“சரி போறேன்.”
…….
அனு அவனிடம் “என்ன ஆச்சு.?”என்று கேட்க..
அவன் சோகமான முகத்துடன்,”நான் உடனே டெல்லி போகணுமாம்..”
“டேய் இன்னிக்கு நமக்கு முதல் இரவுடா,அதை சொன்னீயா..”
“நான் எடுத்து சொன்னேன் அனு,ஆனா அவங்க இது முக்கியமான விசயம் கண்டிப்பாக போக வேண்டும் என்று சொல்லிட்டாங்க..”
“அப்படி என்ன முக்கியமான விசயம் வினய்…?”
“வெளியுறவுத்துறை அமைச்சர் ஒரு பதினைந்து நாள் டூர் ரஷ்யா,அமெரிக்கா,இங்கிலாந்து போறாராம்.ரொம்ப முக்கியமான விசயம் போல..இப்போ வெளிநாட்டில் உள்ள தீவிரவாதிகள் ஒவ்வொருவராக கொல்லப்படுவது உனக்கு தெரியும் தானே..”
“ஆமாம்..அதுக்கும் நீ போறதுக்கும் என்ன சம்பந்தம்..?
“என்ன அனு நீயே இப்படி கேட்கிற….அந்த தீவிரவாத குழுக்கள் நம்ம வெளியுறவுத்துறை அமைச்சர் வெளிநாட்டில் உள்ள தலைவர்களிடம் பேசும் போது ரகசியங்களை ஒட்டு கேட்க சைபர் அட்டாக் செய்ய திட்டம் போட்டு உள்ளார்கள்.அதை தடுக்க ஹேக்கர் ஆன என்னை எப்பவும் அவருடன் இருக்க சொல்லி உள்ளார்கள்.அதுவும் இது இன்னொருவர் போக வேண்டிய வேலை.அந்த ஆளுக்கு இப்போ ஹார்ட் அட்டாக்காம்.அதனால் இந்த வேலை என் தலையில் வந்து விடியுது..
சரி எப்போ டெல்லியில் இருக்கணும்..?
இரவு 9 மணிக்கு…
“டேய் இப்போ மணி 4.30…”
“ஆமா 6 மணிக்கு பிளைட்..நான் குளிச்சிட்டு வரேன்.கொஞ்சம் 15 நாளுக்கு தேவையான துணிமணி கொஞ்சம் பேக் பண்ணு அனு…நேரமில்லை..”
“அனுவுக்கு bye…. சொல்லிவிட்டு பறந்தான்..”
போகும் போது அறிவிடம் ” நான் பதினைந்து நாள் ஊருக்கு போறேன். மேடம் உதவி எதுனா கேட்டா போய் செய்”என்று வினய் சொல்லிவிட்டு காரை ஓட்ட,அறிவுக்கு ஒன்றுமே புரியவில்லை.
