வெளியே காத்து இருந்த மாட்டுக்காரர் பசு மாட்டை உள்ளே இழுத்து வரும் பொழுது” பசு மாடு வாசல்படி அருகே வந்தவுடன் நின்று அனுவையே உற்று பார்த்தது.
மாட்டுகாரர் உள்ளே இழுக்க அது முரண்டு பிடித்தது..பின்பு அவனை முட்டி விட்டு வந்த வழியே ஓட்டம் பிடித்தது..எல்லோரும் அதிர்ச்சியில் உறைந்தார்கள்.
வழக்கம் போல ஒருவர்,அய்யயோ இங்கே ஏதோ துஷ்ட சக்தி இருக்குது போல என்று குரல் எழுப்ப..குண்டலகேசிக்கு கை கால் உதறல் எடுக்க தொடங்கி விட்டது…
அதற்கு செக்ரட்டரி “யோவ் சும்மா இருய்யா..இதுவரை இங்கே எட்டு வீட்டில் கிரக பிரவேசம் ஆகி இருக்கு.இதோ எதிர்த்த வீடு அனு வீட்டில் கூட போன வாரம் தான் கிரகப்பிரவேசம் நடந்துச்சு..அங்கேயேயும் உள்ளே பசு மாடு கொண்டு வந்தாங்க..எந்த அசம்பாவிதம் நடக்கல..இந்த மாடு பயந்த மாடா இருந்து இருக்கும்.இத்தனை பேரை ஒண்ணா பார்த்ததில் பயந்து ஓடி போய் இருக்கும்..”
“ஐயர் தீபக்கொலுசு கேட்க,குண்டலகேசி “ஐயோ அது எந்த மூட்டையில் இருக்குது என்றே தெரியலையே” என்று புலம்பினான்..
அனு உடனே,” நான் போய் என் வீட்டில் எடுத்திட்டு வரேன்” என்று வெளியே சென்றாள்.
அவள் சென்ற உடன்,மாட்டுகாரர் ஒடிப்போன பசுவை அழைத்து வர,அது இப்போ எந்த முரண்டு பிடிக்காமல் அமைதியாக உள்ளே வந்து வெளியே சென்றது…
“பாரத்தீயா…ஒன்னும் இல்ல..”என செக்ரட்டரி கூறினார்.
பசு உள்ளே வந்த பிறகு தான் குண்டலகேசியின் உதறல் நின்றது.
பசு வெளியே சென்ற சிறிது நேரத்தில் அனு உள்ளே வந்து தீபக்கொலுசு கொடுத்தாள்..
அனு உள்ளே இருந்ததால் பசு உள்ளே வரவில்லை.அனு வெளியே சென்ற பிறகு தான் பசு உள்ளே வந்தது.காரணம்…..
கிரகப்பிரவேசம் நன்றாக நடந்து முடிந்தது..
மாயமலை காட்டுக்குள்,ஒரு பழுத்த பழம் போல தவத்தில் இருந்த முனிவர் கண் விழித்தார்.அவரை பார்க்கும் பொழுதே அவருடைய வயது கண்டிப்பாக 100 க்கும் மேல் என கட்டியம் கூறியது..
அவரின் சீடன் “குருநாதா…தாங்கள் கண்விழிக்கவே காத்து கிடந்தோம்.எதிர்பார்க்காத ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்து விட்டது.கட்டி வைக்கப்பட்டு இருந்த காத்தவராயன் ஆவி இவ்வுலகில் மீண்டும் வந்து விட்டது “என அந்த சீடன் கூற..
“தெரியும் மாறா,அவன் ஒரு வேட்டையையும் நடத்தி முடித்து விட்டான்..இன்னொரு வேட்டைக்கு தயாராகி கொண்டு இருக்கிறான்..”
“அப்போ அவனை நீங்கள் உடனே தடுங்கள்..”
“என்னால் அது முடியாது மாறா
.அப்படி நான் தடுத்தால் அது வீண் பிரச்சினைகளை கொண்டு வரும்.மேலும் அந்த பெண்கள் அவனால் கற்பு இழக்க வேண்டியது அவசியம்.அப்போ தான் அவனை நிரந்தரமாக அழிக்க முடியும்.”
“என்ன குருநாதா நீங்களே இப்படி சொல்றீங்க. அப்போ அவன் எல்லோர் உடலில் பிரவேசித்து ஏராளமான பெண்கள் கற்பு இழப்பார்களே…”
“அது தான் இல்லை மாறா..அவனால் எல்லோர் உடலில் அவனால் பிரவேசிக்க முடியாது..அவனை கட்டுப்படுத்த என்னுடைய குருநாதர் ஒரு சாபம் கொடுத்து உள்ளார்.அவன் எந்த உடலில் பிரவேசிக்க வேண்டுமோ,அந்த உடலுக்கு சொந்தக்காரன் அனுமதி கொடுத்தால் மட்டுமே அவன் உள்ளே புக முடியும்.மேலும் விதியின் விளையாட்டும் இதில் உள்ளது..”
“அது என்ன குருநாதா..!”
“அவனிடம் யாரெல்லாம் கற்பு இழக்கிறார்களோ…அவர்களால் தான் இறுதியில் காத்தவராயன் மரணம் நிகழ போகிறது..அவனுக்கே தெரியாமல் அவனின் சக்தி,உடலுறவு கொள்ளும் போது அவர்களுக்கு பரிமாற்றம் நடக்க போகிறது.அதுவும் அந்த பெண்கள் கன்னி பெண்களாக இருக்க வேண்டும்.அப்பொழுது தான் காத்தவராயன் சக்தி அவர்களுக்குள் முழுமையாக செல்லும்.அதில் ஒரு பெண்ணுக்கு ஏற்கனவே அவன் சக்தியின் ஒரு பகுதி சென்றுவிட்டது.மதிவதனியுடன் சேர்த்து மொத்தம் நாலு பேருக்கு அவன் சக்தி உள்ளே செல்ல வேண்டும்.அப்பொழுது தான் மாயமலையில் அவனுடன் இறுதி யுத்தம் நடக்கும் போது அவனிடம் பெறப்பட்ட சக்தியே அவனை அழிக்க அவர்களுக்கு உதவ போகிறது..
“எப்படி குருநாதா..?”
“காத்தவராயன் தனக்கு மகாளய அமாவாசை அன்று தான் மரணம் ஏற்பட வேண்டும் என புத்திசாலித்தனமாக வரம் கேட்டு வாங்கி உள்ளான்.. அன்று தெய்வ சக்திகள் எதுவும் வேலை செய்யாது.கெட்ட சக்திகள் மட்டுமே வேலை செய்யும்.கெட்ட சக்திகளால் அவனை ஒன்றும் செய்ய முடியாது என அவனுக்கே தெரியும்..அதனால் தான் அவன் கெட்ட சக்தியை கொண்டே அவனை கொல்ல விதி விளையாடி கொண்டு இருக்கிறது..மேலும் அவனால் கெடுக்கப்பட போகும் நாலு பெண்களுக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது..
என்ன குருநாதா அது.?
