என் காதலி Part 11 67

அங்கு சுவாதி அவன் கால் விரல்களை பஞ்சை வைத்து துடைத்து கொண்டு இருந்தாள் .என்னடி பண்ற விடுடி எரியுது என்றான் .கத்தாதடா சும்மா லைட்டா டெட்டால் தான் போடுறேன் என்றாள் . ஒன்னும் வேணாம் நீ போ என்றான் . கொஞ்ச நேரம் பொறுத்துக்கோ என்றாள் .பின் அவள் அந்த காயத்தை நன்கு துடைத்தாள் .அந்த டெட்டால் எரிச்சலில் விக்கி மேலும் அதிகமாக கத்தினான் .

கத்தி கொண்டே விக்கி எந்திரக்க முற்பட விக்கியும் சுவாதியும் நேருக்கு நேர் பார்த்து கொண்டனர் .சிறு வினாடிகள் இருவரும் அமைதியாக இருக்க

வாட் நான் என்ன உனக்கு அன்னைக்கு மாதிரி கையா அடிச்சு விடுறேன் அப்படியே ஸ்ட்ரைட்டா கிஸ் அடிக்க வர மாதிரி வர ஒழுங்கா சோபாவுல சாய்ஞ்சு படுடா என்று அரட்டினாள் .ஓகே ஆனா எரியுது என்றான் .பரவல கண்ண மூடி கிட்டு பல்ல கடிச்சுக்கோ கொஞ்ச நேரம் என்றாள் .

ஓகே என்று விக்கி கண்களை மூடினான் .ஆனால் அடுத்த நிமிடமே கண்ணை திறந்து தன் கால் விரல் காயத்தை சுத்தம் பண்ணி கொண்டு இருந்த சுவாதியை தன் ஒன்றரை கண்ணை கொண்டு பார்த்தான் .பின் அவள் காயத்தை துடைப்பதிலே கவனமாக இருந்ததால் அவனை பார்க்க மாட்டாள் என்று நினைத்து முழுதாக கண்ணை திறந்து பார்த்தான் .விக்கிக்கு இப்போது காலில் எரிச்சல் இருந்தாலும் அது மூளைக்கு உரைக்க வில்லை . மாறாக மீண்டும் சுவாதியை பார்த்து கொண்டே இருக்க வேண்டும் போல் இருந்தது .

அவள் முழுதுமாக காலில் இருந்த ரத்தத்தை சுத்தம் செய்து விட்டு எழுந்தாள் .சரி நான் என் ரூமுக்கு போகட்டா என்றான் .யே இருடா பேண்டேஜ் போட்டு விடுறேன் என்று அவள் ரூமுக்கு போயி பேண்டேஜ் எடுக்க போனாள் இப்ப எதுக்கு இவ நம்ம மேல இவளவு அக்கறை காட்டுரா சரி நம்மளா எதுவும் மனச போட்டு குழப்பம அவ வரட்டும் அவ கிட்டயே கேப்போம் என்று நினைத்து கொண்டு இருந்தான் .

அவள் வந்து மீண்டும் ஒரு முறை துடைத்து விட்டு அந்த காயத்திற்கு கட்டு போட்டாள் .சரி கேட்ருவோம் என்று நினைத்து கொண்டு சுவாதி என்றான் . அவள் என்னடா என்று நிமிர்ந்து பார்த்தாள் .விக்கிக்கு அவள் கண்களை நேருக்கு நேராக பார்த்தான் . அதன் பின் அவள் கண்களை நேருக்கு நேராக பார்த்து கொண்டு அவனால் பேச முடியவில்லை .என்ன என்றாள் மீண்டும் .அவன் நாத்திங் என்றான் .

அது இருக்கட்டும் இது என்ன இவளவு பெரிய காயமாக்கி வச்சு இருக்க என்ன பண்ணி தொலைச்ச என்றாள் .அது வர்ற வழியில ஒரு கல்ல தெரியாம மோதிட்டேன் என்றான் .மோதிட்டியா இல்ல நீயா போயி எத்துன்னியா என்றாள் .என்ன இது கரெக்டா சொல்றா என்று நினைத்து கொண்டு ஏன் அப்படி கேக்குற என்றான் .இல்ல காய்த்த பாத்தா தெரியாம இடிச்ச மாதிரி இல்ல வேணும்னு எங்கயோ உதைச்ச மாதிரி இருக்கு ஏன்னா இடிச்சா சிறுசாதான் காயம் இருக்கும் உன்னோட காயம் பெருசால இருக்கு என்றாள்

அது ஒன்னும் இல்ல பெரிய கல்லுல மோதிட்டேன் அதான் அப்படி இருக்கு அவள் கட்டு போட்டு முடித்தாள் .யே இன்னும் ஒரு ரெண்டு நாளைக்கு ஆபிஸ்க்கு ஷு போடாம போ என்றாள் .ம்ம் சரி நீ என்ன ஏன் மேல இவளவு அக்கறை காட்டுற எதுவும் காரியம் ஏதும் ஆகணுமா என்றான் சிரித்து கொண்டே .ஒரு காரியமும் இல்ல எனக்கு எப்பவுமே இந்த மாதிரி நர்சிங் வொர்க் பிடிக்கும் .நம்ம குரூப்ல எல்லாத்துக்கும் இந்த மாதிரி எல்லாத்துக்கும் பாரஸ்ட் அயிட் பண்ணி இருக்கேன் மணி வள்ளி டேவிட்ன்னு எல்லார் காயத்துக்கும் இந்த மாதிரி கட்டு போட்டு இருக்கேன் ,

நார்சிங் படிக்கணும்னு தான் ஆச ஆனா படிக்கல என்றாள் .சரி ஏன் படிக்கல என்றான் ,ஏன்னா எனக்கு அத விட இது பிடிச்சு இருந்துச்சு அவளவுதான் என்றாள் ,ஓகே என்றான் .என்னைய விடு நீ என்ன கொஞ்சூண்டு ரத்தத்த பாத்ததுக்கே மயக்கம் போட்டு விழுந்துட்ட ஏன்டா பயந்தாகுழி என்றாள் . ஏன் நான் ஒன்னும் ரத்தத்த பாத்து மயக்கம் ஒன்னும் போடல என்றான் . அப்புறம் என கேட்டாள் .நான் டயார்டா இருந்துச்சுன்னு அப்படியே சாஞ்சுட்டேன் என்றான் .

யே எ எ என்று சுவாதி அவனை கிண்டல் அடித்தாள் .நிஜமா நான் மயக்கம் போடல என்றான் .போடா என்றாள் .சரி உங்க அஞ்சலி அக்கா வந்துட்டு போயிட்டாங்களா என்றான் .ம்ம் யே அவங்க பேர் எல்லாம் ஞாபகம் வச்சு இருக்க என்றாள் .பின்ன அவங்கதான டெல்லி போலிஸ் கமிசனர் வோயிப்ன்னு சொல்லி என்னைய மிரட்டுன மறக்க முடியுமா என்றான் .யே நான் வேணும்னு மிரட்டல அப்ப எனக்கு வேற வழி தெரியலடா மன்னிச்சுக்கோடா என்றாள் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *