“அப்போ நீ போலையா..அப்படி என்ன தான் வேலை செய்ஞ்சு கிழிச்சே….”
“நீ தானம்மா… பந்திக்கு உணவு ரெடி ஆகுதா என்று பார்க்க சொன்னே…”என்று அவர் பரிதாபமாக சொன்னார்.
“சரி ரெடி ஆய்டுச்சா…”
“அதுக்குள்ள தான் ஐயருக்கு பூஜை சாமான் எல்லாம் எடுத்து கொடுக்க சொன்னே..”
“சரி அதையாவது எடுத்து கொடுத்தீயா….”
“அப்ப தானம்மா நீ வந்து பால் பாக்கெட் வாங்கிட்டு வர சொன்னே…”
“அப்ப எந்த வேலையும் உருப்படியா செய்யல..கை மட்டும் தான் சும்மா இப்படி அப்படி ஆடுது..”என அவள் லாரி டயர் போன்ற இடுப்பை ஆட்டி சொன்னாள்.
அதற்குள் அறிவு,பால் பாக்கெட் வாங்கிட்டு வந்தான்..
“போ,பால் பாக்கெட் வாங்கிட்டு போய் காபியாவது போட்டு கொடு போ..”என அவன் மனைவி விரட்ட..
பூஜைக்கு வந்த ஐயர்,குண்டலகேசி மற்றும் அவர் மனைவியை பார்த்து..”ரெண்டு பேர் வந்து மனையில் உட்காருங்க..”என்று கூற..
அனு, அறிவிடம் பால் பாக்கெட் வாங்கி கொண்டு “ஆன்ட்டி நீங்க ரெண்டு பேரும் உட்காருங்க..நான் காஃப்பி போட்டு கொடுக்கிறேன்…”
“ரொம்ப தேங்க்ஸ் அனு..”அவர் மனைவி சொன்னார்..
அனு பால் பாக்கெட்டை வாங்கும் பொழுது அறிவின் விரலை தொட ஒரு இளஞ்சூட்டை உணர்ந்தான்.விரலால் லேசாக தொட்டதிற்கே அவன் மேனி சிலிர்த்தது…
உள்ளே சென்று அனு காஃபி போட சர்க்கரை எங்கு என்று தேடிய பொழுது அது மேல் அடுக்கில் இருந்தது..
“யார் இது இவ்வளவு உயரத்தில் வைத்து இருப்பது…” என ஒரு நிமிடம் அறிவை கூப்பிட்டாள்..
“அறிவு கொஞ்சம் நாற்காலியை பிடிச்சிக்கோ,நான் கொஞ்சம் சர்க்கரை எடுக்கனும்.”
அறிவு நாற்காலியை பிடித்து கொள்ள,அனு மேலே ஏறி எட்டி எடுத்தாள்..
ஒரே நிமிடம் தான்..அவள் சேலை விலகி அழகான அவள் இடுப்பு அவன் கண்ணுக்கு எதிராக அதுவும் மிக அருகே தெரிந்தது..அவள் குளித்து விட்டு வாசம் ஆளை மயக்கியது..அறிவு மந்திரித்து விட்ட கோழி போல் ஆகி விட்டான்..அனு கீழே இறங்கி காஃபி போட,அறிவு இன்னும் நாற்காலியை பிடித்து கொண்டு இருந்தான்.
ஐந்து நிமிடத்திற்கு பின்,
“அறிவு இன்னும் ஏன் நாற்காலியை பிடிச்சிட்டு இருக்கே,நான் காபியே போட்டு முடிச்சாச்சு.இந்தா போய் எல்லாருக்கும் போய் கொடு என்று சொல்லவே தான் அவன் நனவுக்கு வந்தான்… ”
அசடு வழிய அவள் கைகளில் இருந்து வாங்கி கொண்டு எல்லோருக்கும் கொடுத்தான்..அவ்வப்போது அவள் மேனியின் அங்கங்களை ஓரக்கண்ணால் ரசிக்க தவறவில்லை..
பசு மாட்டை உள்ளே கொண்டு வாங்க…ஐயர் சொல்ல..
