அசுரன் Part 6 34

“தெரியும் ,அதை நீ தானே போட்டு கொடுத்தே…”

“எப்படியோ கண்டு பிடிச்சுட்டீங்க..உங்களுக்கு தெரியாத ஒரு விசயம் சொல்லட்டுமா?”

“என்ன அது?”

“நான் அமலாக்கத்துறைக்கு ஃபோன் பண்ணது ஒருபுறம் இருக்கட்டும்..அதை எதில் இருந்து பண்ணேன் தெரியுமா?”

“எதில் இருந்து ?”ராம கோபாலன் பதட்டம் ஆனான்..

“இப்போ உன் ஃபோன் மணி அடிக்கும் பாரு,”அவள் சொல்லும் போதே ராம கோபாலன் ஃபோன் அடித்தது.

” அமைச்சர் மனு நீதி தானே ?”ஆராதனா கேட்டாள்..

“ஆமாம்”என மௌனமாக தலை ஆட்டினான்.

“ம்,எடுத்து பேசு”ஆராதனா சிரிப்புடன் சொன்னாள்

“ஹலோ”

“டேய் ராம கோபாலா,கூட இருந்தே குழியை பறிச்சிட்டீயே உன்னை சும்மா விட மாட்டேன்டா”

“அய்யோ தலைவரே..!நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் ஒன்னும் இல்லை.நடந்ததே வேற”

“டேய் டேய் .. நீ தான் ஃபோன் பண்ணே என்பதற்கு ஆதாரம் என்கிட்ட வந்துடுச்சு.. இன்னும் நடிக்காதே..இப்போ என் ஆளுங்க இப்போ அங்கே உன்னை போட வருவாங்க….”

“அய்யோ தலைவரே ஒரு நிமிஷம் நான் சொல்வதை கேளுங்க…”

அவன் ஃபோனில் பேசி கொண்டு இருக்கும் போது ஆராதனா உடனே “சார் நேற்று நீங்க ரெடி பண்ண சொன்னீங்களே,அமைச்சர் மனுநீதி ஊழலின் மறுபக்கம் அந்த ஆர்டிக்கிள் தயாரா இருக்குது.நீங்க பார்த்து ஓகே பண்ணா உடனே பிரசுரித்து விடலாம்”என்று சும்மாவே சொன்னாள்.

அதை மறுமுனையில் கேட்ட மனுநீதி “அடப்பாவி ராமகோபாலா என்னை சாய்க்க,எதிர்க்கட்சி கிட்ட எவ்வளவு காசு வாங்கினே…”

“அதில்லை தலைவரே…”

“நீ எதுவும் பேசாதே,இன்னிக்கு உன்னை போட்டு தள்ளிட்டு தான் மறுவேலை.. “என்று சொல்லிவிட்டு மனுநீதி போனை கட் செய்தான்..

“ஏய் உன்னை “ராம கோபாலன் அவள் கழுத்தை நெரித்து கொல்ல வந்தான்.

ஆராதனா அதை தடுத்து”டேய் பேரிக்காய் தலையா.. சீக்கிரம் இங்கே இருந்து எஸ்கேப் ஆகுடா..அங்கே எமன் உன்னை கொல்ல ஜெட் வேகத்தில் வந்துக்கிட்டு இருக்கான்..”