அவர்களுக்கே அவமானமாகி விட்டது.ஒரு பெண் முடிவதை,நம்மால் திருப்பி செய்ய முடியாதா என நினைத்தார்கள்.மேலும் அவள் எப்படி செய்ய போகிறாள் என்று பார்க்கும் ஆவலும் எழுந்தது.எனவே போட்டிக்கு ஒப்பு கொண்டனர்.
மதிவதனி சொன்ன போட்டி இது தான்..
இரண்டு பன்றிகளை ஒரே நேரத்தில் இரண்டு திசைகளில் இருந்து இரண்டு ஓடவிடுவார்கள்.அதில் முதல் பன்றியை குறி வைத்து தாக்க வேண்டும்.ஆனால் முதல் பன்றியை அம்பு சென்று தாக்குவதற்குள் இரண்டாம் பன்றியை நோக்கி அம்பு எய்ய வேண்டும்.அடுத்தடுத்து விடப்பட்ட இரண்டு அம்புகளும் இரண்டு பன்றிகளை ஒரே நொடியில் சென்று தாக்கி அழிக்க வேண்டும்.இது தான் போட்டி..
ஒரே நேரத்தில் இரண்டு அம்புகளையும் விட முடியாது.அதே நேரம் வில்லில் இருந்து புறப்பட்ட முதல் அம்பு பன்றியை சென்று தாக்குவதற்குள்,இரண்டாம் அம்பு அதை விட இரண்டு மடங்கு வேகமாக செலுத்தினால் மட்டுமே இரண்டாம் பன்றியையும் ஒரே நேரத்தில் தாக்கி அழிக்க முடியும்.அதுவும் ஒரே நொடியில் வீழ்த்த வேண்டும்.இதை செய்து முடிக்க வேண்டும் என்றால் அது மதிவதனி கையில் இருக்கும் வில்லினால் மட்டுமே செய்ய முடியும்.அதுவும் இதற்கு மதிவதனி நிறைய பயிற்சி வேறு எடுத்து இருந்தாள்.ஆனால் போட்டி போடும் நபர்கள் நிலை முற்றிலும் வேறு.அவர்கள் இந்த மாதிரி பயிற்சியை மேற்கொள்ளவே இல்லை.அதுவும் அவள் கையில் இருக்கும் வில்லினால் மட்டுமே செய்ய முடியும் என்ற ரகசியமும் அவர்களுக்கு தெரியாது.போர் எதுவும் செய்யாமலே நாட்டை கைப்பற்ற வேண்டும் என்று மதிவதனி விரித்த வலையில் இருவரும் வந்து சிக்கி கொண்டனர்.
மைதானத்தில் பன்றிகள் இரு திசைகளில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன.
மதிவதனி இரு பன்றிகளின் வேகத்தை கூர்மையாக கவனித்து கொண்டு இருந்தாள்.
இரண்டும் எதிரெதிர் திசைகளில் ஒன்றையொன்று நோக்கி வந்து கொண்டு இருந்தன.ஒரு குறிப்பிட்ட தூரம் வந்தவுடன் மதிவதனி முதல் பன்றியை நோக்கி நாணை பின்னோக்கி இழுத்து கொஞ்சம் மெதுவாக விட்டாள்.விட்ட அடுத்த நொடியே அவள் வில்லில் அடுத்த அம்பை பூட்டி வேகமாக அம்பை விட அது இரண்டாவது பன்றியை நோக்கி பாய்ந்தது.முதல் பன்றியை அம்பு துளைக்கும் அதே நொடி இரண்டாவது பன்றியின் உடலையும் துளைத்தது.கணக்கு போட்டு துல்லியமாக இரண்டு பன்றியின் கணக்கை முடித்து எமலோகம் அனுப்பி வைத்தாள்.
மைதானத்தில் பார்த்த மக்கள் வியந்து கரகோஷம் எழுப்பினர்.வில்லுக்கு விஜயன் என்று பேர் எடுத்த அர்ஜுன் ஒருவேளை இதை பார்த்தால் அந்த பட்டத்தை மதிவதனியிடம் கொடுத்து ஓடி விடுவான் என்று வாழ்த்து ஒலி எழுப்பினர்..
இரண்டு நாட்டு மன்னர்களும் விழி பிதுங்கி நின்றனர்.
அவர்களில் ஒருவன் நாட்டை ஒப்படைத்து விட்டு பின்வாங்கி கொண்டு,மதிவதனியின் நிபந்தனையை ஏற்று கொண்டு மஞ்சள் அரைக்க சென்று விட்டான்.
ஆனால் இன்னொரு மன்னன் தோற்றாலும் போராடி பார்த்து தோற்க வேண்டும் என முயற்சி செய்தான்.
அதில் அவன் வெற்றிகரமாக இரண்டு பன்றிகளை வீழ்த்தினாலும்,ஒரே நொடியில் வீழ்த்த முடியவில்லை.
மகேந்திரவர்மன் மதிவதனியிடம்,”மகளே,அங்க நாட்டு மன்னன் நம் நாட்டின் உற்ற தோழன்.நம் நாட்டுடன் நட்புறவை பேணியே வந்துள்ளான்.நீ சொல்லும்படி ஒரே நொடியில் பன்றிகளை கொல்லாவிட்டாலும்,சின்ன இடைவெளியில் வீழ்த்தி உள்ளான்.அதாவது இலக்கு கடினம் என்று தெரிந்தும் பயந்து ஓடாமல் முயற்சி செய்துள்ளான்.ஆதலால் உன் நிபந்தனைபடி நீ மணம் முடிக்க தேவை இல்லை.ஆனால் அவன் நாட்டை அவனிடம் இருந்து பறிக்க வேண்டாம் என்று கெஞ்சினார்..”
ஆனால் மதிவதனி பிடிவாதமாக மறுத்தாள்.”தந்தையே எனக்கு இந்த பாரத நாட்டை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து நான் பேரரசியாக வாழ வேண்டும் என்பதே என் கனவு.அதற்கு எனக்கு ஒவ்வொரு நாடும் எனக்கு தேவை.எல்லா நாட்டு மன்னர்களும் என் கால் பிடித்து சேவகம் செய்ய வேண்டும்.”ம்,இவரை இழுத்து செல்லுங்கள்” என கட்டளை இட்டாள்.
அவ்வளவு தான் அங்கு இருந்த மற்ற எல்லா மன்னர்களும் , விட்டால் போதும் என தங்கள் நாட்டிற்கு பறந்து விட்டனர்.
“என்ன இவள் என் சொல் பேச்சையே கேட்க மாட்டேன்கிறாள்,இப்படியே போனால் இவளை யார் தான் மணம் முடித்து அடக்குவார்கள்” என மகேந்திரவர்மன் மனம் நொந்தார்.
அடுத்த நாளே இன்னொரு துர்செய்தியும் வந்து சேர்ந்தது.மாயமலையின் இளவரசன் தேவதத்தன் படை எடுத்து வருகிறான் என.
இந்த செய்தியை கேட்டு மகேந்திரவர்மன் இன்னும் மனம் நொந்தார்.
ஆனால் மாறாக மதிவதனி மகிழ்ச்சியில் துள்ளி குதித்தாள்.
எந்த நாட்டை வெற்றி கொள்ள வேண்டும் என்று நினைத்தாளோ, அவர்களே தானாக படை எடுத்து வருகிறார்கள்.
மகேந்திரவர்மன் “தளபதி அவர்கள் படைவலிமை நமது படைவலிமையை விட பெரிது.மேலும் மாய மலையை சேர்ந்தவர்கள் யாரும் எந்த போர் விதிமுறையை கடை பிடிப்பது இல்லை.என்ன செய்யலாம்?” என்று கேட்டார்.
மன்னா,எனக்கும் அது தான் கவலையாக இருக்கிறது.முறையாக போர் செய்பவனிடம் போர் செய்யலாம்.ஆனால் மாயமலையினர் மூடர்கள்.கண்ணை மூடி கொண்டு,யுத்த விதி எதையும் கடைப்பிடிக்காமல் மூர்க்கத்தனமாக போர் செய்வர்.எப்படி இவர்களிடம் போர் செய்வதன்றே தெரியவில்லை..
மதிவதனி,”விதிகளை பின்பற்றி போர் செய்பவனிடம் முறையாக போர் செய்யலாம்.ஆனால் அவர்கள் பாணியிலேயே நாமும் போர் செய்தால் என்ன” என்று கேட்டாள்.
“நீ என்ன சொல்ல வருகிறாய் மகளே”
விளக்க நேரமில்லை தந்தையே,படையை மட்டும் என்னுடன் அனுப்புங்கள்.நான் தலைமையேற்று வெற்றி வாகை சூடி வருகிறேன்..
வேண்டாம் மகளே,உனக்கு மாய மலையின் போர் வீரர்களை பற்றி உனக்கு தெரியாது.அவர்கள் அரக்கர்கள்.நான் சொல்வதை கேள்.இம்முறை நானே நேரில் போருக்கு செல்கிறேன்..
ஆனால் மதிவதனி ஒப்புக்கொள்ளவில்லை.மாறாக போராடி தன் தந்தையை சம்மதிக்க வைத்து விட்டாள்.
தளபதியிடம் தன் திட்டங்களை எப்படி விரிவாக செயல்படுத்த வேண்டும் என கூறினாள்.

Wow excellent keep writing
Wonderful story
Super
Continue pannu bro veri thanama mathivathaniya okkurathu mari eluthu
Classic story writing and detailing. Continue your writing. Currently I am reading your 13 th episode.