அசுரன் 305

ஆம் தந்தையே ,மாயமலை மற்றும் அங்கு வாழும் மக்கள் பற்றி தாங்கள் கூறி உள்ளீர்கள்.அதுவும் உங்களை வென்ற காத்தவராயன் இன்னும் உயிரோடு இருக்கிறான்.அவனை என் கரங்களால் கொன்று,அவன் நாட்டை கைப்பற்ற என் தோள்கள் திணவு எடுக்கின்றன.தாங்கள் மாயமலை மீது படை எடுக்க எனக்கு உடனே அனுமதி தர வேண்டும் என்று கேட்டாள்.

மகேந்திரவர்மன் அவளை கூர்ந்து நோக்கி,”உனக்கு என்ன தெரியும் மாயமலையை பற்றி?அந்த நாட்டிற்குள் பிரவேசிப்பது எமனின் கோட்டைக்குள் செல்வது போல. நாற்புறமும் சுற்றி உள்ள மலைகள்,ஆர்ப்பரித்து ஒடும் காட்டாறுகள்,அதை தாண்டி அடர்ந்த காடுகள்,இதை எல்லாம் தாண்டி தான் நாம் மாயமலை கோட்டையை அடைய முடியும்.
இவற்றை தாண்டுவதற்குள்ளேயே நம் படையின் பெரும் பகுதி சோர்ந்து விடும்.”

“இல்ல தந்தையே என்னால்”என்று அவள் கூற வந்தவளை இடை நிறுத்தி

“நான் கூறி முடிக்கும் வரை அமைதியாக இரு மதிவதனி,உன் திறமையில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது.ஆனால் நீ நினைக்கும் மாதிரி சமவெளியில் செய்யும் யுத்தம் இது கிடையாது.இலக்கு எது எங்கே என்றே தெரியாது.காட்டிற்குள் ஒளிந்து இருக்கும் வீரர்களிடம் இருந்து நாற்புறமும் கணைகள் வரும்.அதனால் நமக்கு பெரும்சேதம் ஏற்படும்.வழக்கமாக ஒரு நாடு,மற்ற நாட்டுடன் வணிகம் செய்வது மூலம் அந்த நாட்டின் நிலப்பரப்பின் தன்மைகளை வணிகர்கள் மூலம் மன்னர்கள் தெரிந்து கொள்வார்கள்.அதற்கேற்ப போர் வியூகம் வகுப்பார்கள்.ஆனால் மாயமலையினர் எந்த நாட்டுடனும் வணிகம் வைத்து கொள்வதில்லை.அடுத்த நாட்டு மக்களிடமும் தொடர்பு வைத்து கொள்வதில்லை.பெயருக்கு ஏற்றார் போல் அந்த நாடு நிஜமாகவே மாய பூமி தான்.சில இடங்களில் வேகத்தை விட விவேகம் தான் மிக முக்கியம்.நீ அவன் மகனை கொன்று இருக்கிறாய்,கண்டிப்பாக காத்தவராயன் பழிவாங்க நம் நாட்டின் மீது படை எடுத்து வருவான்.எதிரியை அவன் இடத்தில் எதிர்கொள்வதை விட நம்மிடம் வரவைத்து எதிர்கொள்வதே புத்திசாலிதனம்.அதுவரை பொறுமையாக காத்திரு..என்று உரைத்தார்.

இந்த தடவை மகேந்திரவர்மன் சொல்வதே அவளுக்கு சரியாகபட்டது.ஆனால் நாட்கள் சென்று கொண்டே இருந்தது.காத்தவராயன் படை எடுத்து வருவதற்கான அறிகுறியே காணோம்..

