அசுரன் Part 6 34

“அய்யோ என்னை மன்னித்து விடு காத்தவராயா,எனக்கு ஒரு வரம் கொடுப்பதாக சொன்னீர்கள்..அதை இப்பொழுது தர முடியுமா?”

“ம்…என்ன வரம் வேண்டும் கேள்….”

ராம கோபாலன் தன் மொபைலில் உள்ள ஒரு ஃபோட்டோவை காண்பித்து”காத்தவராயா இந்த பெண்ணை நீ கொல்ல வேண்டும்.இவள் எங்கள் சாம்ராஜ்ஜியத்தை அழித்து விட்டாள்.இதுவே நான் கேட்கும் வரம்..”

அந்த போட்டோவில் உள்ள பெண்ணை பார்த்து ஆச்சரியத்தில் காத்தவராயன் கண்கள் அகல விரிந்தன..அவனுக்குள் மோகம் பீறிட்டு கிளம்பியது.அவன் புகை வடிவத்தில் இருந்ததால் ராம கோபாலனுக்கு ஒன்றும் தெரியவில்லை..

“சரி,இவள் எங்கே இருக்கிறாள்?”

“இதே ஊரில் தான் இருக்கிறாள் காத்தவராயா….நான் இவள் இருக்கும் இடத்தில் கொண்டு போய் விடட்டுமா..!”

“வேண்டாம்,உன் கையில் உள்ள பெட்டியில் இருந்து அவளை தொடர்பு கொள்.அது காற்றின் வழியே தானே செல்கிறது.அதை வைத்து நான் அவள் இருப்பிடத்தை தெரிந்து கொள்வேன்..”

ராம கோபாலன் அவளது நம்பருக்கு டயல் செய்தான்..உடனே காத்தவராயன் காற்றின் வழியே பயணம் செய்து அவள் இருக்கும் இடத்தை தெரிந்து கொண்டு உடனே மீண்டும் ராம கோபாலனிடம் வந்தான்.

“ம்…அவள் இருக்குமிடம் தெரிந்து விட்டது.நான் சென்று என் வேலையை ஆரம்பிக்கிறேன்..”

“என்ன காத்தவராயா,அதுக்குள்ள போய்ட்டு வந்துட்டீயா….”

“ம்,நான் காற்று…..வேற்று கிரகத்திற்கே எங்களால் நொடி பொழுதில் செல்ல முடியும்..ஆனால் ..”

“என்ன ஆனால்…?காத்தவராயா….”

“என்ன தான் வேகமாக என்னால் பயணிக்க முடிந்தாலும் ஒரு நபர் இருப்பிடத்தை மட்டும் என்னால் கண்டுபிடிக்கவே முடியவில்லை.அவள் பெயர் மதிவதனி…அவள் கண்டிப்பாக இந்த உலகத்தில் தான் இருக்கிறாள்.அவள் மூலம் தான் சாப விமோசனம் அடைய முடியும்….”

“அப்போ நீ இந்த பெண் அனுவின் இருப்பிடத்தை கண்டறிந்த மாதிரி கண்டுபிடிக்க வேண்டியது தானே…”

“அதற்கு நீ இப்போ இந்த பெண்ணை தொடர்பு கொண்ட மாதிரி மதிவதனியைப் நீ தொடர்பு கொண்டால் என்னால் கண்டுபிடிக்க முடியும்.அதுபோல் நீ மதிவதனியை தொடர்பு கொள்ள முடியுமா.?”

“சரி தான்.. மதிவதனி யாரு..?அவ எப்படி இருப்பா?அவ உண்மையிலேயே பிறந்து இருக்காளா?என்றே தெரியாது…அவளுக்கு நான் எப்படி ஃபோன் செய்ய முடியும்?”

“அதற்கு தான் காற்றாக அவளை தேடி சுற்றி கொண்டு இருக்கிறேன்..ஒருமுறையாவது அவளை நான் நேரில் சந்தித்து விட்டால் போதும்.. அதற்கு பிறகு அவள் இந்த பூமியில் எங்கு சென்றாலும் அவளின் உடலில் இருந்து வெளியே வரும் ஆரோ கதிர்களை வைத்து பின்பு எளிதாக அவளை கண்டுபிடித்து அடைந்து விடுவேன்..அதுவரை இப்போ தேடி கொண்டு இருப்பது மாதிரி தேட வேண்டியது தான்…”

“சரி காத்தவராயா,எனக்கு இன்னொரு உதவி செய்ய முடியுமா?”

“என்ன?”

“எனக்காக இன்னொரு கொலையை செய்ய முடியுமா?”

காத்தவராயன் சினத்துடன் “முடியாது..முதலில் நான் உனக்கு கொடுத்த வரத்தையே கொஞ்சம் தாமதமாக தான் நிறைவேற்ற போகிறேன்..நீ காட்டிய பெண்ணை ஆசை தீர அனுபவித்த பிறகே நான் அவளை கொல்வேன்.நீ எதிர்பார்ப்பது இப்பொழுது நடக்காது..இன்னொரு கொலையை நான் செய்ய மாட்டேன்.உனக்கான நேரமும் முடிந்து விட்டது.என்னை மீண்டும் அழைக்காதே..!நான் வர மாட்டேன்”என்று மறைந்து விட்டான்..

“போச்சா….!இப்போ ஆராதனாவை நான் தான் போட்டு தள்ளனுமா?”ராம கோபாலன் இண்டர்காமில் ஆராதனாவை தன் கேபினுக்கு வர சொன்னான்.

ஆராதனா உள்ளே வந்தவுடன் அவளை பார்த்து,”வா ஆராதனா,நேற்று இரவு கட்டிலில் என்னோட பட்டைய கிளப்பிட்ட..?really you were superb in bed,இன்னிக்கு இரவு மீண்டும் அதே போல் தொடரலாமா…!

ஆராதனா அவனிடம் நக்கலாக “அதுக்கு நீங்க உயிரோடு இருக்கணுமே சார்…!

What do you mean…?.ராமகோபாலன் அதிர்ச்சி ஆக

உங்களுக்கு விசயம் தெரியாதா சார்?”

ஏன், என்ன விசயம்?

உங்க ஆருயிர் நண்பர்,அமைச்சர் மனுநீதி வீட்டில் அமலாக்க துறை ரெய்டாம்.900 கோடி வரை பறிமுதல் பண்ணி இருக்காங்க…