ஆனால் அவள் துண்டு மட்டும் தானாக காற்றில் பறந்து பாத்ரூம் கதவு அருகே சென்றது..அவள் பாத்ரூம் கதவை காத்தவராயன் ஆவி தட்ட,அனு கதவை திறந்து கை நீட்டி துண்டை வாங்கி கொண்டாள்..
அனு குளித்து முடித்து விட்டு புத்தம் புது மலர் போல வெளியே வந்தாள்.
“துண்டை எடுத்து கொடுத்ததிற்கு தேங்க்ஸ்டா”
“நான் எப்போடி உனக்கு துண்டை எடுத்து கொடுத்தேன்…”வினய் தூக்கம் கலைந்து கேட்க..
“காலையில் சும்மா விளையாடாதேடா,எனக்கு நேரமாச்சு”என கிளம்பினாள்..
“என்ன இவ காலையில் உளறிட்டு போறா” என்று அவன் கும்பகர்ண சேவையை தொடர்ந்தான்….
கிரகப்பிரவேச வீடு அமர்க்களப்பட்டு கொண்டு இருந்தது…
குண்டலகேசி பார்ப்பதற்கு ஒல்லியாக குச்சி போல இருந்தார்.. கையாலே ஒடித்து விடலாம் போல் இருந்தார்..”இவரை பார்த்தா அந்த ஆபீஸ் அப்படி பயப்படுது.. “என அனுவுக்கே சிரிப்பு வந்தது…
பக்கத்தில் இருந்த செக்ரட்டரியிடம் அனு”என்ன சார் இவரை பார்த்தா ஆபிஸே பயப்படுது என்று சொன்னீங்க…பார்த்தா அப்படி ஒன்னும் தெரியலயே.இவர் தான் மற்றவர்களுக்கு பயப்படுவார் போல் இருக்கு”
“அவர் வீட்டிலே தான் எலி,வெளியே புலி..கொஞ்சம் அவர் மனைவியை பாரு அனு..”
அவர் மனைவியோ லாரி டயர் போல குண்டாக இருந்தார்..
“சைக்கிள் டயருக்கும்,லாரி டயருக்கும் செட்டே ஆகலயே சார்..”என சிரித்தாள்..
அவர் மனைவிக்கு ரொம்பவே பயப்படுவாரு.இன்னொரு விசயத்திற்கும் அவர் ரொம்பவே பயப்படுவார்.அது பேய் தான்.இரவு 8 மணிக்கு மேலே மனுஷன் வெளியே வரவே மாட்டாரு…
அனுவுக்கு அடக்க முடியாமல் சிரிப்பு வந்தது..
கொஞ்சம் அங்கே பாரும்மா,என மாட்டி வைக்கப்பட்ட குண்டலகேசியின் பழைய கல்யாண போட்டோவை செக்ரட்டரி காண்பித்தார்..அதில் குண்டலகேசி சற்று பருமனாகவும்,அவர் மனைவி ஒல்லியாகவும் இருந்தார்..
“இப்போ தெரியுதா அனு, எங்கே இருந்து எங்கே பரிமாற்றம் நடந்து இருக்குன்னு…”
“நல்லாவே தெரியுது சார்…”என அனு தனக்குள் சிரித்து கொண்டாள்.
அவர் மனைவி விரட்டி விரட்டி குண்டலகேசியைப் வேலை வாங்கி கொண்டு இருந்தாள்..
“யோவ் என்ன பண்ணிட்டு இருக்கே,வந்து இருக்கிற.. விருந்தாளிகளுக்கு காஃபி போட்டு கொடு…”
இல்லம்மா,இந்த அறிவு பையனை பால் வாங்க அனுப்பிச்சு இருக்கேன்..