சில நாட்களுக்கு பிறகு,
காத்தவராயன் வந்தான்.ஆனால் படையோடு அல்ல.ஒத்தையாக வந்தான்.மலையில் கிடைத்த தேனை சந்தையில் கூவி கூவி வணிகம் செய்வது போல பாவ்லா செய்து கொண்டு மதிவதனியின் வரவை எதிர்பார்த்து காத்து கொண்டு இருந்தான்.ஆனால் ஏமாற்றம் தான் மிஞ்சியது.அப்பொழுது வேடசந்தன் என்பவன் வந்து “என்னப்பா தேன் எவ்வளவு விலை”என்று கேட்டான்.

ஒரு ஆழாக்கு ஒரு பொற்காசு என்று கூற,அதை கேட்டு வேடசந்தன் “தேனுக்கு போய் என்னப்பா இவ்வளவு விலை சொல்ற”என்று ஆச்சரியப்பட்டான்.

இது சாதாரண தேன் அல்ல தம்பி,மாயமலைதேன்.அவ்வளவு சீக்கிரம் எளிதில் கிடைக்காது.அங்கு இருக்கும் மூலிகை பூக்களில் இருந்து தேனை சேகரிக்கும் தேனீக்களின் கூட்டில் இருந்து எடுக்கும் தேன்.இதை சாப்பிட்டால் உடம்பில் நோய் நொடியே வராது என்று கூறினான்.

வேடசந்தன் ,என்னது மாயமலை தேனா?அங்கே தான் யாரும் உள்ளே கூட போக முடியாதே?அங்கே இருக்கும் மக்கள் வெளியில் இருக்கும் யாரிடம் வணிகம் செய்வது இல்லையே ?உனக்கு மட்டும் எப்படி கிடைத்தது?

“நீ சொன்னது உண்மை தான்.இப்போ நடந்த போரில் ஏதோ பிரச்சினை போல,அதனால் சில பொருட்களை வாங்க பண்ட மாற்றுமுறையில் நாட்டிற்கு வெளியில் வந்து விக்கிறாங்க.அவங்ககிட்ட தான் நான் வாங்கியாந்தேன்.”

வாங்க ஆசையா தான் இருக்கு.ஆனால் என்கிட்ட காசு இல்லையே என்று புலம்பினான்..

சரி,நீங்க வேலை செய்யற?

“நான் கோட்டையில் உள்ள கோவிலுக்கு பூங்கைங்கரியம் பண்றேன்.என்னோட தோட்டத்தில் தினமும் காலை,மாலை பூ பறித்து கட்டி எடுத்து சென்று இறைவனுக்கு சமர்ப்பிப்பது என் வேலை.இதற்கு அரண்மனையில் மாத ஊதியமும் தருகிறார்கள்..

சரி,நீ எனக்கு உதவி செய்தால் இந்த தேன் முழுக்க இலவசமாக தரேன்.
உடனே வேடசந்தன் கண்களில் ஆசை மின்னியது.

உடனே “என்ன உதவி செய்ய வேண்டும்?என்று கேட்டான்.

காத்தவராயனும்,”அது வேறு ஒன்றும் அல்ல,என்னிடம் அரியவகை ரத்தினங்கள் உள்ளது.அதை மன்னரிடம் விற்றால் எனக்கு நல்ல லாபம் கிடைக்கும்.அதற்கு என்னை அரண்மனை உள்ளே அழைத்து செல்ல முடியுமா?”என்று கேட்டான்.

வேடசந்தனும் சந்தோஷமாக”அதற்கென்ன வியாபாரி,காலை கோவிலுக்கு பூ கொடுக்கும் போது என்னுடன் துணைக்கு வா.நான் அரண்மனை உள்ளே அழைத்து செல்கிறேன்.சரி இரவு எங்கு தங்குவதாக உத்தேசம்.?,என்று கேட்டான்.

காத்தவராயன் வருத்தமுடன்”இங்கே சத்திரம் ஏதாவது ஒன்றை தேட வேண்டும்.”

