வயசு இதுக்கு முக்கியமில்லை பாகம் பதினொன்று 85

இல்ல, வெளிய என்னமோ, நான் பயங்கரக் கோவக்காரன், முரடன்னு பேரு. உன்னை எல்லாரும், ரொம்ப சாஃப்ட்டு, மென்மையான மனசு, தங்கமான பொண்ணுன்னு பேசுறாங்க!

ஆனா, இங்க என்னான்னா, எல்லாத் தப்பும் என்னாலங்கிற, என்னைப் போட்டு அடிக்கிற? ஏன் இத்தனை நாளா செய்யலைன்னு போட்டு அதட்டுற! ஒரு சக்சஸ்ஃபுல் பிஸ்னஸ்மேனைப் பாத்து சின்னப்பையன்னு ஓட்டுற!

இந்த உலகம் உண்மையை என்னிக்கும் நம்பறதே இல்லை பாத்தியா?!

அவனோடு இணைந்து சிரித்தாலும், அவனது அணைப்புக்குள் இருக்கும் போது தெரிந்தது, இதை விட உலகில் மகிழ்ச்சி எதுவும் இல்லை என்று!

அப்படியே சிறிது நேரம் இருந்தோம். அவன் அணைத்து இருந்தாலும், அதற்கு மேல் அவன் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

நான் உள்ளுக்குள் அவனைத் திட்டிக் கொண்டிருந்தேன். லூசு, லூசு… அதான் என்னை எடுத்துக்கோடான்னு சொல்லிட்டேன்ல? பீரியட்சும் இல்லைன்னுட்டேன். இன்னும் ஏன் சும்மா இருக்கான்? நான் இன்னும் வெட்கத்தை விட்டு என்னத்தைச் சொல்லுறது?! மடையன்! அன்னிக்கு மாதிரியே எடுத்துக்க வேண்டியதுதானே?

ஆனால், அவன் என்னைச் சீண்டுவதற்க்காகத்தான் அப்படி இருக்கிறான் என்று புரியவில்லை.

அவன் இன்னமும் அமைதியாகவே இருந்ததால், நான் வெட்கத்துடன் பேசினேன்.

ம… மதன்

ம்ம்…

எ… எனக்கு பீரியட்ஸ்லாம் இல்லை!

ம்.. அதான் சொன்னியே!

எனக்கு எரிச்சல் வந்தது. இன்னமும் புரிஞ்சிக்க மாட்டேங்குறானே?!

என் எரிச்சலை அதிகப்படுத்தும் வகையில் இன்னொன்று செய்தான்.

சரி, உன் ஃபிரண்டு வேற, என்ன நடந்துச்சுன்னு தெரிஞ்சிக்க வெயிட் பண்ணிட்டிருப்பா. நான் அவகிட்ட ஃபோன் பண்ணி, எல்லாத்தையும் விவரமா சொல்றேன். ஓகே!

எனக்கு கடும் கோபம் வந்தது. அதே கோபத்தில் கடுப்புடன் சொன்னேன்.

ஒண்ணும் வேணாம். அவ ஏற்கனவே இதை எதிர்பாத்திருப்பா. இந்த ட்ரிப் முடியுறதுக்குள்ள நாம் சேந்துடுவோம்னு, இன்னிக்கு மதியானம், நான் பேசுறப்பவே அவளுக்கு சொல்லிட்டேன். பத்தாததுக்கு நீயும் சாயங்காலம் வேற பேசியிருக்க. அதுனால அவளுக்கு தெரியும். நீ, ஃபோன் பண்ணனும்னு அவசியம் இல்லை.

இருந்தாலும், நாம சொல்லனுமில்ல?

கடுப்பின் உச்சத்தில், ப்ப்ச்.. அதெல்லாம் ஒண்ணும் வேணாம், நீ ஃபோன் பண்ணாம இருந்தாலே, நாம, இப்ப, இங்க சந்தோஷமா இருக்கோம், அதான் ஃபோன் கூட பண்ணலைன்னு அவ புரிஞ்சிக்குவா!

இதுக்கு மேல சொல்ல முடியாதுடா இடியட்! என்று உள்ளுக்குள் திட்டினேன்.

ஓ… எதுவும் சொல்லாம, செய்யாம இருந்தாலே பாசிடிவ்னு அர்த்தமா?

ஆமா! அப்டித்தான் என்று கடுப்பில் சொன்னேன்.

பின், மெல்ல காதருகே குனிந்து கேட்டான்!

அப்ப, முத தடவை, உன்னைத் தொட்டப்ப, எதுவும் சொல்லாம, செய்யாம இருந்தியே? அதுவும் உன்னோட பாசிடிவ் சிக்னல்னு நான் எடுத்துக்கலாமா?? ம்ம்?