அசுரன் 305

10 ம் நூற்றாண்டு

மகேந்திரபுரி. பொன்முகலி ஆறு பாய்ந்து செழித்து வளம் கொழிக்கும் நாடு.பொன்முகலி ஆற்றின் நீர் வயல்களில் பாய்ந்து பொன்னை போல் நெல்லை விளைய வைப்பதால் ஆற்றுக்கு பொன்முகலி என பெயர் வந்தது.மரங்களில் உள்ள தேன் கூட்டில் அளவுக்கு அதிகமாய் தேன் சேர்ந்து சொரிந்து கொண்டு இருக்கும்.பழுத்து விழும் பழங்களும்,தேனும்,பசுக்கள் தானாக சொரியும் பாலோடு கலந்து பஞ்சாமிர்தம் சாலையில் ஆறாக ஒடும் வளம்மிக்க தேசம் அது.மக்கள் அனைவரும் தங்கள் தேவைக்கு அதிகமாக பெற்று மகிழ்ச்சியோடு இருந்த தேசம் அது.லட்சுமி கடாட்சம் மிகுந்த நாடு.அதற்கு காரணம் அந்த நாட்டின் இளவரசி தேவமங்கை மதிவதனி..

இந்த நாட்டின் அரசன் மகேந்திரவர்மன்.அவன் சற்று கவலை தோய்ந்த முகத்தோடு அமர்ந்து இருந்தான்.குங்கிலியம் மற்றும் வாசனை திரவியங்கள் போடப்பட்டு நறுமணம் கமழ நவரத்ன சிம்மாசனத்தில் வீற்று இருந்தான்.

அமைச்சர் அரசரிடம் வந்து,
அரசே,நான் தங்களுக்கு ஒரு நற்செய்தி கொண்டு வந்துள்ளேன்.ஆனால் தங்கள் முகம் வாட்டமாக உள்ளதே என்ன காரணம்?

வாருங்கள் அமைச்சரே,என் மகளின் எதிர்காலத்தை நினைத்து தான் வருந்தி கொண்டு இருந்தேன்.

தங்கள் மகளுக்கு என்ன குறை மன்னா,ஶ்ரீதேவியின் அழகோடு பிறந்தவர் உங்கள் மகள்.அழகு மட்டுமா,அறிவு,வீரம் எல்லாவற்றிலும் சிறந்து விளங்குவர் அவர்.எட்டு திக்கிலும் உள்ள மன்னர்கள் அவர் அழகை கண்டு மெய்மறந்து நான்,நீ என போட்டி போட்டு கொண்டு பெண் கேட்கின்றனர்.அதற்காக தானே தாங்கள் நாளை சுயம்வரம் ஏற்பாடு செய்து உள்ளீர்கள்.

ஆம் அமைச்சரே,என் ஒரே மகள் மதிவதனி. மதியும்,உடலில் வதனமும்,நெஞ்சில் வீரமும் ஒரு சேர பெற்றவள்.அவளை போன்ற சிறந்த அழகி இந்த உலகிலேயே கிடையாது.அவளை நினைக்கும் போது என் மனம் பெருமையில் பொங்குகிறது.ஆனால்….?

என்ன ஆனால் அரசே?

அவள் அழகுக்கு ஈடான ராஜகுமாரனை தேடி கண்டுபிடித்து மணம் செய்து வைக்க என்பதே என் ஆசை.

ஆம் ஒரு தகப்பனாரின் முக்கிய கவலையே அது தானே மன்னா..! அதற்கு தானே தாங்கள் எட்டு திக்கிலும் உள்ள எல்லா நாட்டிற்கும் செய்தி அனுப்பி உள்ளீர்கள்.

ஆம் உண்மை தான் அமைச்சரே,ஆனால் ஒரு நாட்டிற்கு மட்டும் அனுப்பவில்லை.

5 Comments

  1. Wow excellent keep writing

  2. Wonderful story

  3. Continue pannu bro veri thanama mathivathaniya okkurathu mari eluthu

  4. Classic story writing and detailing. Continue your writing. Currently I am reading your 13 th episode.

Comments are closed.