வேடசந்தனோ, “இங்கே என் வீடு அரண்மனை வெளியில் தான் உள்ளது.உனக்கு ஆட்சேபனை இல்லை என்றால் என்னுடன் வந்து இரவு தங்கி கொள்ளலாம்.”என்று சொல்ல,

காத்தவராயனுக்கும் அது சரியென பட்டது.

அவன் வீட்டில் இரவு சோள கஞ்சியும் கிழங்கும் சாப்பிட்டு விட்டு பொழுது புலர காத்தவராயன் காத்து இருந்தான்.இரவு முழுவதும் மன்னனிடம் என்ன சொல்லி எப்படி போய் மதிவதனியை போய் பார்ப்பது என மனதுக்குள் ஒத்திகை பார்த்து கொண்டான்.

காலை விடிவதற்கு முன்,ஆற்றில் குளிக்க செல்லும் போது விளக்கு ஒளியில் அரண்மனை ஜொலிப்பதை பார்த்து,இந்நேரம் நான் தேடி வந்த தேவதை அங்கே உறங்கி கொண்டு இருப்பாள் என்று ஏக்க பெருமூச்சு விட்டான்.

ஆற்றில் இறங்கி நன்றாக நீச்சல் அடித்து குளித்து விட்டு மேலேறி ஆடைகளை நன்றாக பிழிந்து கோட்டையின் சுவரில் காய போட்டான்.அப்பொழுது ஒரு பாறையில் அமர்ந்து கோட்டை சுவற்றில் சாய,அவன் முதுகில் சில்லென்ற காற்று பட்டது.உடனே சந்தேகத்துடன் எழுந்து,என்ன இது சுவற்றில் இருந்து சில்லென்று காற்று வீசுது என சுவற்றை தட்டி தட்டி பார்த்தான்.பக்கத்தில் சற்று தள்ளி உள்ள சுவற்றை தட்டி தட்டி பார்க்க அது வேறுவித ஓசை வந்தது.ஆகா இது ஏதோ ரகசிய கதவு போல் உள்ளதே..!கதவின் இடுக்கின் வழியே வந்த காற்று தான் நம் மீது பட்டது என கைப்பிடி எங்கே?என்று துழாவினான்.கடைசியில் உட்கார்ந்து இருந்த பாறையை தள்ள அதன் கீழ் ஒரு கைப்பிடி மறைக்கப்பட்டு இருந்தது.உடனே அதை பிடித்து திருக சுவரில் இருந்த கதவு திறந்தது.உடனே அதற்குள் பிரவேசித்து தாளிட்டு அங்கு இருந்த தீப்பந்ததை எடுத்து கொண்டு இருட்டில் நடந்தான்.இது எங்கு கொண்டு போய் விடுமோ என்று அவனுக்கு தெரியவில்லை.ஆனால் துணிந்து முன்னேறி கொண்டு இருந்தான்.அவன் துணிவுக்கு பரிசும் காத்து இருந்தது.எதிரி நாடுகளிடம் ஒருவேளை நாடு சிக்கி கொண்டு விட்டால் அரண்மனையில் இருந்து அரசர் மற்றும் குடும்பத்தினர் தப்பிக்க போடப்பட்ட பாதை இது. இந்த பாதை சேரும் இடம் ராணி மற்றும் இளவரசி வசிக்கும் அந்தப்புரம்.

“நினைவோ ஒரு பறவை” காட்டிலும் இந்த கதை எழுத நிறைய நேரம் தேவைப்படுகிறது..ஆனால் அந்த கதைக்கு கிடைத்த வரவேற்பு ஏனோ இந்த கதைக்கு கிடைக்கவில்லை.இதே நிலை தொடர்ந்தால் இந்த கதையை கைவிட வேண்டிய சூழல் உருவாகலாம்..

5 Comments

  1. Wow excellent keep writing

  2. Wonderful story

  3. Continue pannu bro veri thanama mathivathaniya okkurathu mari eluthu

  4. Classic story writing and detailing. Continue your writing. Currently I am reading your 13 th episode.

Comments are closed.