என் காதலி Part 11 67

என்ன வாழ்க்கைடா இது இன்னைக்கு அவ சொன்ன மாதிரி ஒரு நல்ல வேலைல இருக்கேன் லட்சம் லட்சமா சம்பாதிக்கிறேன் நினச்சத வாங்குறேன் நினச்சத செய்யுறேன் பிடிச்ச பொண்ணு கூட படுக்குறேன் .எல்லாம் இருக்கு என்கிட்ட பணம் கார் வசதி பொண்ணுக இவளவு ஏன் எனக்குன்னு ஒரு குழந்தை கூட வர போகுது

ம்ம் என்ன இது திடிர்னு இடைல இது எப்படி வந்துச்சு என்று குழந்தை பற்றி தன்னை அறியாமல் தன் மனம் யோசித்த உடன் அவன் கண்களை துடைத்து விட்டு வேற ஒரு மூடுக்கு போனான் .சரி வீட்டுக்கு போவோம் பாவம் சுவாதி தனியா இருப்பா என்று காரை வேகமாக ஓட்டினான் .பின் காரை ஓட்டும் போதும் அழுது கொண்டே ஓட்டினான் .ஒருத்தனுக்கு முத லவ் மட்டும் சக்சஸ் ஆச்சுன்னா அவன விட அதிர்ஷ்ட சாலி எவனும் இல்ல ,எல்லாம் இந்த சாதியால வந்தது எந்த நாய் இந்த சாதி மதத்தலாம் கண்டுபிடிச்சது .என்று புலம்பி கொண்டே வண்டியை ஓட்டினான் .

பின் வீடு வந்து சேர்ந்தான் .வந்ததும் சுவாதி தூங்குவால் அதனால சத்தம் போடாம கதவ திறப்போம் என்று நினைத்து கொண்டு மெல்ல கதவை திறந்தான் .ஆனால் சுவாதி அங்கே ஹாலில் உக்காந்து டிவி பார்த்து கொண்டு இருந்தாள் .இவனை பார்த்தும் ஹாய் பார்டிலாம் முடிஞ்சுடுச்சா என்றாள் .ம்ம் முடிஞ்சுச்சு நீ என்ன இவளவு நேரம் முழிச்சு இருக்க தூக்கம் வரலையா என்றான் .ஹலோ சார் மணி பத்தரை தான் ஆகுது நீங்கதான் சீக்கிரம் வந்திடிங்க அப்படி என்ன பார்டிக்கு போன இவளவு சீக்கிரம் வந்துட்ட என்றாள் .

ஒ அது பார்டி இல்ல ஆபிஸ் ஸ்டாப் ஒருத்தர் வீட்டு விசேசம் அதான் சீக்கிரம் வந்துட்டேன் என்றான் .என்ன விசேசம் என்றாள் .ஒன்னும் இல்ல ஒருத்தரோட மகன் பிறந்த நாள் அவளவுதான் என்றான் .யே ஆபிஸ் ஸ்டாப்ன்னு சொன்னதுக்கு அப்புறம் தான் ஞாபகம் வருது மணியும் வள்ளியும் எப்படி இருக்காங்க என்றான் .ம்ம் நல்லா இருக்காங்க என்றான் .சரி நீ ஏன் இவளவு டல்லா இருக்க என்றாள் . விக்கிக்கு அவளிடிம் தன் முதல் காதலை நினைத்து அழுததை அவளிடிம் சொல்லி அழுக வேண்டும் போல இருந்தது . ஆனால் அது அவனை பலமில்லதவன் போல் காட்டும் என்று நினைத்து கொண்டு ஒன்னும் இல்ல எனக்கு டயார்டா இருக்கு நான் தூங்க போறேன் என்று சொல்லி விட்டு போனான் .

அவன் போக முன் சுவாதி
அதிர்ச்சியோடு விக்கி இங்க பாரு
ரத்தம்…

விக்கி இங்க பாரு தரை முழுக்க ரத்தம் என்று சுவாதி காட்டிய இடத்தில ரத்த துளிகள் இருந்தது .ஆமா ரத்தம் இது ஏங்க இருந்து வந்துச்சு என்று விக்கி அலுப்போடு கேட்டான் .வெயிட் வெயிட் அந்த ரத்த துளி ஸ்ட்ரைட்டா ஏங்க போகுதுன்னா என்று சொல்லி கொண்டு சுவாதி அந்த ரத்த துளிகள் இருந்த இடத்தை பார்த்தாள் .

பின் விக்கியை பார்த்து டேய் அந்த ரத்த கரை ஸ்ட்ரைட்டா உன் கிட்டதான் போகுது .எங்கிட்டும் கார்ல அடிபட்டுட்டியா இல்ல பார்ட்டில எவன் கூடயும் சண்ட போட்டியா என்றாள் . இல்ல என் கிட்ட எதுக்கு ரத்தம் வர போகுது என்றான் .டேய் உன் கால்ல தான் வருது என்றாள் .எங்க என்றான் . உன் கால் விரல பாரு என்றாள் .விக்கி தன் காலை பார்த்தான் .கால் விரலில் இருந்து அதிக ரத்தமாக வந்து கொண்டு இருந்தது .அப்போது தான் விக்கிக்கு தன் முதல் காதல் தோல்வியை நினைத்து கல்லில் ஏத்தியது ஞாபகம் வந்தது .

ஆனால் அவன் தன் காலில் வந்து கொண்டு இருந்த ரத்தத்தை பார்த்து ஒ மை காட் ரத்தம் என்று சொல்லி கொண்டே பக்கத்தில் இருந்த சோபாவில் சாய்ந்து மயக்கம் போட்டான் .அவனுக்கு சிறு வயதில் இருந்தே ரத்தத்தை பார்த்தால் மயக்கம் வந்து விடும் .பின் அவன் ஒரு பத்து நிமிடம் சோபாவில் படுத்து இருந்தான் .தீடிரென வலி ஏற்பட ஆ என்று கத்தி கொண்டே முழித்து பார்த்தான் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *