“தளபதி,அவர்கள் பொன்முகலி ஆற்றை தாண்டி வருவதற்கு முன் அவர்கள் படையின் ஒரு பகுதி அழிந்து இருக்க வேண்டும்..”என மதிவதனி சொல்ல,
எப்படி தேவி,அவர்கள் ஏற்கனவே ஆற்றங்கரையை வந்தடைந்து விட்டார்கள்.விடிந்த உடன் போர் முரசு ஒலித்து விடும்.நம்மிடம் சமயம் இல்லையே..
ஏன் விடிவதற்கு முன் இரவு என்று உள்ளதே நமக்கு அது போதும் தளபதி..
“ஆனால் இரவில் போர் செய்யகூடாது என்று விதி உள்ளதே தேவி”
“அது மனிதர்களுக்கு,இவர்களை போன்ற அரக்கர்களுக்கு அல்ல.அதுவும் நாம் போர் செய்ய போவது இல்லை.வேட்டையாட தான் போகிறோம்..”
எனக்கு புரியவில்லை தேவி,எனக்கு சற்று விளக்கமாக கூறுங்கள்.
மதிவதனி சொல்ல சொல்ல ,தளபதி மூக்கில் விரல் வைத்தான்..
மதிவதனி சொல்படி, அகழியில் இருந்த முதலைகள் ஆற்றில் திறந்து விடப்பட்டன..
மாயமலையின் வீரர்கள் கூடாரத்தில் இரவில் நிம்மதியாய் உறங்கி கொண்டு இருக்க,ஒவ்வொரு கூடாரம் அருகே நூற்றுக்கணக்கான விஷ ஜந்துக்கள்,பாம்பு, தேள் என அனைத்தும் விடப்பட்டன..
பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள்.மாய மலையினர் மட்டும் விதிவிலக்கா என்ன?
பாம்பிடம் கொட்டு வாங்கி அலறி விழித்தனர்.சிலர் தேளிடம் கொட்டு வாங்கி கதறினர்..
எல்லோரும் பதறி திக்கு தெரியாமல் நாலா திசைகளிலும் ஓடினர்.அங்கு ஒரே கூச்சலும், களேபரமாக இருந்தது.ஒரு சிலர் பாம்பிடம் இருந்து தப்பிக்க ஆற்றில் குதிக்க, முதலைகளிடம் சிக்கி இரையாகினர்.சிலர் சோள காட்டின் வழியே ஓட அவர்கள் அங்கே வழுக்கி விழுந்தனர். மேலும் வித்தியாசமான வாசனை அங்கே வந்தது.
அது விளக்கு ஏற்றும் எண்ணெய் தான் அது.சுதாரித்து எழுந்து ஒட மீண்டும் மீண்டும் வழுக்கி விழுந்தனர். மடமடவென தீ ஜ்வாலைகளோடு நூற்றுகணக்கான அம்புகள் வந்து விழ பல வீரர்கள் எரிந்து சாம்பல் ஆயினர்.இவை எல்லாம் தேவதத்தன் கண் முன்னே அரை நாழிகையில் நடந்து முடிந்து விட்டது. தன் படை வீரர்கள் கண் முன்னே மடிவதை கண்டு செயலற்று நின்று இருந்தான்..
தளபதி வந்து மதிவதனியிடம் “தங்கள் திட்டம் அபாரம் தேவி,நம் படையில் ஒரு வீரரை கூட இழக்காமல் எதிரியின் பாதி படையை அழித்தாகி விட்டது. மிச்சம் உள்ள வீரர்களை நாம் எளிதாக சமாளித்து விட முடியும்.நாளை வெற்றி நமக்கே”என்று கூவினான்..
மதிவதனி “அவசரப்பட வேண்டாம் தளபதி,நாளை நானே படைக்கு தலைமை தாங்கி வருகிறேன்.நாளை நான் சொல்லும் படி மட்டும் செய்யுங்கள்..
உத்தரவு இடுங்கள் தேவி..
மதிவதனி திட்டத்தை எடுத்துரைத்தாள்..
பொழுது விடிந்தது.
தேவதத்தன் ஆற்றிலும், சோளகாட்டில் இருந்த படை வீரர்களின் சடலத்தை பார்த்து கலங்கினான்.
போரிடாமலே இத்தனை வீரர்கள் இறந்து விட்டார்கள் என்று தந்தைக்கு தெரிந்தால் கண்டிப்பாக என்னை உயிரோடு விடவே மாட்டார் என நினைத்தான்.அதற்கு போரிட்டு உயிரை விடுவதே மேல் என எஞ்சி இருக்கும் படையை திரட்டி போராட துவங்கினான்..
ஆற்றை கடந்து மகேந்திரபுரி நாட்டை நோக்கி கொஞ்ச கொஞ்சமாக முன்னேறி கொண்டு இருந்தான்.
மதிவதனி படையில் நாலில் ஒரு பகுதியை மட்டும் போரிடவிட்டு அவர்களை முன்னேற விட்டு கொண்டு இருந்தாள்.இவ்வளவு தானா இவர்கள் படை எண்ணிக்கை என தேவதத்தன் மகிழ்ச்சி ஆனான்.
தேவதத்தன் முதல்முறையாக மதிவதனியை பார்த்து அவள் அழகில் சொக்கினான். தன் படை வீரர்களுக்கு அவளை மட்டும் தாக்க வேண்டாம் என கட்டளை இட்டான்.ஆனால் மதிவதனி வில்லில் இருந்து வந்த பாணங்கள் அவர்கள் படையின் வீரர்களை கொன்று குவித்து கொண்டு இருந்தது.இதோ இப்போ சிக்கி விடுவாள்,அப்போ சிக்கி விடுவாள் என தேவதத்தன் முன்னேறி கொண்டே வர, மதிவதனியின் படைகள் பின்னோக்கி சென்று கொண்டே இருந்தன.
தீடீரென மூன்று திசைகளில் இருந்து மகேந்திரபுரி வீரர்கள் முளைத்து தாக்க தொடங்கினர்.பின்னோக்கி சென்று கொண்டு இருந்த மதிவதனியின் படை பிரிவும் இப்பொழுது முன்னேறி தாக்க தொடங்கியது..
அப்பொழுது தான் தேவதத்தனுக்கு புரிய தொடங்கியது.இவள் கண்ணை கட்டி ஏமாற்றி விட்டாள் என்று. மதிவதனி உண்மையில் மதிநுட்பம் நிறைந்தவள் என்று பாராட்டி கொண்டான்.
நாற்புறமும் மாயமலை வீரர்களை மகேந்திரபுரி வீரர்கள் சூழ்ந்து அவர்களை கொன்று குவித்தனர்..
கூடிய விரைவிலேயே தேவதத்தன் மடக்கி பிடிக்கபட்டான்.
அவனை சங்கிலியால் பிணைத்து இழுத்து மகேந்திரவர்மன் முன்பு நிறுத்தினர்.
தான் தோற்ற நாட்டிடம் தன் மகள் வென்று விட்டாள் என்று அவனுக்கு பெருமிதமாக இருந்தது.ஆனால் அவள் சொன்ன தண்டனை கேட்டு மிகவும் பயந்தார்.
மதிவதனி ,தேவதத்தனை முச்சந்தியில் கழுவில் ஏற்றி கொல்ல சொன்னாள்.

Wow excellent keep writing
Wonderful story
Super
Continue pannu bro veri thanama mathivathaniya okkurathu mari eluthu
Classic story writing and detailing. Continue your writing. Currently I am reading your 13 th episode.