவுகளில் முழ்கினான் .முன்பு கல்லூரியில் படித்த காலத்தில் தன் முதல் காதலியான உமாவோடு ஒரு முறை பார்க் போன பிறகு அவள் மடியில் விக்கி படுத்து இருந்தான் .அப்போது அவள் அவன் தலையை செல்லமாக கோதி விட்டு கொண்டே கேட்டாள் .
யே விக்கி உனக்கு ஆம்பிள பிள்ள பிடிக்குமா இல்ல பொம்பள பிள்ள பிடிக்குமா என்றாள் .எதுக்குடி நாம உடனே குழந்தைக்கு ட்ரை பண்ண போறமா என்று சிரித்து கொண்டே கேட்டான் .அதுக்கு இல்லடா என்றாள் . அதானே பாத்தேன் நீ என் கூட இப்ப பார்க் வந்ததே பெரிய விஷயம் அப்புறம் இப்படி உன் மடில தலை வைக்க விட்டது அத விட பெரிய விஷயம் அப்புறம் எங்கிட்டு தொட விட போற என்றான் .
டேய் அவசர படாதடா இன்னும் ஒரு வருஷம் யுஜி முடிஞ்சுடும் அதுக்கு அப்புறம் நீ எம்பியே முடிச்சதுக்கு அப்புறம் என் வீட்ல வந்து பொண்ணு கேளு அப்புறம் என்னையே கல்யாணம் பண்ணிட்டு என்ன வேணும்னாலும் பண்ணு என்றாள் .அங்கிட்டு போடி என் பிரண்ட்ஸ்ல லவ் பண்றவாங்கே முக்கால்வாசி பேரு அவெங்கே ஆளோட வார வாரம் மேட்டர பண்ணிக்கிட்டு இருக்காங்கே நான் இன்னும் உன்னையே கன்னத்துல கூட கிஸ் அடிக்க முடியல எதுக்கு எடுத்தாலும் கல்யாணத்துக்கு அப்புறம்னு சொல்லி கடுப்பு எத்துற என்றான் .
சரி கோபிக்காதடா கண்ணா என்று அவன் கன்னத்தை செல்லமாக கிள்ளி கொண்டே கேட்டாள் .இப்ப நான் கேட்டதுக்கு பதில் சொல்லு உனக்கு எந்த குழந்தை பிடிக்கும் என்றாள் .அதலாம் சொல்ல முடியாது என்றான் .யே ப்ளிஸ் ப்ளிஸ் எனக்காக சொல்லுடா என்றாள் .அதலாம் முடியாது வேணும்னா ஒரு கிஸ் தா சொல்றேன் என்றான் . இங்கயா பார்க்லயா என்றாள் .ஆமா அதுக்கு என்ன நம்மள மாதிரி நிறைய பேர் பார்க்ல இத தான் பண்ணி கிட்டு இருப்பங்கே நம்மதான் வெட்டியா இருக்கோம் சோ ஒரே ஒரு கிஸ் கொடு என்றான் .
அதலாம் முடியாது என்றாள் அப்படின்னா நான் எந்திருச்சு போறேன் என்று கிளம்ப போனவனின் கையை பிடித்து சரி தரேன் ஆனா இங்க தர மாட்டேன் நம்ம காலேஜ்ல தரேன் என்றாள் .போடி பிராடு நீ இப்படிதான் பல தடவ சொல்லிட்ட என்றான் .நான் கண்டிப்பா இந்த வட்டம் கொடுக்குறேன் என்றாள் .நான் உன்னையே நம்பள என்றான் .என் செல்லத்து மேல சத்தியமா உனக்கு கிஸ் தரேன் என்று விக்கியின் தலையில் கை வைத்து சத்தியம் பண்ணாள் .
சரி நான் இப்ப நம்புறேன் சொல்லு என்றான் .அதான் சார்க்கு என்ன குழந்தை பிடிக்கும் என்றாள் .விக்கி உடனே அவள் மூக்கை தன் விரல்களால் செல்லமாக தொட்டு கொண்டு சொன்னான் எனக்கு ஒரு உன்னையே மாதிரி குட்டீ உமா தான் பிடிக்கும் என்றான் .போடா பொம்பிள பிள்ள பொறந்தா நீ என் மேல பாசத்த குறைச்சுட்டு அவ மேல பாசம் அதிகம் வச்சுருவ அவளுக்கே எல்லா அதிகாரமும் கொடுத்துருவ அப்புறம் அவ ஒரு குட்டி மாமியார் மாதிரி என்னையே அதிகாரம் பண்ணுவா
அதுனால எனக்கு உன்னையே மாதிரி ஒரு குட்டி பொருக்கி பயன் தான் வேணும் என்றாள் .ஐயோ என்னையே மாதிரியா வேணாம்டி வீட்டுக்கு என்னையே மாதிரி ஒரு முட்டாள் போதும் .நம்ம வீட்டுக்கு உன்னையே மாதிரியே அழகா அறிவா ஒரு பொண்ணு இருக்கட்டும் என்றான் . அதலாம் முடியாது என் பயன் முட்டாலா இருக்க மாட்டான் .அப்படியே இருந்தாலும் எனக்கு பயன் தான் வேணும் என்றாள் .இல்ல எனக்கு பொண்ணு தான் வேணும் என்று விக்கி சொல்ல இருவரும் ஒரு குட்டி சண்டையே போட்டார்கள் .
சரி சரி நமக்குள்ள எதுக்கு சண்ட நீ ஒரு பொண்ணு ஒண்ணா பயன் ஒண்ணா பெத்து போட்டுரு என்றான் .அது ஓகே ஆனா எந்த குழந்தை முத வேணும் என்றாள்.ஐயோ இதுக்கும் எதாச்சும் சண்ட போட்ட்ருவா என்று விக்கி நினைத்து கொண்டு பேசாம நீ ஒரே பிரசவத்துல ரெட்டை குழந்தைய பெத்து போட்டுறேன் என்றான் .சூப்பர் ஐடியா விக்கி நான் ஒரு பக்கம் பயன் வச்சுகிறேன் நீ இன்னொரு பக்கம் உண் பொண்ண வச்சு கிட்டு இரு என்றாள் .