என் காதலி Part 11 67

ஒ ஒ கோப படாதிங்க முதல நீங்க பூஜா தானே என்றாள் .ஆமா பூஜா தான் உங்களுக்கு என்ன வேணும் என்றாள் .ம்ம் என் பேரு சுவாதி ஒரு பத்து நிமிஷம் உங்களோட பேசணும் என்றாள் .அதலாம் முடியாதுங்க நீங்க யாருன்னே தெரியாது எனக்கு அப்புறம் எதுக்கு உங்களோட நான் பேசணும் என்றாள் .

இல்லங்க நம்ம ரெண்டு பேரும் ஒரு தடவ ஒரு வித்தியாசமான சூல்னிலைல சந்திச்சு இருக்கோம் அதுனால அத பத்தி ஒரு பத்து நிமிஷம் மட்டும் உங்களோட பேசிக்கிறேன் ப்ளிஸ் என்றாள் .அதலாம் முடியாதுங்க எனக்கு நிறைய வேலை இருக்கு என்னைய விடுங்க என்று சொல்லிவிட்டு மீண்டும் அவள் ஆஸ்பத்திரிக்குள் போனாள் .

சுவாதி மீண்டும் அவள் வெளியே வரும் வரை ஒரு அரை மணி நேரம் உக்காந்து இருந்தாள் .ஒரு அரை மணி நேரம் கழித்து பூஜா வெளியே வந்தாள் .சுவாதி போகமால் இன்னும் அங்கேயே இருப்பதை பார்த்து .சுவாதியை பார்த்து ஓகே என் வீடு கிட்டதான் இருக்கு நான் போயி எங்க அக்காவ நான் வீட்ல விட்டுட்டு வரேன் .

நீங்க பக்கத்துல இருக்க காபிடே ஷாப்ல ஒரு பத்து நிமிஷம் வெயிட் பண்ணுங்க நான் வந்துறேன் அப்புறம் பேசுவோம் என்றாள் பூஜா .

ஓகே நான் வெயிட் பண்றேன் என்றாள் சுவாதி .பின் சுவாதி ஆஸ்பத்திரியை விட்டு கிளம்பி அந்த காபிடே ஷாப்பிற்கு போயி வெயிட் பண்ணாள் .பூஜா ஒரு அரை மணி நேரம் கழித்து வந்தாள் .ஓகே சொல்லுங்க என்ன விஷயம் என்றாள் பூஜா .உங்களுக்கு விக்கிய தெரியுமா ஐ மீன் விக்னேஷ் என்றாள் .

எனக்கு அப்படி யாரையும் தெரியாது என்றாள் .இங்க பாருங்க கோப படாதிங்க உங்க இடத்துல யார் இருந்தாலும் அன்னைக்கு நடந்ததுக்கு கோப படாதான் செய்வாங்க ஆனா நீங்க நினைக்கிற மாதிரி நான் ஒன்னும் அவன் வோயிப் இல்லங்க என்றாள் சுவாதி .

பின்ன எப்படியாம் நினைக்கிறது பக்கத்துல ஒரு பொண்ண வாந்தி எடுக்க வச்சுகிட்டே என்னையே தொட வரவன என்றாள் .ஹலோ நீங்க நான் வாந்தி எடுக்கறதுக்கு அவன் காரணம் இல்ல என்றாள் .அப்புறம் என்ன உங்களுக்கு அன்னைக்கு பூட் பாய்சனா உங்க வயித்த பாத்தா அப்படி தெரியலையே எப்படியும் ஒரு அஞ்சு மாசம் ஆச்சும் இருக்கும் போல என்றாள் .

எஸ் நான் கர்ப்பமாதான் இருக்கேன் ஆனா நீங்க நினைக்கிற மாதிரி அதுக்கு அவன் காரணம் இல்ல என்றாள் .இங்க பாருங்க இதலாம் எனக்கு தேவையே இல்லாத விசயம் நான் கிளம்புறேன் என்றாள் பூஜா .ஒரு நிமிஷம் நான் சொல்ல வரதா முழுசா கேட்டுட்டு அப்புறம் போங்க என்றாள் .

ஓகே சீக்கிரமா சொல்லுங்க என்றாள் .நான் முத இருந்து எல்லாத்தையும் விளக்கமா சொல்றேன் என்றாள் .ம்ம் சொல்லுங்க என்றாள் .

நீங்க நினைக்கிற மாதிரி விக்கி எனக்கு ஹாச்பண்டோ இல்ல லவ்வரோ இல்ல .விக்கி எனக்கு சொந்த காரன் அவளவுதான் .என்னோட உண்மையான லவ்வர் அமெரிக்கால வொர்க் பண்றாரு ஒரு 8 மாசத்துக்கு முன்னாடி தான் அவருக்கு அங்க ஜாப் கிடைச்சு போனாரு .அவர் அங்க போயிட்டு எனக்கு விசா எடுத்து அனுப்பிட்டு என்னைய அங்க கூப்பிட்டு போறாத பிளான் ஆனா அவர் போனதுக்கு அப்புறம் தான் நான் பிரக்ன்ட் ஆனது அவருக்கு தெரியும் .

ஆனா உடனே பிளைட்ல அமெரிக்கா போனா கர்ப்பம் ஏதும் கலைஞ்சுரும் பயந்துகிட்டு நான் அங்க போகல அதுனால குழந்தை பிறந்ததுக்கு அப்புறம் அவரே வந்து என்னையே கூப்பிட்டு போறேன்னு சொல்லி இருக்காரு .

ஆனா அது வரைக்கும் எனக்கு ஏங்க தங்குறதுன்னு தெரியல நான் அப்பா அம்மா இல்லாத அனாதை அதுனால அவங்க வீட்ல ஒத்துக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க .

நான் எப்பவும் தங்கி இருக்க லேடிஸ் ஹாஸ்டல இப்படி பிரன்க்ன்ட்டா இருந்தா தங்க விட மாட்டாங்க அதான் என்ன பண்றதுன்னு தெரியாம இருந்தப்ப தான் விக்கிய பாத்தேன் .விக்கி என் ரிலேசென் அவன்கிட்ட என் நிலமைய சொன்னேன் அவனும் சரி குழந்தை பிறக்கிற வரைக்கும் தங்கிக்கொன்னு சொல்லிட்டான்

ஓகே நீங்க அப்பா அம்மா இல்லாத அநாதைன்னா அப்புறம் விக்கி உங்களுக்கு எப்படி என்ன ரிலேசென் என்றாள் .நான் அப்பா அம்மா இல்லதவா அதவாது என்னோட அஞ்சு வயசுல எங்க அப்பா அம்மா இறந்துட்டாங்க அப்புறம் அப்பாவோட பிரண்ட் ஒருத்தர் என்னையே கார்டியானா இருந்து என்னையே ஹோம்ல செத்து விட்டாரு .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *